Wednesday, June 17, 2009

இந்த வாரம்

தீஷு பள்ளிக்குச் செல்வதால் எங்களுக்கு ஆக்டிவிட்டீஸுக்கு அதிக நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கின்ற நேரத்தின் தன்மையைப் பொருத்து நாங்கள் செய்கிறோம். வாசிப்பது, எழுதுவது அல்லது கலரிங் தினமும் செய்கிறோம்.

தன் பெயரை எந்த வித உதவியும் இன்றி எழுதுகிறாள். அவள் கிறுக்கியிருந்த தாளில் தன் பெயரை சரியாக எழுதியிருந்தாள். நான் சொல்லும் இரண்டு இலக்க எண்களை தீஷு நோட்டில் எழுதுகிறாள். அதனால் மெக்னெட்டிக் எழுத்தில் இப்பொழுது 3 இலக்க எண்கள் பயில்கிறோம். 100, 200 போன்று பூஜ்ஜிய எண்களைச் சொல்கிறாள். ஆனால் 785 போன்ற சாதாரண எண்களில் தப்புகள் அதிகமாக இருக்கின்றன.

வாசிக்கப் பழக, மெக்னெட்டிக் எழுத்துகளில் இரண்டு எழுத்து வார்த்தைகள் செய்து பொனிட்டிக்ஸ் முறையில் முயற்சிக்கிறோம். IN, IF, IS, OF, ON, TO, NO, SO, GO போன்ற வார்த்தைகள் வாசிக்க வருகின்றன. http://www.learninga-z.com/யில் வாசிப்பதற்கு எளிதான புத்தகங்களை எடுத்து, புத்தக வடிவில் செய்து அவளுக்கு வாசிக்கக் கொடுத்துள்ளேன். உதாரணத்திற்கு ஒரு பக்கத்தில் பெரிய பூனை படம் போட்டு "The cat" என்று எழுதியிருக்கிறது. எல்லா பக்கத்திலும் The வருவதால் சரியாக சொல்கிறாள். படத்தைப் பார்த்து cat என்று சொல்கிறாள். இம்மாதிரி புத்தகங்களினால் பெரிதாக வாசிக்கப் பழக முடியாது என்றாலும் அவளுக்குத் தன்னால் வாசிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை அவைக் கொடுக்கின்றன.

அனைத்து continents பற்றிய பாடல் ஒன்றைப் பழைய பள்ளியில் கற்றுக் கொடுத்துள்ளனர். அதைப் பாடிக் கொண்டேயிருக்கிறாள். ஆகையால் World Map பஸிலை டவுன்லோடு செய்து கண்டங்களைச் சொல்லிக் காட்டினேன். பஸில் போல் வெட்டவில்லை. continents பார்த்து பெயர் சொல்லப் பழகியவுடன் வெட்டலாம் என்று இருக்கிறேன்.

ரைமிங் வார்த்தைகளில் ஆர்வம் வந்திருக்கிறது. பல் என்றால் சல், கல், டல் என்று பொருள் உள்ளதோ பொருள் அற்றதோ வார்த்தைகள் சொல்கிறாள். இதைப் பழக்குவதன் மூலம் ஆங்கில வார்த்தையின் முடியும் எழுத்தைக் கண்டுபிடிக்கப் பழக்கலாம் என்பது என் எண்ணம். முடியும் எழுத்தைக் கண்டுபிடிக்கத் தெரிந்தால், cvc (consonants,vowel,consonants) வார்த்தைகளில் இரண்டு consonantsயும் கண்டுபிடிக்க முடிவதால் vowelயை எளிதாக யூகிக்க முடியும். இது வார்த்தைகள் வாசிக்கப் பழகுவதற்கும், எழுதப் பழகுவதற்கும் உபயோகமாகயிருக்கும்.

6 comments:

  1. 'குங்குமம்' இதழில் திரு. உமாசங்கர் 'கணக்குப் பண்ணலாம்' என்று ஒரு தொடரை எழுதி வருகிறார். முடிந்தால் அதை படித்து வாருங்கள். பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  2. நன்றி பைத்தியக்காரன்.. படிக்கிறேன். நீங்கள் சொல்வது இனிக்குது கணக்கு என்று நினைக்கிறேன்..

    ReplyDelete
  3. //அவள் கிறுக்கியிருந்த தாளில் தன் பெயரை சரியாக எழுதியிருந்தாள். நான் சொல்லும் இரண்டு இலக்க எண்களை தீஷு நோட்டில் எழுதுகிறாள்.//

    அசத்தறீங்க நீங்களும் தீஷூவும்!

    சுட்டியைப் பகிர்ந்தமைக்கு நன்றி! நானும் பார்க்கிறேன்!

    (world map - வுடன் பஸில் கிடைக்கிறது தியானா!)

    ReplyDelete
  4. நன்றி முல்லை. வீக் எண்ட்ல கொஞ்சம் பிஸி. World map puzzle வாங்க போக முடியவில்லை. அதனால வாங்கிற வரைக்கும் இதை வச்சிக்கிடலாம் தான் டவுன்லோடு பண்ணியிருக்கேன் முல்லை.

    ReplyDelete
  5. ரைமிங் வார்த்தைகளில் ஆர்வம் வந்திருக்கிறது. பல் என்றால் சல், கல், டல் என்று பொருள் உள்ளதோ பொருள் அற்றதோ வார்த்தைகள் சொல்கிறாள்

    nice dheeshu.

    ReplyDelete
  6. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........இதெல்லாம் பண்ணிருந்தா நானும் கணக்குல புலியாகியிருப்பேன்னு எங்கம்மாக் கிட்ட வழக்கம்போல குத்தவுணர்ச்சிய வரவைக்க பாக்குறேன்:):):)

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost