Wednesday, May 27, 2009

Odd man out

ஒரு செருப்பைக் காலில் போட்டும் ஒன்றை போடாமலுமிருந்த தீஷு என்னிடம் வந்து இரண்டும் சேமா (Same) அல்லது டிபரண்டா (Different) என்றாள். சேம் என்றேன். இல்லை. ஒன்று போட்டிருக்கேன். இன்னொன்று போட வில்லை. அதனால் டிபரண்ட் என்றாள். சேம், டிபரண்ட் ஒரு நாள் பேச்சுவாக்கில் சொன்னது.

இதின் அடுத்த கட்டமாக odd man out செய்யலாம் என்று நினைத்தேன். மூன்று பொருட்கள் எடுத்துக் கொண்டு, அதில் இரண்டை ஒன்று போல் வைத்து விட்டு, ஒன்று வித்தியாசமாக வைக்க வேண்டும். எது வித்தியாசம் என்று சொல்ல வேண்டும். எளிதாக செய்வாள் என்று நினைத்தேன்.

Alphabets எடுத்துக் கொண்டோம். இரண்டு lower case ஒன்று upper case வைத்து, எது டிபரண்ட், எதற்கு என்று விளக்கினே. அவளுக்குப் புரியவில்லை. சிறிது நேர முயற்சிக்குப் பின் அவளுக்குப் புரியாததால், இரு ஒன்று போலுள்ள கிண்ணங்களும், இரு ஒன்று போலுள்ள ஸ்பூனும் எடுத்துக் கொண்டேன். இரண்டு ஸ்பூனையும் வைத்து சேம், டிபரண்ட் கேட்டேன். அதைச் சரியாக சொல்கிறாள். ஆனால் ஒரு கிண்ணத்தைச் சேர்த்தவுடன் புரியவில்லை. சில நேரங்களில் பதில் சரியாக சொன்னாலும், அது Guess work என்று எனக்குப் புரிந்தது. சில பழைய செயல்முறைகள் செய்தப்பின் அதைச் செய்ததால் எனக்கும் புதிய முறையில் விளக்க ஆர்வமிருக்கவில்லை. சிறிது நாட்கள் கழித்து முதல் ஆக்டிவிட்டியாக இதை முயற்சிக்க வேண்டும்.
Labels: Getting ready for Maths draft

4 comments:

  1. //ஒரு செருப்பைக் காலில் போட்டும் ஒன்றை போடாமலுமிருந்த தீஷு என்னிடம் வந்து இரண்டும் சேமா (Same) அல்லது டிபரண்டா (Different) என்றாள். சேம் என்றேன். இல்லை. ஒன்று போட்டிருக்கேன். இன்னொன்று போட வில்லை. அதனால் டிபரண்ட் என்றாள். சேம், டிபரண்ட் ஒரு நாள் பேச்சுவாக்கில் சொன்னது./

    :))))

    ReplyDelete
  2. \\ஒரு செருப்பைக் காலில் போட்டும் ஒன்றை போடாமலுமிருந்த தீஷு என்னிடம் வந்து இரண்டும் சேமா (Same) அல்லது டிபரண்டா (Different) என்றாள். சேம் என்றேன். இல்லை. ஒன்று போட்டிருக்கேன். இன்னொன்று போட வில்லை. அதனால் டிபரண்ட் என்றாள்.//
    கலக்கிட்டா தீஷு

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி சென்ஷி!!

    நன்றி முத்துலெட்சுமி

    ReplyDelete
  4. //. இல்லை. ஒன்று போட்டிருக்கேன். இன்னொன்று போட வில்லை. அதனால் டிபரண்ட் என்றாள்//

    :-)))

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost