தீஷுவும் எங்கள் பக்கத்து வீட்டு இரண்டு வயது குஜராத்தி குழந்தையும் ரொம்ப Friends. நாங்கள் தீஷுவிற்கு தமிழில் பேச மட்டுமே பழக்கினோம். தாய் மொழியை நன்றாக பழகி விட்டால், மத்த எல்லா மொழிகளும் பழகுவது எளிது என்பது எங்கள் கருத்து. இப்பொழுது ஸ்கூலுக்கு போவதால், ஆங்கிலம் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறாள். சில நேரங்களில் பதிலும் சொல்கிறாள். அந்த குட்டி குழந்தைக்கு குஜராத்தி மட்டும் புரியும்.
இவுங்க இரண்டு பேரும் விளையாடுவதே ஒரு அழகு. தீஷு அவளை கூப்பிடுவதற்கு முதலில் "வா" என்பாள். அடுத்து "Come" என்பாள். அதுவும் புரியவில்லை என்றால், கையை பிடித்து இழுப்பாள். அடுத்து ஒட ஆரம்பிப்பாள். அந்த குழந்தையும் புரிந்து கொண்டு அவள் பின்னால் ஓடும். இப்படி அவர்களுக்குள் communication ஒரு பிரச்சனை. ஆனாலும் விளையாடுவார்கள். தினமும் குறைந்தது 2-3 மணி நேரம் வரை வீட்டின் முன்னுள்ள புல்லில் விளையாண்டு கொண்டு இருப்பார்கள்.
குளிர் காலம் ஆரம்பித்து விட்டது. அக்டோபரில் ஒரு நாள் Snow கூட இருந்தது. இனி விளையாடுவதற்கு என்ன செய்ய போறாங்கனு தெரியல. எனக்கு வீட்டிற்குள் விளையாட அனுமதிப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால் அவுங்க வீட்டில allow பண்ண மாட்டாங்க. தீஷு ஏதாவது எடுப்பதற்கு வீட்டிற்குள் வந்தால், அந்த குழந்தையும் வரும். ஆனால் அடுத்த second, அவுங்க அப்பாவோ, nannyயோ வந்து கூட்டிக்கிட்டு போய் விடுவாங்க. இந்த Friendship இப்படியே பிரிந்து போய்விடும் என்பதில் எனக்கு வருத்தம்.
சின்ன வயசுல, நான் தினமும் மதுரையில் எங்கள் தெருவில் விளையாடும் வழக்கம் உண்டு. இன்னமும் சிலரின் நட்பு தொடர்கிறது. நமக்கு கிடைக்காத எத்தனையோ வசதிகள் இந்த குழந்தைகளுக்கு கிடைக்கிறது. ஆனால் சேர்ந்து விளையாட குழந்தைகள்? இந்தியாவிலும் கிட்ட தட்ட இதே நிலைமை தான் என்று நினைக்கிறேன். Apartment என்றால் ஓகே. தனி வீடு என்றால் கஷ்டம் தான். பாவம் குழந்தைகள்...
Games to play with 3 year old without anything
2 years ago
உண்மை
ReplyDeleteஎன் பெண்ணுக்கு சுத்தமாக தமிழ் பேச கற்றுக்கொடுத்தேன், அவள் தமிழ் மற்றவர்களை வியக்க வைக்கும்.
அவள் நட்புகள் தெலுங்கு,மலையாளம் இரண்டிலும் உண்டு. இப்போதும் அவள் சந்தோச தருணங்களில் தண்ணீர் கேட்பது முதல் சின்ன சின்ன விசாரிப்புகள் வரை தெலுங்குதான் முதலிடம் பிடிக்கும்.
/*இந்தியாவிலும் கிட்ட தட்ட இதே நிலைமை தான் என்று நினைக்கிறேன். Apartment என்றால் ஓகே. தனி வீடு என்றால் கஷ்டம் தான். பாவம் குழந்தைகள்...*/
ReplyDeleteஉண்மை தான். என் பெண் மதுரைக்குச் செல்ல காத்துக் கொண்டிருப்பாள், பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் விளையாட... இங்கு சென்னையில் ஒரு கோடை விடுமுறையில் பக்கத்து வீட்டுப் பெண் ஆவலுடன் இவளுடன் விளையாட வர, எனக்கு கிடைத்த புகார்.. "படிக்க விடாமல் விளையாட கூப்பிடுகிறார்கள்" என்று. பின் தொடருமா அந்த விளையாட்டு? :-(
:(:(:(
ReplyDeleteசூப்பர் பதிவு. எல்லாத்தை விடவும் கலக்கல் என்னன்னா, அந்த குழந்தைங்க விளையாட்டைப் பத்தி சொன்னதுதான். கிட்டத்தட்ட எட்டு வயசுவரைக்கும் இந்தக் குழந்தைகள் காத்தா மழையா ஓடிக்கிட்டிருக்கரதுதான் அவங்களை பொருத்தவரைக்கும் விளையாட்டு. செமக் காமடி பிளஸ் கலக்கலா இருக்கும் பாக்கறத்துக்கு :):):)
ReplyDeleteஅய்யோ பாவம் அந்த குஜராத்தி குழந்தை.தீஷு அம்மா மாதிரி அந்தக் குழந்தைக்கும் ஒரு அம்மா பிறந்திருக்கலாம்.
ReplyDeleteஆமாம் ரிதன்யா. ஆனா எல்லாரும் இங்கிலீஷ்ல பேச பழக்கியிருக்கலாம்ல என்று கேட்கிறார்கள்.
ReplyDeleteஆமாம் அமுதா. கஷ்டமா தான் இருக்கு.
அவங்க விளையாடுவதைப் பார்ப்பதற்கு நமக்கு சந்தோஷமாயிருக்கும்.
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா.
இதே போல் பப்புவின் நடபு எங்கள் பக்கத்து வீட்டு மல்லுஸ் கூட!! இப்போ அவளோட நிறைய உச்சரிப்புகள் அவங்க மாதிரி..ஸ்டோப், போக்ஸ்..:-))..அப்புறம், சேச்சி கிட்ட வா..இத்தனைக்கும் 9 மாதங்கள் வித்தியாசம்! அபார்ட்மெண்ட்/தனி வீடு...எதுவாயிருந்தாலும் like minded parents அமைந்தால் ஒக்கே இல்லையா! நல்ல நட்பு அமைய தீஷூவுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDelete