காலையிலிருந்து மாலை வரை பள்ளியில் செலவிடும் குழந்தைகள் மாலை வீட்டிற்கு வந்தவுடன் வீட்டுப்பாடம் அல்லது வேறு வகுப்புக்கள் என பிஸியாகி விடுகிறார்கள். அவர்களுக்கு ஸ்ட்ரஸாக இருக்காதா என்று முன்பு எனக்குத் தோன்றும். ஆனால் இப்பொழுது நாங்களும் அந்த நிலையில் தான் இருக்கிறோம்.
காலை 8:20 பள்ளிக்குச் செல்லும் தீஷு 3:00 மணிக்கு வீட்டிற்கு வருகிறாள். வந்தவுடன் பையிலிருந்து அனைத்தையும் எடுத்து வைத்து, உடை மாற்றி, உணவு உண்டு என்று ஒரு மணி நேரம் ஓடி விடும். 20 நிமிடங்கள் வீட்டுப்பாடம், 30 நிமிடங்கள் வாசிப்பு, 10 நிமிடங்கள் மனக்கணக்கு, 30 நிமிடங்கள் இந்தி அல்லது தமிழ் என அடுத்த ஒன்னரை மணி நேரம் படிக்கிறாள். அது போக வாரத்தில் இரண்டு நாட்கள் பாரதநாட்டியம், ஒரு நாள் நீச்சல், ஒரு நாள் தமிழ்ப்பள்ளி என்று நான்கு வார நாட்களில் சுமார் ஒரு மணி நேரம் வேறு வகுப்புக்கள்.
பள்ளி தொடங்கி இந்த ஒரு மாதத்தில் எப்பொழுதும் அவள் பிஸியாக இருப்பது போல் ஒரு உணர்வு. எனக்கு கஷ்டமாக இருந்தது. அவளுக்கு அவளை உணர்வதற்கான நேரத்தையாவது கொடுக்கிறோமா என்று யோசனையாக இருந்தது. தமிழ் மற்றும் இந்தி வாசிப்பை நிறுத்துவது மட்டுமே என்னால் முடிந்த விஷயம். மற்ற படி எதையும் மாற்ற முடியாது. பாரதநாட்டியம் மற்றும் நீச்சலை நிறுத்த தீஷுவிற்கு மனம் இல்லை. அவளை ரிலாக்ஸ் செய்ய வைக்க வேண்டும். நாட்டியம், நீச்சல் கொடுக்கும் ரிலாக்ஸேஸன் போதுமா என்ற கேள்வியும் எழுந்தது. மற்ற அனைத்து குழந்தைகளும் இவளை விட பிஸியாக இருப்பதால் சேர்ந்து விளையாடவும் முடியாது.
இப்பொழுது கடந்த இரண்டு வாரமாக ஒரு யோசனையை செயல்படுத்துகிறோம். பள்ளியிலிருந்து வந்து சாப்பிட்டு முடித்தவுடன் படிக்க சொல்லாமல் 30 நிமிடங்கள் ஒரு வேலையும் செய்ய வேண்டாம் (Free time) என்றேன். நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ அதை செய் இல்லையென்றால் நான் சிறு வேலைகள் தருகிறேன் என்றேன். ஆச்சரியமாக என்னைப் பார்த்தாள். தங்கையுடன் விளையாண்டாள். வீட்டில் ஒரே சிரிப்பு சத்தம். இவ்வளவு நாட்கள் எங்கே இருந்தது இந்தச் சத்த்ம் என்று அவர்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
ஒரு நாள் ஸ்கிப்பிங் செய்தாள், ஒரு நாள் போர்டு கேம்ஸ் விளையாண்டாள், ஒரு நாள் தண்ணீர் பலூன் என்று அவள் ஃப்ரி டைம் போகிறது. என்ன செய்ய என்று ஒரு நாள் என்னிடம் கேட்ட பொழுது கண்ணை மூடிக் கொண்டு செஸ் காய்களை அதற்கான இடத்தில் வைக்க வேண்டும் என்றேன். அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அரைமணி நேரத்தில் அவளாகவே படிக்க வந்து விடுகிறாள். இந்த ஃப்ரி டைம் அவளுக்கு transition time. மேலும் அரைமணி நேரத்திற்கு ஏதாவது மாண்டிசோரி ஆக்டிவிட்டீஸ் கொடுக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. செய்ய ஆரம்பித்தவுடன் அதைப் பற்றி எழுதுகிறேன்.
உங்கள் குழந்தைகளை எவ்வாறு ரிலாக்ஸ் செய்ய விடுகிறீர்கள்?
பி.கு : கண்ணை மூடிக் கொண்டு செஸ் காய்களை வைப்பது எங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது. நானும் என் கணவரும் கூட முயற்சித்தோம்.
நாங்கள் வைத்த போர்டின் புகைப்படங்கள்
நான் வைத்தது |
என் கணவர் வைத்தது |
பள்ளியிலிருந்து வந்து சாப்பிட்டு முடித்தவுடன் படிக்க சொல்லாமல் 30 நிமிடங்கள் ஒரு வேலையும் செய்ய வேண்டாம் (Free time) என்றேன். நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ அதை செய் இல்லையென்றால் நான் சிறு வேலைகள் தருகிறேன் என்றேன். //
ReplyDeleteநல்ல யோசனை. குழந்தைகளை பள்ளிவிட்டு வந்தவுடன் கொஞ்சம் விளையாட விட வேண்டும். அது அவர்களுக்கு நல்ல புத்துணர்ச்சி கொடுக்கும்.
கண்ணை மூடிக் கொண்டு செஸ் காய்களை அதற்கான இடத்தில் வைக்க வேண்டும் என்றேன். அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.//குழந்தைக்கும் ஒரு ரிலாக்ஸ் நீங்கள் செய்வது உங்களுக்கும் ரிலாக்ஸ்.
ஆம் அம்மா. நல்ல மாற்றம் தெரிகிறது. நன்றி உங்கள் வருகைக்கு!!
Deleteஉண்மைதான் தியானா..வந்தவுடன் நான் நேரம் கொடுத்தாலும் போக்குவரத்தில் வந்தது சோர்வாக இருப்பதால் விளையாட சுரத்தில்லை...அதனால் இப்பொழுது தூங்கும் நேரத்தை தள்ளிப் போட்டுவிட்டேன்...இருவரும் விளையாடி சிரிப்பது அப்பொழுதுதான்...
ReplyDeleteகண்ணை மூடிக்கொண்டு சதுரங்க காய்களை வைத்தது அருமை தியானா, மூவரும் சரியாகவே வைத்துள்ளீர்கள் :) முயற்சித்துப் பார்க்கிறேன்
தூங்கும் நேரத்திற்கு முன் விளையாட விட்டால், புத்துணர்ச்சி அடைந்து, தூக்கம் தள்ளி போகுமோ என்ற பயம் எனக்கு கிரேஸ். நீயும் செஸ் காய்களை வைத்துப் பாரேன்.. Interesting!!
Deleteநன்றி உன் வருகைக்கு!!
உங்களின் வித்தியாசமான சிந்தனைகளை தொடர வேண்டும்... பாராட்டுக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன்..
Deleteரிலாக்ஸ். நேரம் மிகவும் அவசியம்..!
ReplyDeleteஉண்மை தான் அம்மா.. நன்றிகள்!!
Deleteஅருமையான யோசனை. இளம் குழந்தைகள் இருப்பவர்கள் எல்லோருமே கடைப்பிடிக்கலாம். குழந்தைகளை பள்ளியிலிருந்து வந்தவுடன் படி படி என்று சொல்லாமல் இப்படி சிறிது நேரம் அவர்கள் போக்கில் விடுவது ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அந்த நேரத்தை என்ன செய்யலாம் என்று மிகச் சிறந்த உதாரணங்களைக் கொடுக்கிறீர்கள்.
ReplyDeleteஉங்களை எனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். நேரம் இருக்கும்போது படித்துப் பாருங்கள்.
http://wp.me/p2IA60-Da
பாராட்டுக்கள்!
கண்டிப்பாக படித்துப் பார்க்கிறேன்.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், என்னை அறிமுகப்படுத்தியமைக்கும்..
Delete"ரிலாக்ஸ் நேரம்" தரும் ஐடியா நன்றாக உள்ளதே. மற்றவர்களும் இதை கடைபிடிக்கலாமே
ReplyDelete