குழந்தைகளுக்கு அதிகமாக செலவு செய்து வாங்கிய பொம்மையை விட பொம்மை கட்டி வந்த அட்டைப் பெட்டி மிகவும் விருப்பமான பொருளாக இருக்கும். சம்முவிற்கு பெயிண்ட் அல்லது களிமண் தொடுவதற்கு விருப்பம் இருப்பதில்லை. அவளுக்குப் பழக்கப்படுத்துவதற்காக கார்ன் ஸ்டார்ச் (Corn Starch) கொடுத்தேன். சிறு துரும்பு கதை தான். மிகவும் கவர்ந்திருந்தது. அவளை விட தீஷுதான் மிகவும் சந்தோஷமாக விளையாண்டாள்.
முதலில் கார்ன் ஸ்டார்ச் மட்டும் கொடுத்தேன். சற்று விளையாடி முடித்தவுடன், சிறிது தண்ணீர் கலந்தேன்.
விளையாண்டு முடித்தவுடன், மீதமுள்ள மாவை கீழே போட வேண்டியதில்லை. மீண்டும் தண்ணீர் சேர்த்து விளையாடலாம். நாங்கள் கிட்டத்தட்ட இரண்டு வாரம் ஒரே மாவை வைத்திருந்தோம்.
பி.கு. விளையாடும் இடம் முழுவதும் மாவாகும் என்பதால் வீட்டிற்கு வெளியே வைத்து விளையாடினோம். கார்ன் ஸ்டார்ச் வழுக்கும்.
//குழந்தைகளுக்கு அதிகமாக செலவு செய்து வாங்கிய பொம்மையை விட பொம்மை கட்டி வந்த அட்டைப் பெட்டி மிகவும் விருப்பமான பொருளாக இருக்கும்//
ReplyDeleteசரியாச் சொன்னீங்க! பெரியவர்களில் கூட பலருக்கு இந்த பழக்கம் உண்டு! :)
நல்ல முயற்சிகள் தொடரட்டும்.
இந்த விளையாட்டும் நன்றாக இருக்கிறது...
ReplyDeleteவீட்டில் இருக்கும் பொருட்களே பல மணி நேரம் குழந்தைகள் கவனத்தை தக்க வைக்கும்...அதை அறிந்து ஊக்குவிக்கும் உனக்கு பாராட்டுகள் தியானா!
ReplyDeleteவித்தியாசமாக இனோவேடிவாக சிந்திக்கிறீர்கள். பாராட்டுக்கள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வெங்கட்..
ReplyDeleteநன்றி தனபாலன்..
நன்றி தனபாலன்..தங்கள் முன்னமே எனக்கு மாற்றப்பட்ட கோடை அனுப்பியிருந்தீர்கள்..டெம்பிளேட் மாற்றும் பொழுது மறந்து பழைய கோடை உபயோகித்து இருந்தேன். நீங்கள் சொன்னவுடன் நீங்கள் கொடுத்த கோடை மாற்றி விட்டேன். இப்பொழுது சரியாக இருக்கிறதா?
ReplyDeleteநன்றி கிரேஸ்..
ReplyDeleteநன்றி Viya Pathy