ஒரு விஷயம் நமக்குப் பிடித்துவிட்டால், திரும்பத் திரும்ப செய்வோமே? இப்ப தீஷுவிற்கு பிடித்திருப்பது - நெய்தல் (Weaving). என்னைக் கேட்டுக் கொண்டேயிருந்தாள். பேப்பர் கூடை நெய்யலாம். சற்று வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்தேன்.
தேவையானப் பொருட்கள் :
1. ஒரு இன்ச் அகலமான பேப்பர்
2. கோந்து.
செய்முறை :
1. நெய்தல் செய்வது போல் மேலே கீழே என்று பேப்பரை கோர்க்க வேண்டும். செய்முறை இங்கு உள்ளது.
2.கூடை போல் செய்வதற்கு, அடிப்பகுதி(Base) முடித்தவுடன் பேப்பரை மேல் நோக்கி மடித்து விடவேண்டும். நாங்கள் ஐந்து பேப்பர்கள் குறுக்கவும் நெடுக்கவும் வைத்து அடிப்பகுதி செய்தோம். முடித்தவுடன் மேல் நோக்கி பேப்பரை மடித்து, சுற்றி பகுதி நெய்தோம். எளிதாக நெய்வதற்காக ஆங்காங்கே ஒட்டினோம்.
3. கூடை சிறிது லூசாக இருந்தது. மற்றபடி தீஷுவிற்கு இது ஒரு புதிய முயற்சி.
டிஸ்கி : தறி முறையில் செய்த புதிய பாய். இந்த முறை மிகவும் நன்றாக வந்திருக்கிறது.
பாய் சூப்பர்...கலர்ஃபுல்லா இருக்குங்க. கூடையும் நல்லா இருக்கு. எனக்குமே பார்க்கையில் செய்து பார்க்கலாம் போல கை துறுதுறுக்குது! :)
ReplyDeleteபொறுமையாகச் செய்த தீஷு-வுக்கு பாராட்டுக்கள்!
நன்றி மகி
Deleteஅருமையாக உள்ளது
ReplyDeleteபடத்துடன் சொல்லிச் சென்றவிதம்
மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
ஆஹா அழகு தியானா..தீக்ஷுவிற்கு என் பாராட்டை தெரிவித்துவிடு :)
ReplyDeleteநன்றி கிரேஸ்
Deleteநல்லா இருக்கு உங்களுடைய முயற்சிகள்.... தொடரட்டும்.
ReplyDeleteஅருமையாக செய்து இருக்கிறாள் தீஷு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நன்றி அம்மா..
Deleteசித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோல்
ReplyDeleteஅருமையாக செய்துள்ளீர்கள்...
வாழ்த்துக்கள்
தீஷுவுக்கும் அவளை எல்லாவிதத்திலும் உற்சாகப்படுத்தும் உங்களுக்கும் பாராட்டுக்கள்! நன்றாக நெய்திருக்கிறாள் குழந்தை. அவளுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete