Tuesday, September 24, 2013

தாமரைப்பூவும் பட்டாம்பூச்சியும்

சில வேலைகளுக்கு சரியான நுணிக்கமும் அதிக கவனமும் தேவைப்படும். சில வேலைகளை எப்படி செய்தாலும் அவுட்புஃட் நன்றாக இருக்கும். எங்கள் சாய்ஸ் எப்பொழுதும் இரண்டாவது டைப் தான். ஜன்னல் நட்சத்திரகள் பற்றி எழுதியிருந்தேன்.  அது இரண்டாவது வகையைச் சேர்ந்தது. செய்வது எளிது. ஆனால் இறுதியில் நட்சத்திர பூக்கள் அழகாக இருக்கும். 




அதே முறையில் இதழ்களை சற்றே மாற்றி ஒட்டி, தாமரைப் பூவும் பட்டாம்பூச்சியும் செய்தோம். பொதுவாக பூ செய்வதற்கு 8 இதழ்கள் தேவை. தாமரைப்பூ மற்றும் பட்டாம்பூச்சி செய்வதற்கு ஐந்து இதழ்கள் போதும். பூ எவ்வாறு செய்தோம் என்பதே என் பழைய பதிவிலிருந்து காபி பேஸ்ட் செய்துள்ளேன். அதிலிருந்து தாமரைப்பூவும் பட்டாம்பூச்சியும் எவ்வாறு செய்துள்ளோம் என்பதே புரிந்து கொள்வது எளிது. 

செய்வ‌த‌ற்கு தேவையான‌வை:

1. க‌ல‌ர் டிஷ்யூ பேப்ப‌ர் (டிரேஸிங் பேப்ப‌ர் போன்று மெலிதாக‌ இருக்கும்)

2. ப‌சை


செய்முறை: 

1. நாங்க‌ள் வாங்கிய‌ டிஷ்யூ பேப்ப‌ர் 20 இன்ச் * 20 இன்ச் இருந்த‌து. அதை 10 இன்ச் * 10 இன்சாக‌ கிழித்துக் கொண்டோம். அள‌வு முக்கிய‌மில்லை. ச‌துர‌மாக‌ இருக்க‌ வேண்டும். 

2. ச‌துர‌ப் பேப்ப‌ரை ஒரு முறை ம‌டித்து வெட்டிவிட்டோம்.  இப்பொழுது ந‌ம்மிட‌ம் ஒரு செவ்வ‌க‌ம் இருக்கும்.


3. செவ்வ‌க‌த்தை மேலும் ஒரு முறை ம‌டிக்க‌ வேண்டும். அழுத்தித் தேய்க்க‌ வேண்டாம். ந‌ம‌க்கு ந‌டுப்புள்ளித் தெரிவ‌த‌ற்காக‌ ம‌டித்து இருக்கிறோம்.



4. ம‌டித்த‌தை விரித்து, ஒரு ஓர‌த்தை ந‌டுவிற்கு கொண்டு வ‌ர‌வும்.


  5. அதேப் போல், அடுத்த‌ ஓர‌த்தையும் ந‌டுவிற்கு கொண்டு வ‌ர‌வும்.


6. எதிர்ப்புற‌ ஓர‌ங்க‌ளையும் இவ்வாறு ம‌டிக்க‌வும்.

7. ம‌டித்த‌ ஓர‌த்தை மீண்டும் ந‌டுவிற்கு கொண்டு வ‌ர‌வும். ஒரு ப‌க்க‌த்திற்கு ம‌ட்டும் செய்தால் போதும். இத‌னை இத‌ழென‌க் கொள்வோம்.


8. ப‌சை கொண்டு தூக்கியிருக்கும் ப‌குதிக‌ளை ஒட்டிவிட‌வும். ஒட்ட‌ வேண்டும் என்று அவ‌சிய‌மில்லை. ஒட்டினால், குழ‌ந்தைக‌ளுக்கு செய்வ‌த‌ற்கு எளிதாக இருக்கும்.

9. ந‌ட்ச‌த்திர‌ம் போல் செய்வ‌த‌ற்கு, ஒரு முறை ம‌ட்டும் ம‌டித்திருக்கும் ஓர‌ங்க‌ளை இணைக்க‌ வேண்டும்.

11. ஒரு இத‌ழின் ந‌டுக்கோட்டில் ம‌ற்றொரு இத‌ழின் ஒரு ப‌க்க‌த்தை வைக்க‌ வேண்டும். பார்க்க‌ப் ப‌டம்.





பூவிற்கு ஐந்து இதழ்களை ஒட்டி, அடுத்த மூன்று இதழ்களை எவ்வாறு ஒட்டினால் தாமரை போல் இருக்கும் என்று பார்த்து ஒட்டினோம். பட்டாம்பூச்சிக்கு ஒரு இதழை மடித்து உடல் போல் செய்து, மற்ற நான்கு இதழ்களையும் இறக்கை போல் ஒட்டி விட்டோம்.




செயல்முறை புரியும் படி இருக்கிறது என்று நினைக்கிறேன். புரியவில்லை என்றால் சொல்லுங்கள் மீண்டும் முயற்சிக்கிறேன். 

தொடர்புடையப் பதிவு : http://dheekshu.blogspot.com/2013/04/blog-post_9370.html


14 comments:

  1. தாமரைபூவும், பட்டாம்பூச்சியும் அருமையாக இருக்கிறது.
    தியானாவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அழகாய் இருக்கிறது.... பாராட்டுகள்.

    ReplyDelete
  3. செய்முறை விளக்கம் நன்றாகவே இருக்கிறது. தாமரைப்பூவும் பட்டாம்பூச்சியும் பார்க்க மிக அழகாக இருக்கின்றன.

    ReplyDelete
  4. அருமை! தொடர்புடைய பதிவிற்கு இணைப்பு கொடுத்துவிடு தியானா!

    ReplyDelete
    Replies
    1. இரண்டு இடத்தில் இணைப்பு கொடுத்திருக்கேனே கிரேஸ்.. வருகைக்கு நன்றி!!

      Delete
  5. படங்களுடன் விளக்கம் அருமை... மிகவும் அழகாக செய்து உள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Desire-Greedy.html

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பதிவை கண்டிப்பாக வாசிக்கிறேன்..

      Delete
  7. நீங்க சொல்றவிதம் ரொம்பவும் நல்லாருக்குங்க. என் மகளுக்கும் இம்மாதிரியான வேலைகளில் ஆர்வம் அதிகம். அவருக்கு இந்த பதிவின் சுட்டியை அனுப்பியுள்ளேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜோசப் அய்யா..தங்கள் மகள் செய்து பார்த்து என்ன சொன்னார் என்பதையும் சொல்லுங்கள்!!

      Delete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost