சம்மு ஐஸ்ஸை வைத்து விளையாண்ட மறுநாள் காய்ச்சல் வந்து, இரு தினங்களில் சரியானலும், பசியின்மையால் ஒரு வாரம் அவதிப்பட்டு, இன்று மீண்டும் ஜலதோசம். தீஷு பள்ளிக்குச் சென்றவுடன் சம்முவுடன் நேரம் செலவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இரு வாரங்களாக உடம்புப்படுத்துவதால் நினைத்தப்படி விளையாட முடிவதில்லை. சில நாட்களாக நாங்கள் செய்ததும், செய்ய நினைத்தும் இந்தப் பதிவு. இவை கண் கை ஒருங்கிணைப்புக்கு ஏற்ற விளையாட்டுகள்.
கேரெட் ஜூஸ் பெயிண்ட்டிங்
சம்முவிற்கு ஸேப் ஸாட்டர்ஸ் (Shape sorters) வடிவங்களைப் பிரித்து அதன் குழி வழியே போடுவது கடினமாக இருந்தது. அதனால் ஷூ டப்பாவில் ஒரு வட்டம் வெட்டி, அதில் அனைத்து வடிவங்களும் போட்டு பழகினோம்.
காய்களை உண்டியலில் போட வேண்டும். இது அவளுக்குச் சிறிது கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஒரு கண்ணாடி பாட்டிலில் காய்களைப் போட வேண்டும். இது அவளுக்குப் பிடித்திருந்தது.
ஒரு கோப்பையிலிருந்து மற்றொரு கோப்பைக்கு மாற்ற வேண்டும். சற்று கடினம்.
டியூபில் காய்களைப் போட வேண்டும்.
உன்னை பார்த்து பெருமைப்படுகிறேன் தியானா..வாழ்த்துகள் உனக்கும் செல்லங்களுக்கும் :)
ReplyDeleteநன்றி கிரேஸ்..
Deleteஆகா... அருமை...........!@
ReplyDeleteநன்றி தனபாலன்..
Deleteஒவ்வொரு குழந்தைக்கும் இதுபோல ஒரு அம்மா கிடைத்தால் எத்தனை நன்றாக இருக்கும்? குழந்தையின் அனுபவமும் உங்கள் அனுபவமும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஉண்மை தான் அம்மா. எங்கள் இருவருக்கும் சுவாரசியமாக இருக்கிறது. உங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்!!
Delete