Monday, September 9, 2013

எங்கள் பச்சைக் களிமண் பிள்ளையார்

கலிஃபோர்னியாவிலுள்ள கோயில் காலெண்டர் படி ஞாயிறு அன்று விநாயகர் சதுர்த்தி. பிள்ளையார் வாங்க 1 மணி நேரம் பயணம் செய்து இந்தியன் ஸ்டோர் போக வேண்டும். அலுப்பாய் இருந்தது. நாமே ஏன் பிள்ளையார் செய்ய முயற்சிக்கக் கூடாது என்று களிமண் வாங்கலாம் என்று நினைத்தேன். பின் அதையும் ஏன் வீட்டிலேயே செய்யக் கூடாது என்று பலவாறு யோசனைக்குப் பிறகு வேலையில் இறங்கினேன். எங்கள் பச்சைப் பிள்ளையார் மைதா மாவில் உருவானார்.

இது தான் முதல் முயற்சி. நான் செய்த களிமண்(!) மிகவும் மிருதுவாக இருந்ததால் காது சரியாக நிற்கவில்லை. தலையும், உடம்பும் ஒருவாறு பிள்ளையார் போல் தோன்றினாலும், காலும் கையும் சரியாக வரவில்லை. இருந்தாலும் விடாமல் பிள்ளையாரின் ஒரு கையை அருள்பாவிப்பது போல் செய்து, மற்றொரு கையில் லட்டைக் கொடுத்துவிட்டோம். கண்களுக்கு மிளகு வைத்துவிட்டொம்.

பிள்ளையார் மட்டும் தனியாக இருந்ததால் மூஞ்சூறும் செய்தோம். பிள்ளையாருக்கு இலையில் லட்டு மற்றும் ஒரு பாத்திரத்தில் கொழுக்கட்டை களிமண்ணியேலே படைக்கப்பட்டது. 

முழு குடும்பமும் விருப்பப்பட்டு செய்ததால் Family Tradition - னாக‌ மாற்றலாம் என்ற யோசனை இருக்கிறது. வருடாவருடம் எங்கள் கைவண்ணத்தில் விதவித பிள்ளையார் உருவாகப் போகிறார்.  :-))


பூஜைக்குப் பின்


அனைவரும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!!!

 

25 comments:

  1. உங்களின் கைவண்ணம் மிக அருமை...கடவுளை படைக்கும் கைகள் உங்கள் கைகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மதுரைத்தமிழன்!!

      Delete
  2. விநாயகர் அழகாய் வந்து இருக்கிறார். மைதாவில் செய்தது அருமை. என் கணவரும் களிமண் பிள்ளையாரவரே செய்தார்.
    http://mathysblog.blogspot.com
    நேரம் இருக்கும் போது வந்து படித்து பாருங்கள்.வந்தார் விநாயகர் தந்தார் அருளை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா!! தங்கள் பதிவை வாசித்தது மிக்க மகிழ்ச்சி அளித்தது..

      Delete
  3. முழு குடும்பமும் விருப்பப்பட்டு செய்ததால் Family Tradition - னாக‌ மாற்றலாம் என்ற யோசனை இருக்கிறது. வருடாவருடம் எங்கள் கைவண்ணத்தில் விதவித பிள்ளையார் உருவாகப் போகிறார். :-))//

    குடும்பம் இணைந்தால் தான் விழா சிறப்பாக இருக்கும். குழந்தைகள் இணைந்து செய்யும் போது அவர்களுக்கும்
    நம் வீட்டு பழக்க வழக்கங்கள் தெரிய வரும்.
    இனி வருடா வருடம் பிள்ளையார் உருவாகட்டும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மிக அழகாக உள்ளார் பிள்ளையார்! உங்களுக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. பிள்ளையார் பச்சை வண்ணத்தில் அழகாய் இருக்கிறார். தொடரும் உங்கள் முயற்சிகளுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  6. அழகு...

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. இப்படித்தான் சிறு சிறு நாமே செய்ய முயற்சிக்கவேண்டும். நீங்கள் ஒரு மணி நேரம் பயணம் செய்திருந்தால் நேர விரயம், பண விரயம் மட்டுமின்றி ஒரு முயற்சி தடை பட்டிருக்கும். தொடருங்கள்....

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஸ்கூல் பையன்..வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்!!

      Delete
  8. அருமை! பிள்ளையார் மிகவும் அழகு! வாழ்த்து!

    ReplyDelete
  9. அழகாய் இருக்கிறது தியானா, வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. இதுதான் உண்மையான படைத்தல் என படுகிறது!
    த.ம. 4

    ReplyDelete
  11. நீங்களே செய்த பிள்ளையார் மிக அருமையாக வந்திருக்கிறது. பாராட்டுக்கள். விநாயகசதுர்த்தி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. பச்சை பிள்ளையார் புதுமையாக இருக்கிறது!! :‍)

    ReplyDelete
    Replies
    1. வேற வழியில்லை முல்லை!!

      Delete
  13. நீங்கள் இப்போது செய்ய ஆரம்பித்தால், குழந்தைகளும் தொடருவார்கள். நம் செயல்கள் எல்லாமே வரும் தலைமுறையினருக்கு தூண்டுகோலாக இருக்க வேண்டும். உங்கள் முயற்சியில் உருவான பிள்ளையார் நன்றாக இருக்கிறார்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அம்மா..நம் செய்வதில் சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது!!

      Delete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost