வெகு நாட்களாக செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த பேப்பர் வீவிங், சென்ற வாரம் ஒரு நாளில் செய்ய முடிந்தது.
1. ஒரு கலர் பேப்பரை ஒரு ஓரத்திலிருந்து அகல வாக்கில் ஒரு இன்ச் அளந்து ஒரு கோடு வரைந்து கொண்டேன்.
2. அதே பேப்பரில் நீள வாக்கில் ஒரு இன்ச் இடைவெளி விட்டு கோடுகள் வரைந்து கொண்டேன்.
3. தீஷுவிடம் கொடுத்து கோடுகள் மேல் வெட்ட சொன்னேன். முழூ தாளையும் வெட்டாமல் முதல் அகல வாக்கு கோட்டிற்கு மேல் வெட்டக்கூடாது. படத்தில் உள்ள நீல நிற பேப்பர்.
4. மற்றுமொரு கலரில் ஒரு தாளை எடுத்து நீள வாக்கில் ஒரு இன்ச் பட்டைகளாக வெட்டச் செய்தேன். படத்தில் உள்ள பச்சை நிற பேப்பர்.
6. மேல், கீழ், மேல், கீழ் என்று மாற்றி பட்டைகளை இணைக்க வேண்டும்.
7. அனைத்து பட்டைகளையும் இணைத்தவுடன், பச்சை ஓரங்களை நீல அளவிற்கு வெட்டி அதனுடன் ஒட்டி விட்டேன்.
தீஷுவிற்கு மிகவும் பிடித்திருந்ததால் மீண்டும் மறுநாள் செய்ய வேண்டும் என்றாள். இந்த முறை சற்று வித்தியாசப்படுத்த தாளை அளக்காமல் மேலும் நேராக இல்லாமல் கோணலாக வெட்டிக் கொண்டோம். இரண்டு கலருக்கு பதிலாக மூன்று உபயோகப்படுத்தினோம். செய்முறை ஒன்றே. ஆனால் எனக்கு இரண்டாவது முறையில் செய்தது மிகவும் பிடித்திருந்தது.
எனக்கும் இரண்டாவது செய்தது முதலாமதை விட அதிகம் பிடித்திருக்கிறது. அழகாக இருக்கிறது. :)
ReplyDeleteThanks Grace. Yes. Even I like the second one. The first one has checker board look. The second one is really cool.
ReplyDelete