Sunday, April 14, 2013

குழ‌ந்தைக் க‌தாசிரிய‌ர்கள்

ச‌த்குரு ஜ‌க்கி வாசுதேவின் உரையை ஒரு முறை தொலைக்காட்சியில் சில‌ நிமிடங்க‌ள் பார்த்தேன். அதில் அவ‌ர்  ம‌கிழ்ச்சியாக‌ இருப்ப‌து ப‌ற்றி பேசிக் கொண்டிருந்தார். குழ‌ந்தைக‌ள் எப்பொழுதும் ம‌கிழ்ச்சியாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள். ஏதாவ‌து அவ‌ர்க‌ளுக்குப் பிடிக்காத‌து ந‌ட‌க்கும் பொழுது தான் ம‌கிழ்ச்சி நிலையிருந்து வ‌ருத்த‌ நிலைக்குச் செல்வார்க‌ள். ஆனால் பெரிய‌வ‌ர்க‌ள் நாம் அனைவ‌ரும் ஏதாவ‌து ந‌மக்குப் பிடித்தது ந‌டக்கும் பொழுது தான் ந‌ம் இய‌ல்பு நிலையிலிருந்து ம‌கிழ்ச்சி நிலைக்குச் செல்கிறோம் என்றார். அது உண்மை என்று என‌க்குத் தோன்றிய‌து. நாம் வ‌ள‌ரும் பொழுது நாம் வ‌ள‌ர்கிறோம் -  ‍உட‌ல‌ள‌விலும் ம‌ன‌ம‌ள‌விலும். ஆனால் வ‌ள‌ரும் பொழுது நிறைய‌ இழ‌க்கவும் செய்கிறோம். அவ‌ற்றில் ஒன்று க‌ற்ப‌னைத் திற‌ன்.

குழ‌ந்தைக‌ள் க‌தை சொல்லிக் கேட்டிருப்போம். அதில் தொட‌க்கம் இருக்கும், முடிவு இருக்காது. நீண்டு கொண்டே இருக்கும். லாஜிக் இருக்காது, ஆனால் க‌ற்ப‌னைக் கொட்டி இருக்கும். குழ‌ந்தைக‌ள் த‌விர‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளால் அதை யோசிக்க‌க் கூட‌ முடியாது. ஏன்னென்றால் ந‌ம்மால் அவ‌ர்க‌ள் உல‌க‌த்திற்குள் நுழைய‌ முடியாது.

என் ம‌க‌ள் கூறும் க‌தைக‌ளை ஒரு இட‌த்தில் எழுதி வைக்க‌ வேண்டும் என்று நினைப்பேன். எழுதியும் வைப்பேன், ஆனால் ப‌ல இட‌ங்க‌ளில். ஒரு நாள் அவ‌ள் ப‌டிக்க‌ வேண்டும் என்று கேட்டால் என்ன‌ செய்வ‌து என்று நான் யோசிக்கும் பொழுது தோன்றிய‌து ‍ e-book. ஆனால் ஒரே குழ‌ந்தை க‌தாசிரிய‌ராக‌ இருப்ப‌தை விட‌, ஏன் குழ‌ந்தைக‌ளை இணைக்க‌க் கூடாது என்று தோன்றிய‌து.

குழ‌ந்தைக‌ள் கூறும் க‌தைக‌ளை, அவ‌ர்க‌ளே வ‌ரைய‌ செய்து புத்த‌க‌மாக‌லாமே. அவ‌ர்க‌ள் பெய‌ர் க‌தாசிரிய‌ராக‌வும், ஓவிய‌ராக‌வும் பார்த்தால் அவ‌ர்க‌ளுக்கு ம‌கிழ்ச்சியாக‌ இருக்குமே. செய்யலாமா ந‌ண்ப‌ர்க‌ளே!!!

என‌க்குத் தோன்றிய‌ வ‌ழி :

1. விருப்ப‌முடைய‌ குழ‌ந்தைக‌ள் க‌தைக‌ள் எழுதி , அத‌ற்கு ஓவிய‌ம் வ‌ரைந்து என்னிட‌ம் அனுப்பலாம்.

2. நான் தொகுத்து (எந்த‌ ஒரு மாற்ற‌மும் செய்யாம‌ல்) ஒரு புத்த‌கமாக்குகிறேன்.

3. க‌தைக்கு முன்னால் குழ‌ந்தையைப் ப‌ற்றிய‌ சிறு குறிப்பு எழுத‌லாம்.

எந்த‌ ஒரு விதிமுறையும் இல்லை. குழ‌ந்தைக்கு எழுத‌த் தெரியாவிட்டால், பெற்றோர் குழ‌ந்தையின் க‌தையை எழுத‌லாம். க‌தை ஆங்கில‌த்தில் இருத்த‌ல் ந‌ல‌ம். இல‌க்க‌ண‌ம், எழுத்துப் பிழைக‌ள் ப‌ற்றி க‌வ‌லை வேண்டாம்.

க‌தைக‌ளை அனுப்புவ‌த‌ற்கு இறுதி தேதி வைத்துக் கொள்ள‌லாம். இல்லையென்றால் புத்த‌கமாக்குவ‌து க‌டின‌ம். நான் ஜுன் 15 இறுதி தேதியாக‌ நினைத்திருக்கிறேன். வேண்டுமென்றால் மாற்றிக் கொள்ள‌லாம்.

நம் குழ‌ந்தைக‌ளின் கற்பனைத் திற‌னைக் க‌ண்டுக‌ளிக்க‌ இணையலாமா ந‌ண்ப‌ர்க‌ளே!!!

24 comments:

  1. குழந்தையாக மாறி விட்டால் அவர்கள் உலகத்தில் எளிதாக நுழையலாம்... நாம் யோசித்து அவர்களையும் யோசிக்க வைக்கலாம்... முதலில் அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும்...

    நல்லதொரு முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. குழ‌ந்தைக‌ளின் கற்பனைத் திற‌னைக் க‌ண்டுக‌ளிக்க‌ இணைப்புப் பாலமாக
    பூந்தளிராக தளிர்த்து இனிமை சேர்ப்பதற்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. wow!! this is something cool!! sharing in g+ n fb circle,dhiyana!!

    ReplyDelete
  4. நல்ல முயற்சி. என் பேத்தியிடம் பேசியுள்ளேன். எழுதினால் அனுப்புகிறேன்.

    இரு ஆண்டுகளுக்கு முன் எழுதியது கண்ணில் பட்டது. புதியது முயற்சிக்கச் சொல்லியுள்ளேன். இங்குள்ள படங்களைப் பாருங்களேன். -- http://jjessica13.blogspot.in/

    ReplyDelete
  5. இன்னொன்று .. பழையது

    http://jjessica13.blogspot.in/2012/03/42-her-story.html

    ReplyDelete
  6. நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துகள்.....

    ReplyDelete
  7. உண்மை திரு.திண்டுக்க‌ல் த‌ன‌பால‌ன்.. நாம் குழ‌ந்தையாக‌ மாறினால் ம‌ட்டுமே அவ‌ர்க‌ள் உல‌க‌த்திற்குள் நுழைய‌ முடியும்..வாழ்த்துக்கு ந‌ன்றி!!!

    வாழ்த்துக்கு ந‌ன்றி இராஜ‌ராஜேஸ்வ‌ரி மேட‌ம்..

    ReplyDelete
  8. ந‌ன்றி த‌ருமி அய்யா.. உங்க‌ள் பேத்தியின் வ‌லைப்ப‌திவைப் பார்த்தேன். ஓவிய‌ங்க‌ளும் அருமை.. க‌தையும் அருமை. வேறு க‌தை எழுத‌ நேர‌ம் இல்லாவிட்டால் அதேயே எடுத்துக் கொள்ள‌லாம். குட்டிக்கு வாழ்த்துக‌ள்!!!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கு ந‌ன்றி வெங்க‌ட். உங்க‌ள் குழ‌ந்தையையும் எழுதி அனுப்ப‌ச் சொல்ல‌லாமே!!!

    ந‌ன்றி ச‌ந்த‌னமுல்லை.. பப்புவின் க‌தையையும் எதிர்பார்க்கிறேன் :‍))

    ReplyDelete
  10. அட நல்ல யோசனை தியானா. இங்கிருந்து இரண்டு கதை கண்டிப்பாக :)

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. நன்றி கிரேஸ்.. இரண்டு குட்டீஸின் கதைகளையும் வாசிக்க ஆவலாக இருக்கிறேன்..

    ReplyDelete
  12. நல்ல முயற்சி. ஆவலுடன் காணக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  13. ந‌ன்றி ராம‌ல‌ஷ்மி மேட‌ம்

    ReplyDelete
  14. நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. உங்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. நன்றி தனிமரம்

    நன்றி கவியாழி கண்ணதாசன்..

    ReplyDelete
  17. Hi Dhiyana,
    Your blog is very very useful for my kids.
    I want to send my son Rohit's (8 years)story.How can I send to u?

    ReplyDelete
  18. Hi Dhiyana,
    I am regular reader of ur blog.Its very useful for My kids.Thank u very much for sharing .
    I want to sent my son Rohit(8 years) story.I want to know, How can I send to u?


    ReplyDelete
  19. Hi Krishna,

    Can you please send me the story and the illustration to dheekshu@gmail.com. I would like to have a small introduction about Rohit for authors note.

    ReplyDelete
  20. படம் கட்டாயம் வேண்டுமா? படம் இல்லாமல் கதை மட்டும் எழுதியிருந்தால்? அடுத்து, சிலர் தங்கள் குழந்தை எழுதிய கதையை பத்திரமாகச் சேர்த்து வைத்திருப்பார்கள்... அந்தக் குழந்தை இப்போது குழந்தைப் பருவத்தைக் கடந்துவிட்டிருக்கலாம்... அந்தக் கதைகள் ஓகேயா?

    ReplyDelete
  21. வருகைக்கு நன்றி சரவணன். பழைய கதை என்றாலும் பரவாயில்லை. அனுப்பலாம். கதை எழுதிய தேதி தெரிந்தால், அந்த நேரத்தில் கதாசிரியரைப் பற்றிய சிறு குறிப்பு அல்லது தேதி தெரியாவிட்டால், இப்பொழுது என்ன செய்கிறார் என்று குறிப்பு சேர்த்து அனுப்புங்கள். ஒவ்வொரு கதைக்கு முன்னும் கதாசிரியர் பற்றிய சிறு குறிப்பு சேர்க்கலாம் என்ற எண்ணம். அதற்காக தான் சிறு குறிப்பு கேட்கிறேன். மேலும் கதைக்கான படம் இல்லா விட்டாலும் பரவாயில்லை.

    ReplyDelete
  22. நன்றி தியானா. தனி மடல் அனுப்பியுள்ளேன்.

    ReplyDelete
  23. மிக நல்ல முயற்சி. புதுமையான இந்த முயற்சிக்கு மேலும் பலரின் ஆதரவு கிடைக்கட்டும். குழந்தை எழுத்தாளர்களின் கதையைப் படிக்க நானும் ஆவலாக இருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. நன்றி அம்மா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும். புத்தகத்தை சென்ற வாரம் இணையத்தில் ஏற்றி விட்டேன்.

    //https://docs.google.com/file/d/0B9QoI8U_6Wlmeko1aXFuMDNOQ0E/edit?usp=sharing//

    படித்துப் பார்த்து தங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்!!

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost