Friday, April 5, 2013

விர‌ல்க‌ளிலேயே அபாக்க‌ஸ்

 என் ஆறாம் வ‌குப்பு க‌ண‌க்கு ஆசிரியை தின‌மும் பாட‌ம் ஆர‌ம்பிக்கும் முன் ஐந்து ம‌ன‌க்கண‌க்குக‌ள் கொடுப்ப‌து வ‌ழ‌க்க‌ம். ப‌தில் ம‌ட்டும் எழுதினால் போதும். முடித்த‌வுட‌ன் ப‌க்க‌த்தில் இருப்ப‌வ‌ரிடம் கொடுத்து திருத்த‌ வேண்டும். ஐந்தும் ச‌ரியாக‌ செய்திருப்ப‌வ‌ர்க‌ள் எழுந்து நிற்க சிறு கைத்த‌ட்ட‌ல் கிடைக்கும். ஏனோ ம‌னக்க‌ண‌க்கு என‌க்கு விருப்ப‌மான‌ ஒன்று.
 
முத‌ல் வ‌குப்பில் தீஷுவிற்கு ஒரு இலக்கு கூட்ட‌ல்/க‌ழித்த‌ல் 2 நிமிட‌த்தில் 30 க‌ண‌க்குக‌ள் செய்ய‌ வேண்டும் என்று கேள்விப்ப‌ட்டேன். முத‌ல் வ‌குப்பு முடிவில் ஒரு இல‌க்க‌க் க‌ணக்குக‌ள் ம‌ன‌ப்பாட‌ம் ஆகியிருக்கும் என்றார். புரியாம‌ல் ம‌னப்பாட‌ம் செய்வ‌து எவ்வ‌ள‌வு தூர‌ம் ஞாப‌க‌ம் இருக்கும் என்ற‌ எண்ண‌ம் என்னைத் துர‌த்திக் கொண்டே இருந்த‌து. இணைய‌த்தில் தேடும் பொழுது தான் கிடைத்த‌து ‍பிங்க‌ர் மாத்(Finger Math).

Finger Math கொரிய‌ர்க‌ள் க‌ண்டுபிடித்த‌ முறை. கை விர‌ல்க‌ள் ப‌த்து வைத்து 99 வ‌ரை கூட்ட‌ல், க‌ழித்த‌ல், பெருக்க‌ல், வ‌குத்த‌ல் எளிதில் செய்வ‌து. இர‌ண்டு இலக்கித்தை விட‌ பெரிய‌ எண்க‌ளும் செய்ய‌லாம். ஆனால் நான் ப‌டித்த‌ புத்த‌க‌த்தில் அது விரிவாக‌ விள‌க்க‌ப்ப‌ட‌வில்லை.

கீழ்க‌ண்ட‌ ப‌ட‌த்தில் எவ்வாறு 10 விர‌ல்க‌ள் வைத்து 99 வ‌ரை எண்ண‌லாம் என்று விள‌க்கியுள்ளார்க‌ள்.


                                                       ப‌டம் ந‌ன்றி : apps4kids.net

முடிந்த‌ வ‌ரை வார்த்தைக‌ளில் விள‌க்குகிறேன்.
வ‌ல‌து கை விர‌ல்க‌ள் ஒன்ஸ்(Ones).
இட‌து கை விர‌ல்க‌ள் டென்ஸ்(Tens).

 1. ஒரு டேபிளில் கைக‌ளை விரித்து வைத்துக் கொள்ள‌வும்.எந்த‌ விர‌லும் டேபிளில் தொடாம‌ல் ச‌ற்று தூக்கி இருக்க‌ வேண்டும்.

2. வ‌ல‌து ஆள் காட்டி விர‌ல் ம‌ட்டும் டேபிளில் தொட்டால் எண் ஒன்று

3. வ‌ல‌து ஆள் காட்டி விர‌ல் ம‌ற்றும் ந‌டுவிர‌ல் டேபிளில் தொட்டால் எண் இர‌ண்டு

 4. வ‌ல‌துஆள் காட்டி விர‌ல், ந‌டு விர‌ல் ம‌ற்றும் மோதிர‌ விர‌ல் தொட்டால் எண் மூன்று

5. வ‌ல‌து ஆள் காட்டி விர‌ல், ந‌டு விர‌ல், மோதிர‌ விர‌ல் ம‌ற்றும் சுண்டு விர‌ல் தொட்டால் எண் நான்கு

6. எண் ஐந்திற்கு, வ‌ல‌து பெரு விர‌ல் ம‌ட்டு தொட‌ வேண்டும். ம‌ற்ற‌ விர‌ல்க‌ள் தூக்கி விட‌ வேண்டும்.

7. வ‌ல‌து பெரு விர‌ல் ம‌ற்றும் ஆள் காட்டி விர‌ல் ம‌ட்டும் டேபிளில் தொட்டால் எண் ஆறு இவ்வாறு ஒன்ப‌து வ‌ரை வ‌ல‌து கையில் வைக்க‌ வேண்டும்.

 இட‌து கை டென்ஸ் : வ‌ல‌து கையில் வைப்ப‌து போலத் தான். ஆனால் இட‌து ஆள் காட்டி எண் 10, ஆள் காட்டி + ந‌டு விர‌ல் எண் 20 என்று டென்ஸில் வ‌ரும். ஆகையால் இட‌து கையில் 90 வ‌ரை வைக்க‌லாம்.

உதார‌ண‌த்திற்கு   
எண் 11 வைப்ப‌த‌ற்கு : இட‌து ஆள் காட்டி விர‌ல் (10) + வ‌ல‌து ஆள் காட்டி விர‌ல் (1)

தீஷுவை வைத்து நாங்க‌ள் எடுத்த‌ வீடியோ.




You tube யில் நிறைய‌ வீடியோக‌ள் இருக்கின்ற‌ன‌. ப‌ழ‌குவ‌த‌ற்கு எளிதாக‌ இருக்கிற‌து. நீங்க‌ளும் முய‌ற்சித்துப் பாருங்க‌ளேன்.


5 comments:

  1. நன்றி மதுரை தமிழன்

    ReplyDelete
  2. இதுவும் நல்லா இருக்கு... பாராட்டுக்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே...

    ReplyDelete
  4. தீஷு, அழகா எண்ணறியே! சமத்து!

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost