Thursday, April 11, 2013

மெழுகு ஆறு

சிறிதான‌ அல்ல‌து வ‌ண்ண‌ம் தீட்ட‌ முடியாத‌ க்ரையான்ளைத் தூக்கிப் போட‌ ம‌ன‌ம் ஒப்புவ‌தில்லை. முன்பே க்ரையான்க‌ளை உருக்கி உருமாற்றியுள்ளோம். இந்த‌ முறையும் உருக்கினோம், ஆனால் உருமாற்றாம‌ல் பேப்ப‌ர் மேல் வைத்து உருக்கி மெழுகினால் வண்ண‌ம் தீட்டினோம். அழ‌கிய‌ ஓவிய‌ங்க‌ள் கிடைத்த‌ன. ஐடியா இணைத்தில் எடுத்த‌து. நான் ச‌ற்று மாற்றியுள்ளேன்.

க்ரையானுக்குத் த‌மிழ் வார்த்தைத் தெரிய‌வில்லை. தெரிந்த‌வ‌ர்க‌ள் செல்லுங்க‌ளேன்.

தேவையான‌ப் பொருட்க‌ள்

1. க்ரையான்க‌ள்  (Crayons)

2. ஹேர் டிரைய‌ர் (Hair dryer)

3. ஒரு அக‌ல‌மான‌ அட்டைப் பெட்டி (மெழுகு த‌ரையில் வ‌டியாம‌ல் இருக்க‌)

 செய‌ல்முறை:

1. க்ரையான்க‌ள் மேலுள்ள‌ காகித‌த்தை எடுக்க‌ வேண்டும். எடுக்க‌ க‌டின‌மாக‌ இருந்தால், சிறிது நேர‌ம் வெந்நீரில் போட்டால் எளிதாக‌ எடுக்க‌ வ‌ரும்.

2. ஒரு அட்டை பெட்டியில் காகித‌த்தை வைத்து, நான்கு ஓர‌ங்க‌ளில் டேப்பினால் ஒட்ட‌வும்.

3. ஒரு க்ரையானை எடுத்துப் பேப்ப‌ரின் ந‌டுவில் வைத்து டேப்பினால் ஒட்ட‌வும். ஒட்டாம‌ல் விட்டால் ஹேர் டிரைய‌ர் காற்றில் க்ரையான்  ஓடும். உருக்குவ‌து க‌டின‌ம்.

4. ஹேர் டிரைய‌ரை ஹையில் வைத்து க்ரையான் நோக்கி வைத்திருக்க‌வும்.

5. அரை நிமிட‌த்திற்குள் க்ரையான் உருகத் தொட‌ங்கும்.


6. இப்பொழுது க்ரையான் மேலுள்ள‌ டேப்பை எடுத்து விட‌வும்.

7. க்ரையான் காற்றினால் பேப்ப‌ரில் இங்கும் அங்கும் ஓடி வண்ண‌ம் தீட்ட‌த் தொட‌ங்கும்.

8. முழுதாக‌ உருகிய‌வுட‌ன் ம‌ற்றொரு வண்ண‌த்தில் க்ரையான் எடுத்து இதே போல் செய்யவும்.


9. இறுதியில் பேப்ப‌ரை அட்டையிலிருந்து எடுக்க‌வும்.

இர‌ண்டாவ‌து முறை


இரண்டாவ‌து ஓவிய‌த்திற்கு பேப்ப‌ரின் மேல் ப‌குதியில் எல்லா க்ரையான்க‌ளையும் டேப்பினால் ஒட்டி, டிரைய‌ர் கொண்டு உருக்க‌வும். டேப்பை இறுதியில் எடுத்தால் போதும். ஒரே இட‌த்திலிருந்து க்ரையான்க‌ள் உருகும். அந்த‌ ஓவிய‌மும் அழகாக‌ இருக்கிற‌து.


செய்துப் பார்த்துச் சொல்லுங்க‌ளேன்!!!

4 comments:

  1. நல்லா இருக்கு...

    ஆனால் நாம் தான் செய்ய வேண்டும் கவனமாக....

    நன்றி...

    ReplyDelete
  2. ஆம் திண்டுக்கல் தனபாலன் அவர்களே..சற்று கவனம் தேவை.. வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  3. மெழுகு விரிசில் அல்லது வண்ணக்கட்டி தியானா! படங்கள் அருமை!

    ReplyDelete
  4. தெரிந்து கொண்டேன் கிரேஸ்... தகவலுக்கு நன்றி..

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost