Tuesday, April 9, 2013

உப்புச் செல்லும் பாதை

ப‌னிப் பொழிவு முடிந்த‌வுட‌ன், ப‌னியை உருக்குவ‌த‌ற்கு உப்புத் தூவுவ‌தைப் பார்த்திருப்போம். உப்பு ப‌னியை/ஐஸை உருக்கும் த‌ன்மையுடைய‌து.

இங்கு நாங்க‌ள் இருக்கும் க‌லிபோர்னியா ப‌குதியில் ப‌னிப் பொழிவு இல்லை. தீஷு ப‌ள்ளியில் வாசித்த‌ ஒரு புத்த‌கத்தில் உப்புத் தூவுவ‌து இருந்தது என்றும், தூவினால் எல்லா ப‌னியும் போய்விடுமா என்று கேட்டாள். ஒரு அறிவிய‌ல் புத்த‌கத்தில் நாங்க‌ள் ப‌டித்திருந்த‌ இந்த‌ சோத‌னையை செய்து பார்க்க‌லாம் என்று முய‌ற்சித்தோம்.

தேவையான‌ப் பொருட்க‌ள் :

1. ஐஸ் க‌ட்டிக‌ள்

2. ஃபுட் க‌ல‌ரிங் / பெயிண்ட்

3. உப்பு

செய்முறை :

1. முத‌ல் நாள் இர‌வில் மூன்று கிண்ண‌ங்க‌ளில் த‌ண்ணீர் ஊற்றி ஃப்ரீச‌ரில் வைத்து விட்டோம்.

2. ம‌றுநாள் ஒரு த‌ட்டில் ஐஸ் க‌ட்டிக‌ளை எடுத்து வைத்துக் கொண்டோம். த‌ட்டின் ஓர‌ம் ச‌ற்று தூக்கினாற் போல் இருத்த‌ல் ந‌ல‌ம். இல்லையென்றால் ஐஸ் உருக ஆர‌ம்பித்த‌வுட‌ன் த‌ண்ணீர் கீழே கொட்டிக் கொண்டே இருக்கும்.

 3. த‌ண்ணீரில் ஃபுட்‌ க‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டோம்.

4. சிறிது உப்பை ஐஸ்ஸின் மேல் தூவினோம்.

4. உப்பு ஐஸ்ஸின் மேல் ப‌குதியை உருக்கி, உள்ளே சென்று, அப்ப‌குதியையும் உருக்கி, ஐஸ்ஸினுள் பாதைக‌ளை உருவாக்கிக் கொண்டே இருந்த‌து.

 5. ஐஸ்ஸின் மேல் க‌ல‌ர் த‌ண்ணீர் தெளித்தோம் / கொட்டினோம்.




6. சிறிது வாட்ட‌ர் க‌ல‌ரும் தெளித்தோம்.

 7. க‌ல‌ர் தண்ணீர், உப்பு உருவாக்கிய‌ பாதையில் சென்ற‌தால், பாதை தெளிவாக‌த் தெரிய‌த் தொட‌ங்கிய‌து.


அடுத்த‌ அரை ம‌ணி நேர‌த்திற்கு ஒ..இங்க‌ பாருங்க, இங்க‌ போயிருக்கு.. என்ற‌ க‌த்த‌ல் கேட்டுக் கொண்டேயிருந்த‌து. குழ‌ந்தைக‌ளுக்கு ஏதுவான‌ செய்முறை மற்றும் க‌ல‌ர் த‌ண்ணீர், ஐஸ் போன்ற‌ன‌ அவ‌ர்க‌ள் ஆர்வ‌த்தைத் த‌க்க‌ வைக்கின்ற‌ன.

7 comments:

  1. வாவ்..அருமையான விளக்கம் உங்கள் வீட்டில் ஒரு விஞ்ஞானி உருவாகிக் கொண்டு இருக்கிறார். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    ReplyDelete
  2. அருமை... குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தெரிந்தும் கொள்வார்கள்.... நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. கலர்ஃபுல் தியானா! உங்களின் இந்த மாதிரி இடுகைகளை ரொம்பவே மிஸ் செய்தேன், நீங்கள் லீவில் இருந்தபோது. :‍) சென்ற வருடம் செய்தோம்,இதை. நானும் படங்களை பகிர்கிறேன்.

    ReplyDelete
  4. நன்றி மதுரை தமிழன்


    நன்றி முல்லை.. கண்டிப்பா படங்களைப் பகிருங்க..

    ReplyDelete
  5. உன் ஆர்வம் அழகா
    செய்முறை அழகா
    செய்தது அழகா
    பகிர்ந்தது அழகா
    எது அழகோ...
    நானும் செய்யப் போகிறேன்..
    என்ன!!! அது அழகா?? என்று கேட்காதே :)

    ReplyDelete
  6. வாவ் நல்லா இருக்குங்க!

    அழகு!

    ReplyDelete
  7. நன்றி திண்டுக்கல் தனபாலன்..

    நன்றி கிரேஸ் :-)).. கவிதை அழகு..செய்துப் பார்த்து அழகாக வந்ததா என்று சொல்லு..

    நன்றி வெங்கட் .

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost