Tuesday, April 23, 2013

க‌ணக்கு க‌ற்றுக் கொடுக்கும் பிர‌மிட்

பிர‌மிட் ச‌க்தியைப் ப‌ற்றிய‌ ப‌திவில்லை. இது நாம் உருவாக்கி க‌லைக்கும் பிர‌மிட் ப‌ற்றிய‌து. சீட்டுக் க‌ட்டுக் கொண்டு பிர‌மிட் உருவாக்குகிறோம். அத‌ன் மூல‌ம் கூட்ட‌ல் க‌ற்க‌லாம். அட்டைக‌ளை இணைத்து கூட்டுத் தொகை 13 வ‌ந்தால் அவ்வ‌ட்டைக‌ளைக் க‌ழித்து விட‌ வேண்டும். இவ்வாறு 52 அட்டைக‌ளையும் க‌ழிக்க‌ வேண்டும்.

தேவையான‌ப் பொருள்

1. சீட்டுக் க‌ட்டு (52 அட்டைக‌ள். ஜோக்க‌ர் தேவையில்லை)

பிர‌மிட் உருவாக்கும் முறை 
1. ஒரு அட்டையை ம‌திப்பு தெரியும் ப‌டி வைக்க‌வும்.

2. அத‌ன் மேல், முழுவ‌தும் ம‌றைக்காம‌ல், இர‌ண்டு அட்டையை வைக்க‌ வேண்டும். பார்க்க‌ப் ப‌ட‌ம்.



3. அத‌ன் மேல், மூன்றாவ‌து வ‌ரிசையில் , மூன்று அட்டைக‌ள் வைக்க‌ வேண்டும்.

4. இவ்வாறு ஏழு வ‌ரிசைக‌ள் வைக்க‌ வேண்டும். இறுதி வ‌ரிசையில் ஏழு அட்டைகள் இருக்கும்.

5. மீத‌முள்ள‌ அட்டைக‌ளை அருகில் வைத்துக் கொள்ள‌ வேண்டும்.

ப‌ட‌ அட்டைக‌ளின் ம‌திப்பு

Jack -  11

Queen -  12

King - 13

Ace-  1 ‌


விளையாடும் முறை

1. முத‌லில் ஆர‌ம்பிக்கும் பொழுது, இறுதி வ‌ரிசையிலுள்ள‌ ஏழு அட்டைக‌ள் ம‌ட்டுமே உப‌யோக‌ப்ப‌டுத்த முடியும்.

2. அவ்வ‌ரிசையில் ஏதாவ‌து இர‌ண்டு அட்டைக‌ள் இணைத்தால், கூட்டுத் தொகை 13 வ‌ந்தாலோ அல்ல‌து கிங் (ம‌திப்பு 13) இருந்தோ க‌ழித்து விட‌ வேண்டும்.

3. இவ்வாறு க‌ழிக்கும் பொழுது மேல் வ‌ரிசையிலுள்ள‌ அட்டைக‌ள் சில‌வ‌ற்றில், அவ‌ற்றை மூடி இருக்கும் இரு அட்டைக‌ளையும் எடுத்து இருப்போம். அவ்வாறுள்ள‌ அட்டைக‌ளை  இப்பொழுது நாம் உப‌யோக‌ப்ப‌டுத்த‌லாம்.

4. எந்த‌வொரு அட்டையின் மேல் அட்டைக‌ள் இல்லையோ அத‌னை நாம் உப‌யோக‌ப்ப‌டுத்த‌லாம்.

5. பிர‌மிட்டில் ந‌ம‌க்கு உப‌யோக‌ப்ப‌டுத்த முடிந்த‌ அட்டைக‌ளை இணைத்து கூட்டுத் தொகை 13 வ‌ர‌ முடியாவிட்டால், பிர‌மிட்டில் வைக்காம‌ல் அருகில் இருக்கும் அட்டைக‌ளை ஒவ்வொன்றாக திருப்பி, 13 உருவாக்க‌ முயற்சிக்க‌ வேண்டும்.

6. எப்பொழுது மீத‌முள்ள அட்டைக‌ள் வைத்து 13 உருவாக்க‌ முடியாதோ அல்ல‌து அனைத்து அட்டைக‌ளும் முடிந்து விட்டாலோ, விளையாட்டு முடிந்து விடும்.

 மூல‌ம்:

http://en.wikipedia.org/wiki/Pyramid_%28solitaire%29

நான் விதிமுறைக‌ளை தீஷுவின் வ‌ய‌திற்கு ஏற்ப‌ மாற்றியுள்ளேன்.


12 comments:

  1. Replies
    1. Thanks.. however I am not sure whether I deserve your comment as I look out for Ideas and just customize to my daughter's age, interest and capability..Thanks for your comment and visit.

      Delete
  2. விளையாட்டுபிள்ளை இனி உனக்கேது எல்லை?

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவியாழி கண்ணதாசன்.. உண்மை.. விளையாட்டுக்கு ஏது எல்லை?

      Delete
  3. நல்ல விளையாட்டு...

    குழந்தைகளுக்கு சொல்லித் தரலாம்... நன்றி...

    படம் தான் வரவில்லை... கவனிக்கவும்...
    (My Browser : Chrome)

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்..எனக்கு படம் வருகிறதே..உங்களுக்கு ஏன் வரவில்லை என்று தெரியவில்லையே..லோடு ஆக நேரமாகி இருக்குமோ?

      Delete
    2. இப்போது வருகிறது... நன்றி...

      Delete
  4. சுவாரஸ்யமான பகிர்வு
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ரமணி அய்யா..

      Delete
  5. நல்ல விளையாட்டு... மகளுக்குச் சொல்லித்தருகிறேன்....

    ReplyDelete
  6. விளையாடப் போறேன்.. 'அவர்கள் உண்மைகள்' கருத்தை வழிமொழிகிறேன்

    ReplyDelete
  7. நீ வேற கிரேஸ்.. நன்றிப்பா மறுமொழிக்கு..

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost