Thursday, April 25, 2013

சனி ஞாயிறு விடுமுறை விடும் பழக்கம் ஏன் ஏற்பட்டது ‍?

கி.ராஜ‌ நாராய‌ண‌ன் எழுதிய‌ "தாத்தா சொன்ன கதைகள்" சென்ற‌ முறை புத்த‌க‌க் க‌ண்காட்சியில் வாங்கினோம். சிறு க‌தைக‌ளின் தொகுப்பு. அதிலுள்ள‌ அனைத்துக் க‌தைக‌ளையும் சிறுவ‌ர்க‌ளுக்குக் கூற‌முடியாது என்ப‌து என் எண்ண‌ம். அதிலிருந்து ஒரு க‌தை. ப‌டித்து ரொம்ப‌ நாளாகி விட்ட‌தால் க‌தையின் பெய‌ர் நினைவில் இல்லை. அது ஒரு சோகக் க‌தை. ஆனால் என் ம‌க‌ளுக்குச் சொல்லுவ‌த‌ற்காக‌ ம‌கிழ்ச்சியான‌ க‌தையாக‌ மாற்றியுள்ளேன்.

 ஒரு ஊரில் ஒரு எறும்பு இருந்த‌து. ஒரு நாள் ம‌கிழ்ச்சியாக‌ ஆற்றுக்கு த‌ண்ணீர் குடிக்கச் சென்ற‌து. ஏன் ம‌கிழ்ச்சியாக‌ இருக்க‌ என்று ஆறு கேட்ட‌த‌ற்கு, வெகு நாட்க‌ளுக்குப் பிற‌கு என் ந‌ண்ப‌னை இன்று பார்த்தேன் அத‌னால் ம‌கிழ்ச்சியாக‌ இருக்கேன் என்ற‌து. எறும்பின் மகிழ்ச்சி ஆற்றுக்கும் தொற்றிக் கொண்ட‌து.

ஆற்றின் அக்க‌ரையில் இருந்த‌ ம‌ர‌ம், ஆற்றிட‌ம் ஏன் மகிழ்ச்சியாக‌ இருக்க‌ என்று கேட்ட‌த‌ற்கு, அக்க‌ரையிலுள்ள‌ எறும்பு வெகு நாட்க‌ள் க‌ழித்து இன்று த‌ன் ந‌ண்ப‌னைப் பார்த்து விட்ட‌து, எறும்பு ம‌கிழ்ச்சியாய் இருந்த‌து. அத‌னால் நான் ம‌கிழ்ச்சியாய் உள்ளேன் என்ற‌து. ஆற்றின் ம‌கிழ்ச்சி ம‌ர‌த்திட‌ம் தொற்றிக் கொண்ட‌து.

 ம‌ர‌த்தின் இலையை உண்ண‌ யானை ஒன்று வ‌ந்த‌து. யானை ம‌ர‌த்திட‌ம் ம‌கிழ்ச்சிக்குக் கார‌ண‌ம் கேட்ட‌வுட‌ன் ம‌ர‌ம், ‍ ஆறு ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌து, காரண‌ம் அக்க‌ரையிலுள்ள‌ எறும்பு ம‌கிழ்ச்சியாய் இருந்த‌து. எறும்பிட‌ம் ஆறு கேட்ட‌த‌ற்கு, எறும்பு த‌ன் ந‌ண்ப‌னை வெகு நாட்க‌ள் க‌ழித்து ச‌ந்தித்த‌தால் ம‌கிழ்ச்சியாக‌ இருப்ப‌தாக கூறிய‌து. எறும்பு ம‌கிழ்ச்சியாக‌ இருந்தால் ஆறு ம‌கிழ்ச்சியான‌து. ஆறு ம‌கிழ்ச்சியான‌தால் நான் ம‌கிழ்ச்சியானேன் என்ற‌து. மர‌த்தின் மகிழ்ச்சி யானையைத் தொற்றிக் கொண்ட‌து.

ப‌சியாறிய‌ யானை ஒரு ப‌சுவைச் ச‌ந்தித்த‌து. ப‌சு யானையிட‌ம் ஏன் மகிழ்ச்சியாக‌ இருக்க‌ என்று கேட்ட‌வுட‌ன் யானை, ம‌ர‌ம் ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌து. கார‌ண‌ம் ஆறு ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌து, ஆறு அக்க‌ரையிலுள்ள‌ ம‌கிழ்ச்சியாய் இருந்த‌ எறும்பிட‌ம் கேட்ட‌தற்கு, எறும்பு த‌ன் ந‌ண்ப‌னை வெகு நாட்க‌ள் க‌ழித்து ச‌ந்தித்த‌தால் ம‌கிழ்ச்சியாக‌ இருப்ப‌தாக‌க் கூறிய‌து. எறும்பு ம‌கிழ்ச்சியாக‌ இருந்தால் ஆறு ம‌கிழ்ச்சியான‌து. ஆறு ம‌கிழ்ச்சியான‌தால் ம‌ர‌ம் ம‌கிழ்ச்சியான‌து, ம‌ர‌ம் ம‌கிழ்ச்சியான‌தால் நான் ம‌கிழ்ச்சியானேன் என்ற‌து. யானையின் மகிழ்ச்சி மாட்டைத் தொற்றிக் கொண்ட‌து.

 ம‌கிழ்ச்சியாய் இருந்த‌ ப‌சு, த‌ன் வீட்டிற்கு சென்ற‌து. அத‌ன் முத‌லாளி ஒரு விச‌வாயி. அவ‌ன் ப‌சுவிட‌ம் ஏன் ம‌கிழ்ச்சியாய் இருக்க‌ என்று கேட்ட‌த‌ற்கு, யானை ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌து கார‌ண‌ம் மர‌ம் ம‌கிழ்ச்சியாய் இருந்த‌து, கார‌ண‌ம் ஆறு ம‌கிழ்ச்சியாய் இருந்த‌து, கார‌ண‌ம் அக்க‌ரையிலுள்ள‌ எறும்பு த‌ன் ந‌ண்ப‌னை வெகு நாட்க‌ள் க‌ழித்து ச‌ந்தித்த‌து என்ற‌து. எறும்பு ம‌கிழ்ச்சியாக‌ இருந்தால் ஆறு ம‌கிழ்ச்சியான‌து. ஆறு ம‌கிழ்ச்சியான‌தால் ம‌ர‌ம் ம‌கிழ்ச்சியான‌து. ம‌ர‌ம் ம‌கிழ்ச்சியான‌தால் யானை ம‌கிழ்ச்சியாய் இருந்த‌து. யானை ம‌கிழ்ச்சியாய் இருந்த‌தால் நான் ம‌கிழ்ச்சியானேன் என்று ப‌சு சொன்ன‌து. ப‌சுவின் மகிழ்ச்சி விவ‌சாயியைத் தொற்றிக் கொண்ட‌து.

விவ‌சாயியிட‌மிருந்து அவ‌ர் ம‌னைவி, ம‌னைவிட‌மிருந்து ம‌க‌ன், மக‌னிடமிருந்து ப‌ள்ளி ஆசிரிய‌ர் ம‌கிழ்ச்சிய‌டைவ‌ர். ம‌கிழ்ந்த‌ ஆசிரிய‌ர், அன்று ச‌னிக்கிழ‌மையான‌தால், அன்று ம‌ற்றும் அத‌ன் ம‌று நாள் கொண்டாட்ட‌ விடுமுறை விட்டுவிடுவார். க‌தை சொல்லும் பொழுது ஒவ்வொரு முறையும் புதுக் க‌தாப‌த்திர‌ங்க‌ள் வ‌ரும் பொழுது முழுத் தொட‌ரையும் சொல்லுவேன். ஆனால் எழுதுவ‌தற்கு முடிய‌வில்லை. :)). உங்க‌ளால் ப‌டிக்க‌வும் முடியாது என்று தெரியும்.

தீஷுவிற்கு மிக‌வும் பிடித்த‌மான‌ க‌தை. பாதியிலிருந்து அவ‌ள் சொல்ல‌த் தொட‌ங்கிவிடுவாள்.

 இந்த‌ க‌தையில் எந்த‌ முறை ம‌கிழ்ச்சி என்ற வார்த்தை வ‌ருகிற‌து என்ப‌தை யாராவ‌து ச‌ரியாக எண்ணிச் சொன்னால் மிக்க‌ ம‌கிழ்ச்சி அடைவேன்..!!!!‌

11 comments:

  1. ஆகா... இது ஒரு தொடர்கதை ஆயிற்றே... ரசித்தேன்...

    அரை சதத்திற்கு மூன்று குறைகிறதே மகிழ்ச்சி...

    மிக்க மகிழ்ச்சி...

    (ஐம்பதாவது) மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்... ஹிஹி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் வருகைக்கும், மகிழ்ச்சியை எண்ணியதற்கும்.. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்..

      அரை சதம் ஆக்கியதற்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.. எண்ணில‌ட‌ங்கா ம‌கிழ்ச்சி அடைந்தேன்..:-))

      Delete
  2. ம‌கிழ்ச்சியான‌.
    ம‌கிழ்ச்சியாக‌
    ம‌கிழ்ச்சியாக‌
    ம‌கிழ்ச்சியாக‌
    மகிழ்ச்சி
    மகிழ்ச்சியாக‌
    ம‌கிழ்ச்சியாய்
    ம‌கிழ்ச்சியாய்
    ம‌கிழ்ச்சி
    ம‌கிழ்ச்சிக்குக்
    ம‌கிழ்ச்சியாக‌
    ம‌கிழ்ச்சியாய்
    ம‌கிழ்ச்சியாக‌.
    ம‌கிழ்ச்சியாக‌
    ம‌கிழ்ச்சியான‌து.
    ம‌கிழ்ச்சியான‌தால்
    ம‌கிழ்ச்சியானேன்
    மகிழ்ச்சி
    மகிழ்ச்சியாக‌
    ம‌கிழ்ச்சியாக‌
    ம‌கிழ்ச்சியாக‌
    ம‌கிழ்ச்சியாய்
    ம‌கிழ்ச்சியாக‌
    ம‌கிழ்ச்சியாக‌
    ம‌கிழ்ச்சியான‌து.
    ம‌கிழ்ச்சியான‌தால்
    ம‌கிழ்ச்சியான‌து,
    ம‌கிழ்ச்சியான‌தால்
    ம‌கிழ்ச்சியானேன்
    மகிழ்ச்சி.

    ம‌கிழ்ச்சியாய்
    ம‌கிழ்ச்சியாய்
    ம‌கிழ்ச்சியாக‌
    ம‌கிழ்ச்சியாய்
    ம‌கிழ்ச்சியாய்
    ம‌கிழ்ச்சியாக‌
    ம‌கிழ்ச்சியான‌து.
    ம‌கிழ்ச்சியான‌தால்
    ம‌கிழ்ச்சியான‌து.
    ம‌கிழ்ச்சியான‌தால்
    ம‌கிழ்ச்சியாய்
    ம‌கிழ்ச்சியாய்
    ம‌கிழ்ச்சியானேன்
    மகிழ்ச்சி
    ம‌கிழ்ச்சிய‌டைவ‌ர். ம‌கிழ்ந்த‌

    ம‌கிழ்ச்சி
    ம‌கிழ்ச்சி அடைவேன்..!!!!‌


    இத்தனை தடவை...ஹி.ஹீ

    ReplyDelete
    Replies
    1. ந‌ன்றி ம‌துரை த‌மிழ‌ன்.. ம‌கிழ்ச்சி, ம‌கிழ்ச்சி,ம‌கிழ்ச்சி, ம‌கிழ்ச்சி, ம‌கிழ்ச்சி, ம‌கிழ்ச்சி, ம‌கிழ்ச்சி, ம‌கிழ்ச்சி, ம‌கிழ்ச்சி, ம‌கிழ்ச்சி.. ப‌ல‌ முறை ம‌கிழ்ச்சி அடைந்தேன் என்ப‌தை ம‌கிழ்ச்சியுட‌ன் தெரிவித்துக் கொள்கிறேன்..:‍))

      Delete
  3. உங்களுக்கு எண்ண கஷ்டம்னா நான் சொல்லி விடுகிறேன் 47 தடவை

    ReplyDelete
    Replies
    1. என் சோம்பேறித்த‌ன‌த்தை உல‌க‌மே அறிந்திருக்கிற‌தா? ந‌ன்றி..:‍))

      Delete
  4. கதை மிகப் பிடித்தது:). குழந்தைகள் மட்டுமல்ல சொல்லும் போது நாமும் எஞ்சாய் செய்யலாம்... இல்லை “மகிழ்ச்சி” அடையலாம்.

    ReplyDelete
  5. த‌ங்க‌ளுக்குக் க‌தைப் பிடித்திருந்த‌தை அறிந்து மிக‌வும் "ம‌கிழ்ச்சி" அடைந்தேன். ந‌ன்றி :‍))

    ReplyDelete
  6. மற்ற கருத்துரைகளைப் பார்ப்பதற்கு முன்பே 47 எண்ணி முடித்தபின்னே வந்தேன்..மகிழ்ச்சி :) மகிழ்ச்சியான கதை.

    ReplyDelete
  7. அடடா சனி ஞாயிறு விடுமுறைக்கு இதுதான் காரணமோ..இந்தப் பதிவிற்கு பதிலாய் வேறு கதை படித்து விட்டோமோ என்று மீண்டும் தலைப்பில் சொடுக்கினால்...அட, இப்படியா? சரியாத் தான் படித்திருக்கோம் என்று புரிந்தது :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிரேஸ்..இது புனைவு :-))

      Delete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost