Saturday, April 6, 2013

மாவிலேயே க‌லை வண்ண‌ம் க‌ண்டோம்..

க‌ளிம‌ண்ணில் நாம் அனைவ‌ரும் சிறு வய‌தில் ஏதோ ஒரு த‌ருண‌த்தில் விளையாண்டு இருந்திருப்போம். அத‌ன் சொர‌ சொர‌ப்பான‌ த‌ன்மையால் அது ஒரு ஸென்ஸோரிய‌ல் பொருள். தீஷுவின் த‌மிழ்ப் ப‌ள்ளியில் ஒரு நாள் க‌ளிம‌ண் ஸ்டுடியோவிற்கு கூட்டிச் சென்றார். அங்கு குழ‌ந்தைக‌ள் த‌ங்க‌ள் விருப்ப‌மான‌ ஒரு பொருள் செய்த‌ன‌ர். தீஷு ஒரு பூனை செய்தாள். அங்கு க‌ளிம‌ண் விற்ப‌னைக்கும் இருந்தது. க‌ளிம‌ண் வாங்கி வந்து வீட்டில் செய்ய‌லாம். அது இய‌ற்கையான‌து போல் தோன்ற‌வில்லை. அதை வேக‌ வைக்க‌ ஒரு வித‌மான‌ அடுப்பு தேவை. அத‌னால் நாம் செய்து முடித்த‌வுட‌ன் ஒவ்வொரு முறையும் அவ‌ர்க‌ளிட‌ம் எடுத்துச் செல்ல‌ வேண்டும். ஒவ்வொரு முறையும் எடுத்து செல்வ‌து என்ப‌து க‌டின‌மான‌ செய‌ல். வேற‌ ஏதாவ‌து முறையில் செய்ய‌லாம் என்று இணைய‌த்தில் தேடிய‌ பொழுது கிடைத்து கீழ்க‌ண்ட‌ முறை. அது இய‌ற்கைக்கு அருகில் கூட‌ செல்ல‌ முடியாது. ஆனால் ந‌ல்ல‌ அறிமுக‌மாக‌ இருக்கும்.

 தேவையான‌ பொருட்க‌ள்:

 1. 2 க‌ப் பேக்கிங் சோடா

 2. 1 க‌ப் சோள மாவு

3. 1 1/2 கப் குளிர்ந்த‌ த‌ண்ணீர்

செய்முறை :

முத‌லில் 3 பொருட்க‌ளையும் ஒரு பாத்திர‌த்தில் போட்டு கட்டி இல்லாம‌ல் க‌ல‌க்க‌ வேண்டும். அத‌ன் பின் அடுப்பில் வைத்து கிண்டிக் கொண்டே இருக்க‌ வேண்டும். த‌ண்ணீர் இல்லாம‌ல் சிறிது காட்டியாக‌ மாவு பத‌த்தில் வ‌ந்த‌வுட‌ன், அடுப்பிலிருந்து எடுத்து, சூடு த‌ணியும் வ‌ரை ஒரு ஈர‌த்துணி போட்டு மூட‌வும். ஈர‌த்துணி தண்ணீர் சொட்டும் அள‌வு இல்லாம‌ல், சிறிது ஈர‌மாக‌ இருந்தால் போதும்.




சூடு த‌ணிந்த‌வுடன், மாவு ச‌ற்று தண்ணீராகத் தோன்றினால், ச‌ற்று சோள மாவு க‌ல‌ந்து ச‌ப்பாத்தி மாவு ப‌தத்தில் வைக்க‌வும். சிறிது சிறிதாக‌ எடுத்துதேவையான‌து செய்ய‌லாம். மீத‌ம் உள்ள‌ மாவை காயாம‌ல் இருக்க‌ ஈர‌த்துணியால் மூடி வைத்திருக்க‌வும். மிக‌வும் மிருதுவாக‌ இருந்த‌து. மீன், பாத்திர‌ம், மூடி, ஸ்பூன் என்று தீஷு தோன்றிய‌தை செய்தாள்.



ஒரு நாள் முழுவ‌தும் காய‌ விட்டோம். ம‌றுநாள் சாதார‌ண‌மாக‌ வ‌ண்ண‌ம் தீட்டுவ‌து போல் பெயிண்ட்டால் தீட்டினோம். மீன் மீது ஒரு விரிச‌ல் இருந்த‌து. இன்னும் காய‌ விட்டிருக்க‌ வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் எங்க‌ளுக்கு ந‌ல்ல‌ ஒரு அனுப‌வ‌மாக‌ இருந்த‌து.




8 comments:

  1. இங்கே கிண்டிகளில் இப்படி மாவு பிசைஞ்சு ஆளுக்கொரு உருண்டைன்னு கொடுத்து பொம்மைகள் செய்கிறோம்.

    வீட்டில் என்றால் சப்பாத்தி செய்யும் தினங்களில் ஒரு உருண்டை மாவு மகளுக்கு:-)

    கடைகளில் ப்ளே டோ(Play Dough )என்று கிடைக்கிறது. பிசைஞ்சு ரெடியா இருக்கும். கைகளில் ஒட்டாது. பொம்மை செஞ்சு அனுபவிச்சு முடிந்தவுடன் மீண்டும் உருட்டி எடுத்து வச்சுக்கலாம். அதற்கான ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவில் போட்டால் ஆச்சு. பல நிறங்களில் கிடைக்குது.

    ReplyDelete
  2. அழகா இருக்குங்க... பொண்ணுகிட்டே செய்யச் சொல்றேன்... நன்றி...

    ReplyDelete
  3. மூடிப் பாத்திரம், ஸ்பூன், பூனை எல்லாமே அருமை. வண்ணப்படுத்தியது இன்னும் அழகு.

    ReplyDelete
  4. உன் வலைப்பூவைப் பார்க்கலாம் என்று வந்தால் வேறு எங்கோ வந்து விட்டோமோ என்று ஒரு வினாடி தோன்றி விட்டது..அழகான வடிவமைப்பு.
    தலைப்பு அருமை! செயல்பாடும் அருமை...தீக்ஷு செய்திருக்கும் விதம் அழகோ அழகு! தீக்ஷுவிற்கு பாராட்டுகள்! அருமை!அருமை!

    ReplyDelete
  5. மாவிலே கலை வண்ணம் மிக நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி துளசி கோபால் அவர்களே..இங்கேயும் playdough கிடைக்குது..ஆனால் வீட்டில் செய்வது இன்னும் மிருதுவாக இருக்குது..

    ReplyDelete
  7. நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே..

    வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ராமலஷ்மி மேடம்..

    ReplyDelete
  8. அருமையான மறுமொழி கிரேஸ்.. :-))

    வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கோமதி அரசு அவர்களே

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost