Friday, April 12, 2013

நட்ச‌த்திர‌ ஜ‌ன்ன‌லில்..

 எங்க‌ வீட்டுக் க‌ண்ணாடி க‌த‌வுக்கு நாங்க‌ள் செய்யிற‌ கொடுமை இருக்கே? அது வாய் இருந்தாலும் அழுதுவிடும். நாங்க‌ள் ஏதாவ‌து ஆர்ட் வொர்க் க‌ண்ணாடியில் ஒட்ட வேண்டுமென்றாலும், அந்த‌ க‌ண்ணாடிக்கு வ‌ந்த‌து சோத‌னை. சில‌ நேர‌ங்க‌ள் எங்க‌ளைத் த‌விர‌ வேறு யாரும் பார்க்க‌ முடியாத‌ நிலையிலிருக்கும் ஆர்ட் வொர்க்கால் அந்தக் க‌த‌வை அல‌ங்க‌ரிப்போம்(!). ஆனால் இந்த‌ முறை க‌ண்ணாடி க‌த‌வில் நாங்க‌ள் ஒட்டியிருப்ப‌து உண்மையாக‌வே அதை அல‌ங்க‌ரிக்கிற‌து.

க‌த‌வில் இருப்ப‌து ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் - காகித‌ ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் / பூக்க‌ள். சூரிய‌ ஒளி அத‌ன் மேல்ப‌டும் பொழுது அத‌ன் அழ‌கு ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ரிப்ப‌த்தாக என‌க்குத் தோன்றுகிற‌து. செய‌ல்முறை ஒரு புத்த‌க்த்திலிருந்து எடுத்த‌து. நாங்க‌ள் நான்கு முறையில் செய்தோம். ஓட்டியிருக்கும் பெரிய‌ பூவின் செய்முறை இங்கு உள்ள‌து. ப‌டித்துப் பார்த்தால் செய்முறை மிக‌வும் க‌டின‌ம் போல் தோன்றும். ஆனால் செய்வ‌து மிக‌வும் சுல‌ப‌ம்.



செய்வ‌த‌ற்கு தேவையான‌வை:

1. க‌ல‌ர் டிஷ்யூ பேப்ப‌ர் (டிரேஸிங் பேப்ப‌ர் போன்று மெலிதாக‌ இருக்கும்)

2. ப‌சை

3. ஸ்கேல் (பேப்பரை கிழிப்ப‌த‌ற்கு)

செய்முறை:

1. நாங்க‌ள் வாங்கிய‌ டிஷ்யூ பேப்ப‌ர் 20 இன்ச் * 20 இன்ச் இருந்த‌து. அதை 10 இன்ச் * 10 இன்சாக‌ கிழித்துக் கொண்டோம். அள‌வு முக்கிய‌மில்லை. ச‌துர‌மாக‌ இருக்க‌ வேண்டும். ந‌மக்கு எட்டு அல்ல‌து ப‌தினாறு பேப்ப‌ர்க‌ள் வேண்டும்.

2. ச‌துர‌ப் பேப்ப‌ரை ஒரு முறை ம‌டித்து, ஸ்கேலால் வெட்டிவிட்டோம். கத்திரியால் வெட்டும் பொழுது சில‌ நேர‌ங்க‌ளில் நேராக‌ வ‌ராது. இப்பொழுது ந‌ம்மிட‌ம் ஒரு செவ்வ‌க‌ம் இருக்கும்.


3. செவ்வ‌க‌த்தை மேலும் ஒரு முறை ம‌டிக்க‌ வேண்டும். அழுத்தித் தேய்க்க‌ வேண்டாம். ந‌ம‌க்கு ந‌டுப்புள்ளித் தெரிவ‌த‌ற்காக‌ ம‌டித்து இருக்கிறோம்.



4. ம‌டித்த‌தை விரித்து, ஒரு ஓர‌த்தை ந‌டுவிற்கு கொண்டு வ‌ர‌வும்.


  5. அதேப் போல், அடுத்த‌ ஓர‌த்தையும் ந‌டுவிற்கு கொண்டு வ‌ர‌வும்.


6. எதிர்ப்புற‌ ஓர‌ங்க‌ளையும் இவ்வாறு ம‌டிக்க‌வும்.

7. ம‌டித்த‌ ஓர‌த்தை மீண்டும் ந‌டுவிற்கு கொண்டு வ‌ர‌வும். ஒரு ப‌க்க‌த்திற்கு ம‌ட்டும் செய்தால் போதும். இத‌னை இத‌ழென‌க் கொள்வோம்.


8. இதுப் போல் 16 இத‌ழ்க‌ள் செய்ய‌ வேண்டும். நாங்க‌ள் ம‌ஞ்ச‌ளில் எட்டும், சிவ‌ப்பில் எட்டும் செய்து கொண்டோம்.

9. ப‌சை கொண்டு தூக்கியிருக்கும் ப‌குதிக‌ளை ஒட்டிவிட‌வும். ஒட்ட‌ வேண்டும் என்று அவ‌சிய‌மில்லை. ஒட்டினால், குழ‌ந்தைக‌ளுக்கு செய்வ‌த‌ற்கு எளிதாக இருக்கும்.

10. ந‌ட்ச‌த்திர‌ம் போல் செய்வ‌த‌ற்கு, ஒரு முறை ம‌ட்டும் ம‌டித்திருக்கும் ஓர‌ங்க‌ளை இணைக்க‌ வேண்டும்.

11. ஒரு இத‌ழின் ந‌டுக்கோட்டில் ம‌ற்றொரு இத‌ழின் ஒரு ப‌க்க‌த்தை வைக்க‌ வேண்டும். பார்க்க‌ப் ப‌டம்.



12. இவ்வாறு எட்டு இத‌ழ்க‌ளைவும் ஒட்ட‌ வேண்டும். எட்டாவ‌து இத‌ழ் ஒட்டும் பொழுது, ஏழாவ‌து இத‌ழ் மேல் ஒரு பக்க‌மும் முத‌ல் இத‌ழின் அடியில் ஒரு பக்க‌ம் இருக்க‌ வேண்டும். இப்ப‌டி ஒட்டினால் எதில் ஆர‌ம்பித்து எதில் முடித்தோம் என்று தெரியாது.

13. இதுவே பார்ப்ப‌த‌ற்கு ந‌ட்ச‌த்திர‌ம் போல் தான் இருக்கும். போதும் என்ப‌வ‌ர்க‌ள் நிறுத்திக் கொள்ள‌லாம்.



14. ப‌தினாறு இத‌ழ்க‌ள் செய்வ‌த‌ற்கு, வேறொரு வ‌ண்ண‌த்தில் இத‌ழை எடுத்து, ஒட்டுயிருக்கும் இர‌ண்டு இத‌ழ்க‌ளுக்கு ந‌டுவிலேயே ஒட்ட‌ வேண்டும்.

15. அடுத்த‌ இத‌ழ் ஒட்டுவ‌த‌ற்கு, ந‌டுவில் ஒரு இத‌ழை விட்டுவிட‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு இத‌ழ் 1க்கும் இத‌ழ் 2க்கும் இடையில் ஒட்டியிருந்தால், இத‌ழ் 2யும் இத‌ழ் 3யும் விட்டு இத‌ழ் 3றுக்கும் இத‌ழ் 4ழுக்கும் இடையில் ஒட்ட‌ வேண்டும். பார்க்க‌ப் ப‌ட‌ம்.


16. நான்கு இத‌ழ்களை இவ்வாறு ஒட்டிய‌வுட‌ன், இடையில் விடுப்ப‌ட்டு இருந்த‌ இத‌ழ்க‌ளின் ந‌டுவில் மீதியிருக்கும் நான்கு இத‌ழ்க‌ளை ஒட்ட‌வும்.

அழ‌கிய‌ பூ ரெடி.

 
இந்த‌ மாதிரி நட்ச‌த்திர‌ங்க‌ளின் விலை $15. http://www.etsy.com/listing/70910111/rainbow-mandala-window-star-sun-catcher.வாங்குவ‌தை விட செய்வ‌தில் ம‌கிழ்ச்சி அதிக‌ம் என்ப‌து என் எண்ண‌ம். ‌ செய்து பார்த்துச் சொல்லுங்க‌ளேன்...

6 comments:

  1. நட்சத்திர சன்னலில் வானம் எட்டிப் பார்க்குமே
    சில நட்சத்திரம் உன் வீட்டில் வந்தது எப்படி என்று நினைக்குமே! :)
    அழகு தியானா அழகு!

    ReplyDelete
  2. அழகு... அருமை...

    உங்களின் ஈடுபாடிற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நன்றி கிரேஸ்...

    நன்றி திண்டுக்கல் தனபாலன்..

    நன்றி வெங்கட்

    ReplyDelete
  4. உங்கள அழகுணர்ச்சி ஆச்சர்யபடுத்துகிறது. செய்முறை விளக்கமும் அருமை

    ReplyDelete
  5. வ‌ருகைக்கு ந‌ன்றி முர‌ளித‌ர‌ன்.. உங்க‌ள் ப‌க்க‌த்திலிருந்த‌ மாய‌ச்ச‌துர‌ங்க‌ள் 3*3 ம‌ற்றும் 4*4 அமைப்ப‌து எப்ப‌டி என்று ப‌டித்து என் மக‌ளுக்குச் சொல்லிக் கொடுத்தேன். மிக‌வும் ம‌கிழ்ச்சிய‌டைந்தாள். ந‌ன்றி.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost