இருமல் அதிகமாக இல்லாமல் இருந்ததால் தீஷுவை திங்கள் அன்று பள்ளிக்கு அனுப்பிவிட்டோம். பள்ளியிலிருந்து என் கணவரை அழைத்து, தீஷுவிற்கு காய்ச்சல் இருப்பதால் என்ன மருந்து கொடுக்க என்று கேட்டுயிருக்கிறார்கள். அடித்துப்பிடித்து நாங்கள் இருவரும் சீக்கிரம் கிளம்பி வீட்டிற்குச் சென்று, டாக்டரிடம் அழைத்துச் சென்றோம். மருந்து கொடுத்து மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மீண்டும் அழைத்து வரச் சொன்னார். செவ்வாய் விடுமுறை எடுத்து விட்டேன். புதன் அன்றும் மூன்று மணி நேரம் மட்டும் சென்று வந்தேன். இன்று கொஞ்சம் பரவாயில்லை. பள்ளிக்குச் சென்று இருக்கிறாள்.
செவ்வாய் மாலை எங்கள் இருவருக்கும் இரண்டு மணி நேரம் வரை ஆக்டிவிட்டீஸுக்குக் கிடைத்தது. நான் செய்ய வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தீஷுவிற்கு பொழுது போகவில்லையென்றவுடன் ஏதாவது ஆக்டிவிட்டீஸ் செய்யலாம் என்றாள். சரி என்று ஆரம்பித்தோம். இது முன்னமே செய்தது. CAT,DOG, போன்ற மூன்று எழுத்து படங்களை எடுத்துக் கொண்டோம். "Give me a picture with CUH-AUH-TUH" என்று சொன்னேன். நான் சொல்வதைப்புரிந்து கொண்டு அந்த படத்தை எடுத்துத்தர வேண்டும். இது வாசிப்பதற்குத் தேவையான blending கற்றுத்தருகிறது. தீஷு இந்த முறை சரியாகவும் விருப்பமாகவும் செய்தாள். மீண்டும் மீண்டும் வேறு வேறு படங்கள் மூலம் முயற்சித்துக் கொண்டுயிருந்தோம்.
Sorting தீஷுவிற்கு பிடித்த ஒன்று. இந்த முறை category sorting . முதலில் மூன்று பொம்மை காரும், மூன்று பொம்மை நாற்காலிகளும் எடுத்துக் கொண்டோம். முதலில் காரை எடுத்துக் காண்பித்து "This is a car" என்று சொல்லி தனியே வைத்தேன். அடுத்து "This is a chair...Not a car" என்று சொல்லி சற்றுத்தள்ளி வைத்தேன். மீண்டும் ஒரு நாற்காலி எடுத்து, "This is a chair" என்று சொல்லி அவள் பதிலுக்குக் காத்திருந்தேன். அவள் காட்டியவுடன் அந்த பிரிவில் வைத்தேன். இது புரிந்தவுடன் மீண்டும் மூன்று மனித பொம்மைகளையும், மூன்று விலங்கு பொம்மைகளையும் சேர்த்து "Chair", "Car", "Human being", "Animal" என்று பிரித்தோம்.
Games to play with 3 year old without anything
2 years ago
//இன்று கொஞ்சம் பரவாயில்லை. பள்ளிக்குச் சென்று இருக்கிறாள். //
ReplyDeleteநல்லது..தியானா!
பாப்பாவுக்கு முற்றிலும் குணமாகிவிட்டதா?
ReplyDeleteதீஷூவுக்கு இருமல் சரியாகி விட்டதா ? மிளகு, துளசி, பூண்டு, பனங்கற்கண்டு போன்றவற்றை எப்படியாவது உணவில் சேர்த்து கொடுங்கள். டானிக் களை விட இவை நல்ல பலன் அளிக்கின்றன.
ReplyDeleteநன்றி முல்லை.
ReplyDeleteநன்றி ஆகாய நதி. முற்றிலும் குணமாகிவிட்டது.
நன்றி சுந்தர். நாங்கள் வெள்ளை மிளகு, வால் மிளகு, சித்தரத்தை மேலும் பல பொருட்கள் சேர்த்து பொடி செய்து வைத்திருக்கிறோம். ஜலதோஷம் ஆரம்பிக்கும் பொழுதே அதை தேனில் கலந்து சாப்பிடுவோம். இருந்தாலும் தீஷுவிற்கு மாத மாதம் வந்து விடுகிறது.