சப்பாத்தி மாவு பிசையும் பொழுதும், தேய்க்கும் பொழுதும் தீஷுவின் தொந்தரவு அதிகமாக இருக்கும். அனைத்தையும் தான் செய்ய வேண்டும் என்பாள். அவளிடம் அதே போல் விளையாட்டு பொருட்கள் இருக்கின்றன. ஆனால் நான் உபயோகப்படுத்துவது வேண்டும். அவளுடைய களிமண்ணை (playdough) சமைக்க பயன்படுத்தும் பொருட்களில் வைத்து விளையாடுவதில் எனக்கு விரும்பமிருக்கவில்லை.
ஆகையால் அவளுக்கு மைதா மாவில் playdough செய்து கொடுத்தேன்.
தேவையான பொருட்கள் :
1. மைதா மாவு - 4 ஸ்பூன்
2. தண்ணீர் - 4 ஸ்பூன்
3. உப்பு - 2 ஸ்பூன்
4. எண்ணெய் - 2 ஸ்பூன்
5. Food colouring.
Food colouring தண்ணீரில் சேர்த்துக் கொண்டேன். மைதாமாவு, உப்பு போன்றவற்றை தீஷுவை அளக்க வைத்தேன். அனைத்தையும் ஒரு கிண்ணதில் போட்டு சிறிது சிறிது தண்ணீர் சேர்க்க வைத்தேன். முதலில் அவளாகவே பிசைந்தாள். பின்பு என் உதவி தேவைப்பட்டது. பிசைந்த பொழுதே அவளின் கைகள் சோர்வடைந்து விட்டதால், அவளால் அன்று விளையாட முடியவில்லை. மறுநாள் எடுத்து விளையாண்டாள். செய்து 10 நாட்களாகி விட்டன. பிரிட்சில் வைக்கவில்லை ஆயினும் இன்னும் மாவு கெடாமல், மிருதுவாக இருக்கிறது.
Bubbles
சோப்பு தண்ணீர் ஊதுவது தீஷுவிற்கு மிகவும் பிடித்தது. முன்பு சிறு வயதில் விளையாண்டது போல், சோப்பைக் கரைத்து அவள் அப்பா கொடுத்தார். ஆனால் தொடர்ந்து பபில்ஸ் வராததால் அவளுக்கு வருத்தம். நெட்டில் தேடிய பொழுது கிடைத்தது இந்த முறை.
தேவையான பொருட்கள் :
1. குழந்தைகள் Shampoo - 2 spoon
2. தண்ணீர்
3. Glycerin
Glycerin மருந்து கடைகளில் கிடைக்கிறது. சாம்பூவில் சிறிது சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பூனால் கலக்கிவிட வேண்டும். கலக்கும் பொழுது பபில்ஸ் வரக்கூடாது. பின் அதில் சிறிது( ஒரு துளீ) Glycerin சேர்க்க வேண்டும். 8 மணி நேரம் ஊறவிட்டப்பின் எடுத்து ஊதினால் கடையில் வாங்குவது போல் தொடர்ந்து நன்றாக வருகிறது.
playdough அழகாக பிசைந்திருக்காங்க தீஷூ!
ReplyDeleteஎன்னதான் விளையாட்டுபொருட்கள் இருந்தாலும் எது நிஜம்னு நல்லாவே தெரியுது அவங்களுக்கு....செல்ஃபோன், ரிமோட்-உம் அந்த லிஸ்ட்-ல் வரும்!! பபில்ஸ் - செய்முறைக்கு நன்றி..செஞ்சு பார்க்கிறேன்! :-)
பபில்ஸ் -... ம்.. நானும் முயற்சிக்கிறேன். யாழுக்கும் பபிள்ஸ் ரொம்ப விருப்பம்
ReplyDeleteபபிள்ஸ் செய்து பார்த்து விட்டு கூறுகிறேன்.
ReplyDeleteI really get admired in ur efforts Dhyana. I'm planning to try the procedure of making playdough at home. Hats of to u. Kirthika
ReplyDelete