கடந்த இரண்டு மூன்று வாரங்களாக ப்ளாக் படிப்பதற்கும் சரி, எழுதுவதற்கும் சரி நேரம் கிடைக்கவில்லை. ரீடரிலிருந்த பதிவுகளை படிக்கும் பொழுது தான் தற்பொழுது(?) உள்ள விருதுகள் பற்றி தெரிந்தது.
ஆகாயநதி சுவாரசிய வலைப்பதிவு விருது கொடுத்திருக்காங்க.
அமுதா சுவாரசிய வலைப்பதிவு விருதும், பெஸ்ட் ப்ஃரெண்ட் விருதும் கொடுத்திருக்காங்க.
நன்றிகள் பல.
தீஷுவிற்காகவே இந்த வலைப்பதிவு ஆரம்பித்தேன். பிற்காலத்தில் அவளின் குழந்தை பருவத்தைப்பற்றி அவள் தெரிந்து கொள்வதற்காக. முதலில் வலைப்பதிவை personalஆக வைத்திருக்கவே நினைத்திருந்தேன். பின்னர் அவளின் ஆக்டிவிட்டீஸ் மட்டும் இதில் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். வெறும் வெட்டுதல், ஒட்டுதல், கொட்டுதல் மட்டும் எழுதினால் சுவாரசியமாக இருக்காது என்பதும் தெரியும். ஆனால் ஒரு கலெக்ஷனாக இருக்கட்டும் என்று ஆரம்பித்தேன்.
அது எனக்கு நண்பர்கள் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இதுவரை என் வாழ்வில் கம்யூட்டர் சாட் வசதி உபயோகப்படுத்திய தருணங்களை எண்ணிவிடலாம். என் குடும்பத்தாரிடம் தவிர நெருங்கிய நண்பர்கள் ஒர் இருவரிடம் ஒர் இரு முறை பேசி உள்ளேன். இதுவரை ஆர்குட், பேஸ் புக், twitter, கூகுல் சாட் உபயோகப்படுத்தியதில்லை. நண்பர்களிடம் உரையாட விருப்பமில்லை என்பதில்லை. தொலைபேசியில் மட்டுமே பேசும் பழக்கம் உண்டு. சந்திக்க முடிந்த நண்பர்களை நேரில் பார்த்து பேசும் பழக்கம் உண்டு. அப்படி குணமுள்ள எனக்கு வலை மூலம் நண்பர்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கிறது. வலையில் அறிமுகமான சிலரிடம் போனிலும், சிலரிடம் மெயிலிலும் பேசியிருக்கிறேன். சிறு வயதில் பென் பிரெண்ட் கேள்வி பட்டவுடன் கிடைத்த த்ரிலிங், இந்த நட்பு உலகம் கொடுக்கிறது. நன்றிகள்.
விருது வாங்குவது போல் கொடுப்பதும் மகிழ்ச்சி தருவது. ஆனால் நான் ரொம்ப லேட்டா எழுதுறேன். கிட்டத்தட்ட அனைவரும் வாங்கிட்டாங்க. ஆதனால யாருக்கும் கொடுக்க முடியல. மன்னிக்கவும்.
Games to play with 3 year old without anything
2 years ago
வாழ்த்துகள் தியானா! :-)
ReplyDeleteவிருதுகளுக்கு வாழ்த்துக்கள். இன்னும் பல உயர்வுகளை அடைவீர்கள்.
ReplyDeletehttp://kgjawarlal.wordpress.com
தாமதமாக கிடைத்த விருது, ஒரு அன்னையின் பார்வையில் மகளின் தினசரி கவர்ந்த தருணங்களை , எந்த வார்த்தை பூச்சுகளும் இன்றி, அழகான இயல்பான உரைநடையில் எழுதும் உங்களுக்கு , இந்த விருது மிக பொருத்தமானதே.
ReplyDeleteவாழ்த்துகள்!:)
ReplyDeleteநன்றி முல்லை.
ReplyDeleteநன்றி Jawarlal
நன்றி சுந்தர்
நன்றி ஆகாய நதி
நன்றி அமித்து அம்மா