தீஷுவிடம் தினமும் இன்னைக்கு ஸ்கூலில என்ன பண்ணின என்றால் பஸில் என்று தான் பதில் வரும். ரைமிஸ் பாடுகிறாள். அவைத்தவிர அவள் பள்ளியில் நடந்ததைத் தெரிந்து கொள்ள முடியாது.
தீஷுவும் நானும் சில தினங்களுக்கு முன் டீச்சர் மாணவி விளையாட்டு விளையாண்டு கொண்டிருந்தோம். எப்பொழுதும் போல் தீஷுவே டீச்சர். அவள் நடவடிக்கைகள் மூலமும் வார்த்தைகள் மூலமும் அவள் பள்ளியில் என்ன செய்கிறார்கள் என்பதை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.
1. பள்ளியில் அனைத்து ஆக்டிவிட்டீஸும் சத்தமில்லாமல் செய்ய வேண்டும்
2. ஆக்டிவிட்டீஸ் செய்ய "மாட்டில்" மட்டுமே அமர வேண்டும்
3. வேலையை முடித்தவுடன், அனைத்தையும் எடுத்து வைத்தவுடன், மாட்டை இரண்டு கையால் சுருட்டி, இரண்டு கையால் எடுத்துக் கொண்டு வைக்க வேண்டும்
4. ஓரத்தில் நிற்க வைப்பது தான் தண்டனை. தண்டனையில் இருக்கும் பொழுது யாரும் அவருடன் பேச மாட்டார்கள்
5. ஆக்டிவிட்டி முடித்தவுடன் சைலன்ஸ் டைம்
6. அனைவரும் லைன் மேல் (லைன் வரைந்திருக்கிறார்கள்) உட்கார வேண்டும்
7. பிரையரின் பொழுது கை கூப்பி கண்ணை மூடி வேண்டும்
8. அப்பொழுது அமைதி காக்காமல் கத்துபவர்களை ஆன்ட்டி அழைத்துக் கொண்டு போய் விளையாட விட்டுவிடுவார்
9. "What colour do you like?", "What fruit do you like?" போன்ற கேள்விகள் (அவள் சொன்னது இவை இரண்டும்) கேட்டு குழந்தைகளைப் பேச வைக்கிறார்கள்
10. குழந்தைகள் விரும்பும் பாடல்கள் மட்டுமே பாடுகின்றனர்
11. செயல்முறைகளை செய்து காட்டிவிட்டு "Do you want to try?" என்று கேட்கின்றனர்
12. ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடுகின்றனர்
13. பஸிலை தூக்கி எறிந்தால் (?) அவள் சொன்னது புரியவில்லை. திரும்ப கேட்டதில் அவள் விளையாட்டு பாதிக்கப்பட்டதால் அவளுக்குச் சொல்வதில் விருப்பமிருக்கவில்லை.
ஓரளவு தெரிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.. சில நேரங்களில் இது போல் விளையாட்டால் பள்ளியில் நடப்பதை கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
Games to play with 3 year old without anything
2 years ago
பள்ளியில் ஆங்கிலம் மட்டுமே உரையாடல் மொழியாக இருப்பதால் , தமிழில் சரளமான உரையாடலுக்கு , குழந்தைகள் திணற மாட்டார்களா ? ஏனெனில் , பள்ளியில் திணற கூடாது என்பதற்காக , வீட்டிலும் நாம் ஆங்கில உரையாடலை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதை எப்படி நிவர்த்தி செய்வது ?
ReplyDeleteநாங்கள் வீட்டில் தமிழில் தான் பேசுவோம் சுந்தர். தீஷுவிற்கு மழலை மாறவில்லை என்றாலும் நன்றாக தமிழ் பேசுகிறாள். அவள் ஆங்கிலத்தில் தொடங்கினால் தான் நாங்கள் ஆங்கிலத்தில் பதில் சொல்லுவோம். இப்பொழுது ஆங்கிலமும் பேசுகிறாள். ஆனால் தப்பு அதிகமாக இருக்கிறது. ஒன்று இரண்டு கன்னட வார்த்தைகளும் பேசுகிறாள். அவர்கள் வயசுக்கு மொழி கற்பது எளிது. அதனால் பிரச்சனை இல்லை என்று நினைக்கிறேன்.
ReplyDelete:-) ரசித்தேன் தியானா! க்ளோஸ் யுவர் ஐஸ் என்று சொல்லிவிட்டு ஒன்றரைக் கண்ணால் எங்களைப் பார்ப்பாள்..பப்பு..அப்புறம், 'சாப்பிட்டு முடித்தால் தான் வீட்டுக்கு' என்றும் சொல்வாள்!! ஆயாம்மா சொல்வதாம் இது!!
ReplyDelete