இப்பொழுதெல்லாம் தீஷுவிடம் பல்பு வாங்குவது எங்கள் இருவரும் சாதாரண விஷயமாகி விட்டது. என் நினைவிலிருந்த இரண்டு சம்பவங்கள்:
1.
அம்மா அப்பாவிடம்,
அம்மா: இந்த வீக் எண்டுல பேண்ட் எடுக்கனும்.
அப்பா: ( எப்பொழுதும் போல் சுவாரஸ்யம் இல்லாமல்) ம்ம்ம்ம்ம்...
தீஷு : யாருக்கு பேண்ட்?
அம்மா : எனக்குத்தான்..
தீஷு : உங்கிட்டத்தான் நிறைய இருக்கே? இப்ப எதுக்கு வேஸ்ட்டா?
அம்மா: ????
அப்பாவுக்கு ஒரே சந்தோஷம்.
2.
சென்ற வாரம் ஒரு நாளில் என்னை பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டு, வீடு திரும்பும் பொழுது, தீஷு வண்டியிலிருந்து இறங்கும் பொழுது ஸைலன்ஸரில் கால் வைத்து விட்டாள். காலில் காயம் ஏற்பட்டுவிட்டது. டாக்டரிடம் மருந்து வாங்கி இருக்கிறோம். ஒரு வாரமாக எங்கள் வீட்டின் முக்கிய டென்ஷன் இது. அப்பா தீஷுவிற்கு புது மருந்து போட கூப்பிட்டார். தீஷு தண்ணீர் கேட்டதால் வெந்நீர் போட்டார். புது மருந்து பார்த்தவுடன் தீஷுவிற்கு அப்பொழுதே போட வேண்டும். அப்பாவுக்கோ வெந்நீர் ஆறி விடும் அதனால் குடித்து முடித்தவுடன் போடலாம் என்று.
அப்பா : இங்க பாரு.. ஆயின்மெண்ட்டில் என்ன எழுதியிருக்குனு.. Drink hot water and then apply ointment..
தீஷு : அப்படியா எழுதியிருக்கு? இல்லையே.. Apply ointment and then drink hot waterனு எழுதியிருக்கு..
அப்பா: ??????
Games to play with 3 year old without anything
2 years ago
பல மாதங்களாக தொடர்ந்து படிக்கும் வலைத்தளம் உங்களுடையது. தீஷுவின் வளர்வதை இவ்வளவு அழகாக பதிவு செய்வதைப் படிக்கும்பொழுது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
ReplyDeleteதொடர்ந்து நிறைய பல்புகள் வாங்குங்கள். அதை எங்களுக்கும் தெரியப்படுத்துங்கள். :)
:-)
ReplyDelete:-)))) தீஷூ கலக்கறாங்க!! சமயோசிதம்!!
ReplyDeleteநீங்களும் முல்லையும் பல்பு வாங்காட்டி எங்களுக்கு இந்த மாதிரி பதிவேல்லாம் கிடைக்குமா என்ன :)
ReplyDeleteகலக்கல்ஸ் ஆஃப் தீஷூவா இருக்கே... :)
ReplyDelete:)))
ReplyDeleteஇதுவரைக்கும் ஆச்சி, இப்ப நீங்க, இனிமே இந்த லிஸ்ட்ல நானும் வருவேன் :))))))))
:)))
ReplyDeleteநன்றி Sridhar Narayanan தங்கள் வருகைக்கும் உற்சாகமளிக்கும் வார்த்தைகளுக்கும்...
ReplyDeleteநன்றி சென்ஷி
நன்றி அமுதா
நன்றி முல்லை
நன்றி சின்ன அம்மிணி
நன்றி ஆகாய நதி
நன்றி அமித்து அம்மா... சீக்கிரமே வாங்க ஆரம்பிக்க வாழ்த்துகள்
நன்றி முத்துலெட்சுமி