வேலைக்குச் செல்ல ஆரம்பித்து நான்கு வாரங்கள் முடிந்து விட்டன. நான்கு வாரத்தில் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள். தீஷு உதவியாளருடன் பழகிவிட்டாள். இது நாள் வரை அவர் லீவு எடுக்கவில்லை. Touch wood. தினமும் காலையில் என்னை ஸ்டாப்பில் இறக்கி விட்டு, கணவர் தீஷுவை பள்ளியில் விட்டுவிடுவார். பின் தீஷு 1:30 மணி அளவில் வீட்டிற்கு வேனில் வரும் பொழுது உதவியாளர் வந்துவிடுவார். பின் அவர் நான் வரும் வரை தீஷுவைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த 20 வேலை நாட்களில், 4 நாட்கள் நான் டிரெயினிங்காக காலையில் சீக்கிரம் செல்ல வேண்டியிருந்தது. பாவம் அப்பா.. தனியே தீஷுவை ரெடியாக்கி (அவளை பள்ளிக்குக் கிளப்புவது தான் காலையில் பெரிய வேலை) பள்ளியில் விட்டுவிட்டார். அவருக்கு இரண்டு நாள் டிரெயினிங். எனக்கு அதே கஷ்டம். நான்கு நாட்கள் தீஷுவிற்கு பள்ளி விடுமுறை (கிருஷ்ண ஜெயந்தி, வர லெட்சுமி, சுதந்திர தினம் மற்றும் ஒரு நாள் பன்றி காய்ச்சல் பயத்தில் நான் அனுப்பவில்லை). உதவியாளர் வேறு வீட்டில் காலையில் வேலை பார்ப்பதால் காலையில் வர முடியாது. நான்கு நாட்களும் உதவியாளரை 12 மணி அளவில் வரச் சொல்லி, அது வரை கணவர் தீஷுவைப் பார்த்துக் கொண்டார். அதில் அவருக்கு ஆடிட் பிரச்சனை வேறு. எப்படியோ நாட்களைத் தள்ளி விட்டோம்.
எங்கள் ஆக்டிவிட்டீஸ் பொருத்தவரை தினமும் அரை மணி நேரம் வரை செலவிட முடிகிறது. ஆனால் எனக்கு prepare பண்ண அதிக நேரம் கிடைப்பதில்லை.
இன்று தீஷுவிற்கு கடுமையான ஜலதோஷம். நாளை திங்கட்கிழமை பள்ளிக்கு அனுப்பமுடியாது. நான் உதவியாளர் வரும் வரை இருக்கவேண்டும் என நினைக்கிறேன். வீட்டில் பெரியவர்கள் இல்லாமல் தீஷுவைப்பார்த்துக் கொள்வது கஷ்டமாகத்தான் இருக்கிறது. எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று இன்னும் பயம் இருக்கிறது. தீஷுவால் பிரச்சனை இல்லை. ஆனால் சூழ்நிலை சதி செய்கிறது. சமாளித்துக் கொள்ளலாம் என்ற சிறு நம்பிக்கையும் மனதில் உள்ளது. பார்ப்போம்.
Games to play with 3 year old without anything
2 years ago
புரிகிறது தியானா! ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கும்...அவ்வப்போது சமாளித்துக்கொண்டால் போதும்! தீஷூ வளர்ந்துவிட்டால்..அடுத்த வருடத்தில் இந்தச் சிக்கல்கள் குறையலாம்!நம்பிக்கைதான்! :-)
ReplyDeleteதீஷு அம்மா,
ReplyDeleteகவலை வேண்டாம்.
சளியை மட்டும் பார்த்துக் கொள்ளவும். துளசியை வேக வைத்த தண்ணீர் கொடுங்கள். இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.
/*ஆனால் சூழ்நிலை சதி செய்கிறது. சமாளித்துக் கொள்ளலாம் என்ற சிறு நம்பிக்கையும் மனதில் உள்ளது. */
ReplyDeleteகண்டிப்பாக முடியும்.
All the best.
ReplyDelete