Monday, August 10, 2009

ஈடுபாடு

கோர்த்த‌ல் (Stringing) க‌வ‌ன‌ ஒருங்கினைப்புக்கு மிக‌வும் ஏற்ற‌து. தீஷு அதில் ஆர்வ‌ம் காட்டுவ‌தில்லை. ஆகையால் ச‌ற்று வித்தியாச‌ப்ப‌டுத்தி கொடுக்க‌லாம் என்று எண்ணி ஒரு க‌ம்பில் கோர்க்க‌ச் சொன்னேன். ஆனால் அவ‌ளுக்கு விரும்ப‌மிருக்க‌வில்லை. பாசிக‌ள் ம‌ர‌த்திலான‌ பெரிய‌ அள‌விலான‌து. முத‌லில் அவ‌ற்றை அத‌ன் வ‌டிவ‌ங்க‌ளின் அடிப்படையில் அடுக்கினாள். பின்பு அவ‌ற்றை வைத்து க‌ட்டிட‌ங்க‌ள் உருவாக்கினாள். பின்பு இர‌ண்டை க‌யிறில் கோர்த்தாள். பின்பு எடுத்து வைத்து விட்டாள். ஆனால் எடுத்து வைக்கும் பொழுது செய்த‌து தான் என்னை ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்திய‌து.




எழுத‌ ப‌ய‌ன்படுத்தும் முத‌ல் மூன்று விர‌ல்க‌ளை ம‌ட்டும் ப‌யன்ப‌டுத்தி எடுத்தாள். பின்பு ஸ்லோலி அண்ட் ஸாஃப்ட்லி என்று சொல்லிக் கொண்டே மெதுவாக‌ வைத்தாள். அப்பொழுதும் அவ‌ள் வ‌டிவ‌ங்க‌ளின் அடிப்ப‌டையிலேயே அடுக்கினாள். அனைத்தையும் முடித்த‌வுட‌ன், க‌யிறைச் சுற்றுனாள் (அது ச‌ரியாக‌ வ‌ர‌வில்லை). அவ‌ளுக்குச் சுற்றியது போதும் என்று தோன்றிய‌வுட‌ன், ட‌ப்பாவை இர‌ண்டு கைக‌ளால் தூக்கிச் சென்று வைத்து விட்டாள்.



இதை அனைத்தையும் செய்வ‌த‌ற்கு அவ‌ளுக்கு அரை ம‌ணி எடுத்த‌து. அந்த‌ அரை ம‌ணி நேர‌மும் அவ‌ள் நான் அருகில் இருக்கிறேனா என்று க‌வனிக்க‌வில்லை. என்னை அழைக்க‌வும் வில்லை. ஒரு விஷ‌ய‌த்தில் விருப்ப‌த்துட‌ன் ஈடுப‌ட்டால் குழ‌ந்தைக‌ள் எடுத்துக் கொள்ளும் ஈடுபாடு (involvement) என்னை ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்திய‌து.

2 comments:

  1. /*ஒரு விஷ‌ய‌த்தில் விருப்ப‌த்துட‌ன் ஈடுப‌ட்டால் குழ‌ந்தைக‌ள் எடுத்துக் கொள்ளும் ஈடுபாடு (involvement) என்னை ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்திய‌து*/
    உண்மை.

    ReplyDelete
  2. :-) ஆமாம் தியானா...அவங்ககிட்டேயிருந்து கத்துக்கணும்...;-)

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost