உப்புத்தாளில் பட்டையை(சமையலில் உபயோகப்படுத்துவது) உரச செய்தேன். ஏதோ புக்கில் படித்தது. இரண்டு விதமான உப்புத்தாளை எடுத்துக் கொண்டோம். தீஷு மிகவும் விருப்பமாக செய்யவில்லை. உரசியதிலிருந்து நல்ல வசனை வந்தது. அதை வெகு நேரம் முகர்ந்து பார்த்துக் கொண்டுயிருந்தாள்.
சமையல் பாத்திரம் எடுக்க உதவும் இடுக்கியை வைத்து, ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்திற்கு சில பொருட்களை மாற்ற செய்தேன். நாங்கள் எடுத்துக் கொண்ட பொருட்கள் - ஸ்பூன், கிண்ணம், மூன்று வடிவத்திலான விளையாட்டு காய்கறிகள் மற்றும் ஒரு foam லேட்டர். ஸ்பூனையும் கிண்ணத்தையும் எளிதாக எடுத்துவிட்டாள். காய்கறிகள் எடுக்க முடியவில்லை. சிறிது நாட்களுக்கு பின் முயற்சி செய்ய வேண்டும்.
இட்லி தட்டை மாட்ட சிறிது நாளாக முயற்சி செய்து கொண்டுயிருந்தாள். இப்பொழுது மாட்ட வருகிறது. பாத்திரத்தின் அடியில் துளையிருப்பதால், அதை காம்பில் மாட்டுவது அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
Games to play with 3 year old without anything
2 years ago
குட் ட்ரை! உப்புத்தாளில் எழுத்துகள் கட் செய்து ட்ரேஸ் செய்வதுதான் அறிந்திருக்கிறேன். உரசுவது புதிய இன்ஃபோ! இடுக்கியும் குழந்தைகளை எளிதில் கவரும் ஒரு டூல் !!
ReplyDeleteஆமாம் முல்லை. நான் சமைக்கிறப்ப அவள் விளையாடுவது இடுக்கியை வைத்து தான்.
ReplyDeleteஇடுக்கி & இட்லி பாத்திரம் நல்ல ஐடியா. எப்பவுமே நாம பயன்படுத்தற பொருட்கள் என்றால் அவங்களுக்கும் ஒரு ஈடுபாடு வரும்
ReplyDeleteஅதுவும் புள்ளைய மடியில் வச்சுண்டே இட்லிதட்ட மாட்டுறது இன்னும் அழகுதான்!
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி அன்பு
ReplyDelete