Sunday, March 31, 2013

எங்க‌ள் வீட்டில் "பூத்த‌"ப் பூக்க‌ள் ‍ - 2



க‌டைக்குச் சென்று, ஈஸ்ட‌ரை முன்னிட்டு க‌டை மூடியிருந்த‌தால், தெருவில் உதிர்ந்து இருந்த‌ ம‌ல‌ர்க‌ளை நானும் தீஷுவும் அள்ளி வ‌ந்தோம்.

எடுக்கும் பொழுதே கொலாஜ் செய்ய‌லாம் என்று நினைத்திருந்தேன். நாங்க‌ள் முன்பே செய்திருந்த‌ கான்டாக்ட் பேப்ப‌ர்(contact paper) கொலாஜ் செய்தோம். கான்டாக்ட் பேப்ப‌ர் என்று Shelf lining ஸெக்ஷ‌னில் க‌டைக‌ளில் கிடைக்கும். ஸெல்லோ டேப் போன்று ஒரு ப‌க்க‌ம் ஒட்டும் த‌ன்மை உடைய‌து. ஒட்டும் ப‌குதி ந‌ம்மை நோக்கி இருக்கும் ப‌டி வைத்து ஒரு கண்ணாடி க‌த‌வில் டேப்பில் வைத்து ஒட்டிவிட்டோம். ஒவ்வொரு இத‌ழ்க‌ளாக‌ தீஷு ஒட்ட‌த் துவ‌ங்கினாள். சாதார‌ண பாலிதீன் பேப்ப‌ரில் கூட‌ செய்ய‌லாம். ஆனால் ஒவ்வொரு இத‌ழிலும் கோந்து ஒட்டி ஒட்ட‌ வேண்டும்.  

இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளில் தீஷு செய்வ‌தில் எவ்வ‌ள‌வு நேர்ந்தியாகி இருக்கிறாள் என்று பார்க்கும் பொழுது ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கிற‌து.     




7 comments:

  1. அருமையாக இருக்கிறது... பாராட்டுக்கள்...

    உங்கள் தளத்தில் Followers ஆகி விட்டேன்...

    மதுரையா...? அட.. நம்மூர்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிக்க நன்றி திரு.தனபாலன் அவர்களே.. நீங்களும் மதுரையா? அறிந்ததில் மகிழ்ச்சி..

    ReplyDelete
  3. எவ்வளவு அழகு! இப்படிச் செய்தால் நான் மேலும் மேலும் பூக்கள் உதிர்க்கிறேன் என்று பூச்செடி சொல்கிறது! கடையை மூடவும் செய்தி அனுப்பிவிட்டு :))

    ReplyDelete
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  5. நன்றி கிரேஸ்.. மறுமொழி கூட அழகாக எழுதுகிறாய் தோழி.. வாழ்த்திகள்..

    ReplyDelete
  6. நன்றி பூந்தளிர்

    நன்றி தனபாலன் அவர்களே.. சென்று பார்க்கிறேன்..

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost