சமீபத்தில் சிவகாமியின் சபதம் மீண்டும் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு பெண் ஒரு மாபெரும் அழிவிற்கு காரணம் என்ற சிவகாமியின் சபதத்தின் முடிச்சு என்னால் சற்று ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் கல்கியின் அருமையான நடைக்காக மீண்டும் ஒரு முறை வாசித்தேன். அதில் சிவகாமியின் தந்தை அஜந்தா ஒவியங்களில் உள்ளது போல மங்காத கலர் பூச்சுகள் செய்யும் செயல்முறைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டு இருப்பார். வீட்டில் நானும் தீஷுவும் சேர்ந்து செய்வது போல ஏதாவது எளிதான வகையில் பெயிண்ட் செய்யலாமா என்று வலையில் தேடிய பொழுது நிறைய தகவலகள் கிடைத்தன. மைதா மாவு, ஃபுட் கலரிங் என்று பல வகை.
நான் மிகவும் எளிதான ஒன்றை தேர்ந்தெடுத்தேன்.
தேவையானவை:
1. புதினா
2. சாக்பீஸ்
3. தண்ணீர்
புதினாவை நன்றாக அரைத்துக் கொண்டோம். வேறு கலருக்குப் பூக்கள் எடுத்துக் கொள்ளலாம். வீட்டில் புதினா இருந்ததால் அதனை எடுத்துக் கொண்டோம்.
நன்கு அரைத்த புதினாவுடன், சாக்பீஸ் சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து, தண்ணீர் சேர்த்தால் பெயிண்ட் தயார்.
நல்ல கெட்டியானப்பதத்தில் தாளில் வரைய ஏதுவாக இருந்தது. சில கற்கள் எடுத்து வந்து அதிலும் கலர் செய்தோம். போனஸ் - புதினாவின் மணம். அரைக்கும் பொழுதும் உபயோகிக்கும் பொழுதும் புதினாவின் மணம் மூக்கைத்துளைத்தது.
தீஷுவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அரைமணி நேரத்திற்கு மேலாக செய்து கொண்டிருந்தாள்.

Nice natural paint :)
ReplyDeleteஇது போல் வெங்காயத் தோல், தேங்காய் நார் ஆகியவற்றிலும் செய்யலாம்.
ReplyDeleteWow! What an idea madam Ji! :-)
ReplyDeletesuper!
Will try with Pappu!
Very nice idea Dhiyana! You have written well starting with Sivagamiyim sabadham and ajanta painting..wow great inspiration Dhiyana...I will try it..
ReplyDelete