அமுதா பட்டாம்பூச்சி விருது கொடுத்திருக்காங்க. நன்றி அமுதா.
தமிழ்மணம் எனக்கு நான்கு வருடங்களாகத் தெரியும் என்றாலும், நான் தொடர்ந்து படித்தது கிடையாது. படிக்கும் என் கணவரை திட்டியதும் உண்டு. தீஷுவின் குறிப்புகளை எழுதுவதற்கே நான் ப்ளாக் தொடங்கினேன். முதலில் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தேன். என் சொந்தங்களுக்கு படிக்க கஷ்டமாக இருந்ததால், தமிழிலில் எழுதத் தொடங்கினேன். தமிழ்மணத்தில் இணைக்கச் சொன்னது என் கணவர். பதிவை அவர் தான் இணைக்கவும் செய்தார். நன்றி என் கணவருக்கு.
விருதின் விதிப்படி ஏழு பேருக்கு நான் பகிர்ந்து கொடுக்க வேண்டும். நான் வாசிக்கும் பலர் ஏற்கெனவே வாங்கி விட்டார்கள். சில ஜாம்பவான்களிடமிருந்து வாங்க மட்டும் தான் முடியும். கொடுக்க முடியாது. ஆகவே நான் இரண்டு பேரிடம் மட்டும் பகிர ஆசைப்படுகிறேன்.
1. நிலா - நான் முதல் முதலில் பின்னோட்டம் போட்டது நிலாவுக்கு தான். எனக்கு முதல் பின்னோட்டம் வந்ததும் நிலாவிடமிருந்து தான். எனக்கு நிலா ப்ளாக்கில் பிடித்தது புகைப்படங்கள். நானும் புகைப்பட எடுக்கப் பழக வேண்டும் எனும் ஆசையை தூண்டியவை.
2. பட்டூ - அம்மாக்களின் வலைப்பூக்கள் மூலம் அறிமுகமானது. எனக்கு பிடித்தது - E-books, பாடல்கள், விடுகதைப் பற்றிய பதிவுகள். தொடர்ந்து எழுதியிருக்காங்கனு அடிக்கடி நான் செக் பண்ணும் ப்ளாக்.
தொடர்ந்து ஊக்குமளிக்கும் சந்தனமுல்லை, அமிர்தவர்ஷினி அம்மாவுக்கும் என் நன்றிகள்.
Games to play with 3 year old without anything
2 years ago
வாழ்துக்கள் உங்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும்
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்!! தீஷூக்கு சிறப்பு வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி அமுதா.
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி ஜமால்.
நன்றி சந்தனமுல்லை.
ஆஹா நோட் பண்ணாம விட்டுட்டேனே. உங்க பாசத்துக்கும் பட்டாம்பூச்சிக்கும் நன்னி நன்னி. :)
ReplyDeleteஇப்பல்லாம் டைப்பிஸ்ட் ஆன்லைன் வரதுக்கே சோம்பல் படறார். அதான் ஆண்ட்டி லேட். சாரி :(