முன்பு எண்ணும்,
அதற்குரிய அளவுள்ள வட்டங்களையும் வைத்து எண்ண கற்றுக் கொடுத்தேன். அதை ஒரளவு தீஷு பழகி விட்டதால், இப்பொழுது அடுத்த step. வெறும் எண்ணை மட்டும் வைத்து, அதற்குரிய கற்களை அவளாக வைக்க வேண்டும். முதலில் நான்கு எண்களை மட்டும் செய்தோம். தீஷு புரிந்து கொண்டவுடன், பத்து எண்கள் வரை செய்தோம்.

பத்து பாகங்கள் கொண்ட டப்பாவை எடுத்துக் கொண்டோம். முதலில் ஒன்று முதல் பத்து வரை வரிசையாக அடுக்க வேண்டும். அடுத்து எண்ணிற்குத் தகுந்தாற் போல், கற்களைப் போட வேண்டும். இது மாண்டிசோரியின் Spindle boxயை ஒத்தது. தீஷு சரியாக செய்தாள். எண்ணுவதற்குப் பழகி விட்டாள் என்று நினைக்கிறேன்.
அடுத்து அந்த எண் அட்டைகளை வைத்து, மெம்மரி விளையாட்டு விளையாண்டோம். ஒன்பது அட்டைகளை 3x3 யாக திரும்பி வைத்துக் கொண்டோம். ஒரே வரிசையிலுள்ள 3 எண்ணையும் பார்த்து விட்டு, அவளுக்கு அந்த எண்களை இரண்டு முறை சொன்னேன். அடுத்து அந்த 3 எண்களில் வரிசையை மாற்றி எடுத்து தர சொன்னேன். சரியாக செய்தாள். மெம்மரி விளையாட்டு புரிய ஆரம்பித்து விட்டது என நினைக்கிறேன்.
சின்ன பொண்ண கொடும படுத்தறிங்கன்னு சொல்லபோறேன்
ReplyDeleteஉண்மைய சொல்லுங்க உங்க அப்பா,அம்மாஉங்களை இப்படியா கொடுமப்படுத்தினாங்க.
உண்மையை சொல்லனும்னா என் சின்ன பொண்ணு இதை விருப்பப்பட்டு செய்யிறா. அவளுக்கு எப்ப விருப்பமில்லையோ அப்பவே நிறுத்திவிடுவோம் விளையாட்டுகளை. அவளை பொருத்த வரை இது எல்லாம் பொம்மைகள். டாய் வச்சி விளையாடலாமனு அவளே என்னைக் கூப்பிடுகிறாள்.
ReplyDeleteசுவாரசியம்!!
ReplyDeleteஅருமைங்க.
ReplyDelete