Saturday, June 15, 2013

உங்களால் முடியுமா?

நான்கு நாற்காலிகளை இணைத்து, அதன் மேல் பெட்ஷீட்கள் போட்டு ஒரு கூடாராம் செய்து, அதனுள் அமர்ந்து தீஷு டார்ச்லைட் வைத்து புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தாள்.  அவள் தோழி வர இருவரும் ஐந்து மணி நேரம் அந்தக் கூடாரத்தில் உட்கார்ந்து எழுதவும் வாசிக்கவும் செய்தனர். ஒரு புது சூழ்நிலை அவர்கள் ஆர்வத்தைத் தக்க வைத்தது.

இந்த இரண்டு மாத விடுமுறையில் தீஷுவை புத்தகம் வாசிக்க வைக்க, இந்த விளையாட்டு ஒரு ஐடியா கொடுத்தது. தீஷுவிற்கு ஒரு சவால். 125 புத்தகங்கள் வெவ்வேறு இடங்களில் (வீடு, Swimming pool, பார்க், ஸ்கூல் போன்றன) அமர்ந்து வெவ்வேறு விதமான புத்தகங்கள் வாசிக்க வேண்டும்.

நான் ஒரு லிஸ்ட் தயார் செய்திருக்கிறேன். யாருக்காவது வேண்டுமென்றால் ஏதாவது File Sharing ஸைட்டில் இணைக்கிறேன்.

உங்களால் 125 புத்தகங்கள் இரண்டு மாதங்களில் படிக்க முடியமா? என்னால் கண்டிப்பாக முடியாது. ஏனென்றால் என்னிடம் இரண்டு மாதங்களாக ஒரு புத்தகம் பத்து பக்கங்கள் மட்டும் படிக்கப்பட்டு இருக்கிறது.

தீஷுவிற்கு இந்த ஐடியா அவளால் தோன்றியது என்று தெரிந்தால், இனிமேல் எது செய்வதாக இருந்தாலும் யோசித்துச் செய்வாள் என்பது மட்டும் உறுதி. 


20 comments:

 1. பட்டியலை அனுப்பு தியானா, அதில் எதை எதை என் பையன் செய்யவில்லை என்று பார்க்கிறேன்.. :)

  ReplyDelete
  Replies
  1. ஹிஹி..கிரேஸ், அவன் இரண்டு மூன்று கண்டிப்பாக செய்திருக்க மாட்டான் like read with your sister etc. :-)). நன்றி உன் வருகைக்கு..

   Delete
 2. 125 புத்தகங்கள்...?!!!

  தீஷு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. அருமையான ஐடியா..பாராட்டுக்கள்..
  வாசிப்புப்பழக்கத்தை குழந்தைகளுக்கு வளர்க்க ..
  வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. நன்றி அம்மா உங்கள் உற்சாகமூட்டும் கருத்துரைக்கு..

   Delete
 4. அருமை. தீஷுவுக்கு வாழ்த்துகள்.

  நார்க்கட்டிலை நிமிர்ந்தி கால்கள் சுவரையொட்டியிருக்குமாறு நிற்க வைத்து, போர்வையால் மூடி வீடமைத்து மணிக்கணக்கில் விளையாடிய காலம் நினைவுக்கு வந்தது:)!

  ReplyDelete
  Replies
  1. ஆம் ராமலக்ஷ்மி மேடம்..நாங்களும் அது போல் விளையாண்டு இருக்கிறோம். நன்றி உங்கள் வருகைக்கு..

   Delete
 5. 125 புத்தகங்களா.....ஆவ்வ்வ்வ்

  இந்த விளையாட்டு இங்கேயும் நடக்கும்! என்னன்னா, அப்படி கூடாரம் இல்லன்னா எல்லைக்கோடு போட்டுட்டா அங்க போக எனக்கு அனுமதி இல்ல...:‍))

  சம்மர் லீவை தீஷூ நன்றாக எஞ்சாய் செய்யட்டும்! :‍)

  ReplyDelete
 6. Dhiyana

  Check in the library of your town. Normally they will have summer reading program,You have to keep the log(what book,date, how much you time you read etc) and get stamped there. If you completed that they will give certificate, which is very very encouraging for the kids.

  Kids will put a little paper on the library wall in their name on it. Every time they finish hour of reading they can get the sticker from the librarian and put it their paper. They are so proud of doing it.

  ReplyDelete
  Replies
  1. Thanks Agila for your comment. Yeah, I have already enrolled Dheekshu for the library program. It is just 12 hrs of reading for 2 months which I feel is very less. Hence I have planned for this.

   Delete
 7. There is some recommended reading list here.. hope it is useful

  http://www.actonmemoriallibrary.org/child.htm

  ReplyDelete
 8. Wow Agila.. Thanks a lot for the link. It will make my life easier.

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. This idea is awesome.. I will give it a try as well..
  I have become a huge fan of u & ur blog.. Ur perspective, style of writing & simplicity is very inspiring..
  And u r also making me read tamil :)

  ReplyDelete
 11. இப்படி ஏதாவது செய்துதான் சிறுசுகளைக் கவர வேண்டியிருக்கிறது.

  கூடாரம்.. சின்னக்குழந்தைகள் எல்லோருக்குமே மிகவும் பிடித்தமானதாக அமைந்து விடுகிறது :-)

  ReplyDelete
 12. ஆமாம் அமைதிசாரல், ஏதாவது செய்து தான் அவர்களைக் கவர வேண்டியுள்ளது. நன்றி உங்கள் வருகைக்கு..

  ReplyDelete
 13. ஆமாம் அமைதிசாரல், ஏதாவது செய்து தான் அவர்களைக் கவர வேண்டியுள்ளது. நன்றி உங்கள் வருகைக்கு..

  ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost