Tuesday, May 14, 2013

முத‌ல் ஓவிய‌ முய‌ற்சி

தீஷுவின் பிற‌ந்த‌ நாள் அன்று ஓவிய‌ம் செய்யும் பொழுது, ச‌ம்முவையும் இணைக்க‌லாம் என்று நினைத்திருந்தேன். ச‌ம்மு அனைத்தையும் வாயில் வைப்ப‌தால் அவ‌ளுக்காக‌ வீட்டில் பெயிண்ட் செய்ய‌ வேண்டும். அன்று என‌க்கு நேர‌மில்லை. அத‌னால் நேற்று வீட்டில் செய்த‌ பெயிண்ட் வைத்து ஓவிய‌ம் செய்தோம்.

 ச‌ம்முவின் வ‌ய‌திற்கு ஏற்ற‌து விர‌ல் ஓவிய‌ம். விர‌ல்க‌ளால் வ‌ரைவ‌து. தொடுத‌ல் உண‌ர்ச்சிக்கு ஏற்ற‌து. 


 பெயிண்ட் செய்ய‌ தேவையான‌ பொருட்கள் :

1. Corn flour - அரை க‌ப்

 2. குளிர்ந்த‌ நீர் - கால் க‌ப்

 3. கொதிக்கும் நீர் - ஒரு க‌ப்

 4. Food colouring

செய்யும் முறை :

1. குளிர்ந்த‌ நீரில் Corn flour - ஐ முத‌லில் க‌ரைத்துக் கொள்ள‌ வேண்டும்.

2. பின்பு சிறிது சிறிதாக‌ கொதிக்கும் நீரை ஊற்றிக் க‌ல‌க்கிக் கொண்டே இருக்க‌ வேண்டும்.

3. தேவையான‌ ‍அளவிற்கு கட்டியான‌வுட‌ன் கொதிக்கும் நீர் க‌ல‌ப்ப‌தை நிறுத்தி விட‌ வேண்டும். நான் இங்கு தவ‌று செய்துவிட்டேன். மிக‌வும் க‌ட்டியாகி விட்ட‌து.

4. க‌ல‌ரிங் சேர்க்க‌ வேண்டும்.

Love என்று டேப்பால் நானும் தீஷுவும் எழுதி வைத்திருந்தோம். சிறிது பெயிண்ட் எடுத்து கான்வ‌ஸில் போட்டுக் கொடுத்தோம். தொட்ட‌வுட‌ன் ச‌ம்முவிற்கு பிடிக்க‌வில்லை. எழுந்து சென்று விட்டாள். மீண்டும் சிறிது நேர‌த்திற்கு பின் திரும்ப‌ வ‌ந்து தொட்டுப் பார்த்தாள். பிடிக்க‌வில்லை. முத‌ல் ஓவிய‌ முய‌ற்சி இனிதே இவ்வாறு முடிந்த‌து.



 தீஷு ‌ பெயிண்ட்டை வைத்து விளையாண்டு கொண்டிருந்தாள். விர‌ல்க‌ளால் ஏதோ ஒன்று வ‌ரைந்திருக்கிறாள் ப‌ட்டாம்பூச்சி என்று நினைக்கிறேன்.



ச‌ம்மு சாப்பிட்டு முடித்த‌வுட‌ன், மீத‌மிருக்கும் உண‌வை, அது திர‌வ‌ நிலையிலிருந்தால், விளையாட‌ கொடுப்ப‌து என் வ‌ழ‌க்க‌ம். கீழேயும் மேலேயும் கொட்டி தேய்த்து வ‌ரைந்து கொண்டிருப்பாள். அத‌னால் இது அவ‌ளின் முத‌ல் முய‌ற்சி என்று சொல்ல‌ முடியாது.

சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் மீதமிருந்த‌ க‌ஞ்சியை வைத்து ஸ்டூலில் கொட்டி அவ‌ள் செய்த‌ முதல் ஓவிய‌ம்.





த‌யிர் வைத்து ச‌ப்புக் கொட்டிக் கொண்டு அவ‌ள் செய்த ஓவிய‌ம்.



அடுத்த‌ முறை ச‌ற்று த‌ண்ணீராக‌ பெயிண்ட் வைத்து முய‌ற்சி செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்.


13 comments:

  1. சேமித்து வையுங்கள் பெட்டகத்தில் தியானா நாளை மிகச்சிறந்த ஓவியங்கள் படைக்கலாம் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்..

      Delete
  2. அருமை!!!

    குட்டியா ஒரு ஏப்ரன் மாட்டி விடுங்க.

    நம்ம வீடு முழுக்க கிண்டியில் வரைஞ்ச ஓவியங்களே ஒரு காலத்தில்:-)

    ReplyDelete
    Replies
    1. நல்ல யோசனை.. நன்றி துளசி அவர்களே

      Delete
  3. ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்..

      Delete
  4. அருமை தியானா!
    ஆல்வின் செய்த உணவு ஓவியங்கள் நினைவில் வருகின்றன..தயிர் வைத்து ஒரு ஓவியம் வைத்துள்ளேன் :) தீக்ஷுவின் பட்டாம்பூச்சியும் அழகு..

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிரேஸ்.. ஆல்வின் குட்டியின் படங்களைக் காண ஆவலாக உள்ளேன்..

      Delete
  5. Lovely Dhiyana..

    தப்பா எடுத்துக்கலைன்ன ஒரு சின்ன வார்த்தை..குழந்தைக்கு கழுத்துல செய்ன் போடாதீங்க தியானா. நாம பார்க்காதப்போ எங்கயாவது மாட்டி குழந்தை இழுக்க முயற்சி செஞ்சா காயம் ஆயிடும்.. Chocking hazard too..

    ReplyDelete
    Replies
    1. தப்பா எடுத்துக்க இதில் என்ன இருக்கு Agila. Did not strike me as I used to wear for Dheekshu too. Even the doctor did not point out during the visit. I will remove it Agila though it is a big process to hold her :-))). Thanks..

      Delete
    2. குழந்தைக்கு ஆசையா போட்டு விட்டுருப்பீங்களேன்னு ஒரு தயக்கம்.இது எனக்கு ஒரு pediatrician சொன்னது தான்.

      Delete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost