தீஷுவிடம் சமீபத்திலுள்ள சில மாற்றங்கள்.
1. ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகி இருக்கிறது. ஆங்கிலமும் தமிழும் ஒரே வாக்கியத்தில் வருகின்றன. "Duck is on Dheekshitha's தோள்" என்றாள். சிறிது நேரத்திற்கு பிறகு "Duck is on Dheekshitha's shoulders" என்றாள்.சில வார்த்தைகளும், வாக்கியங்களும் ஆச்சரியப்படுத்துகின்றன. prepare, scribble, shout, enough, போன்றவையும், "I want to clean up the mess" போன்றவையும். "I don't know", I like, I want போன்றவை சாதாரணமாக வருகிறது.
2. தன்னிடம் சொல்லப்படுபவைகளை, அடுத்தவர்களுக்கு சொல்கிறாள். ஸ்னோல பாத்து நட என்றதை, அவள் அப்பாவிடம் ஸ்னோல பாத்து நட விழுந்திடுவ என்று சொல்லத் தெரிகிறது.
3. நட்சத்திரத்தில் வீனஸ் கரெக்டாக கண்டுபிடிக்கத் தெரிகிறது. ஸ்னோ தண்ணீராகும் என்று புரிகிறது.
4. Pant, Jacket (including zipper), குல்லா, gloves, shoe எல்லாம் தானாக போடத் தெரிகிறது. தானாகவே தன் வேலையை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.
5. Creative play அதிகமாகி விட்டது. டாக்டர் விளையாட்டு, தன் செப்பு பாத்திரத்தில் சமைப்பது போன்றவை. நான் டாக்டர் என்றால், டாக்டர் என்று தான் கூப்பிடுகிறாள். நானும் அவ்வாறே அவளை கூப்பிட வேண்டும்.
6. எப்படி கேட்டால் கிடைக்கும் என்று தெரிகிறது. Chips அதிகமாக சாப்பிட கொடுப்பதில்லை என்பதால், கேட்கும் பொழுதே மெதுவான குரலில் இது தான் கடைசி தடவை என்கிறாள்.
7. வாசிபதற்கு ஆர்வம் காட்டுகிறாள். ஆனால் இன்னும் concept புரியவில்லை.
8. தன் ஸ்டுலில் ஏறி நின்று, ஜன்னல் வழியே அடிக்கடி வேடிக்கைப் பார்கிறாள். ஸ்டுலில் நின்றி, sinkகில் தானே கையை சுத்தப்படுத்துகிறாள்.
9. ஏதோ கீழே விழுந்து உடையாமல் போனதற்கு, நல்ல வேளை என்றாள்.
10. Where is thumbkin என்ற பாடலை போலவே, where is notebook என்று பாடிக் கொண்டேத் தேடினாள். கிடைத்தவுடன் சரியாக, "Here I am" என்பதை, "Here it is" என்று மாற்றி பாடினாள்.
Games to play with 3 year old without anything
2 years ago
//Duck is on Dheekshitha's தோள்"
ReplyDelete:-))
//கிடைத்தவுடன் சரியாக, "Here I am" என்பதை, "Here it is" என்று மாற்றி பாடினாள்.
nice. nice to watch kids grow.
நல்ல கலெக்ஷன்!!
ReplyDelete//Duck is on Dheekshitha's தோள்" என்றாள். சிறிது நேரத்திற்கு பிறகு "Duck is on Dheekshitha's shoulders" என்றாள்.//
:-)) liked this!!
//"Here it is" என்று மாற்றி பாடினாள்.//
செம!!
ஆமாம் அமுதா. தினமும் ஏதாவது மாற்றங்கள்.
ReplyDeleteநன்றி முல்லை.
Where is thumbkin என்ற பாடலை போலவே, where is notebook என்று பாடிக் கொண்டே தேடினாள். கிடைத்தவுடன் சரியாக, "Here I am" என்பதை, "Here it is" என்று மாற்றி பாடினாள் //
ReplyDeleteExcellent improvement
choo chweeeeet dheeshu
நன்றி அமித்து அம்மா.
ReplyDelete