தண்ணீரில் போடப்படும் பொருட்களில் எவையெல்லாம் மூழ்கும், எவையெல்லாம் மூழ்காது என்பதைக் கண்டுபிடிக்க, சில மூழ்கும் பொருட்களையும், சில மூழ்காதப் பொருட்களையும் எடுத்துக் கொண்டோம். வரிசையாக ஒவ்வொன்றாக தண்ணீரில் போட்டோம். போடுவதற்கு முன் மூழ்குமா மூழ்காதா என்று கேட்பேன். கிட்டத்தட்ட எல்லாவற்றிற்கும் மூழ்காது என்றே பதில் சொன்னாள்.
மூழ்கும்/மூழ்காது முதல் ஸேஸன் முடிந்து ஒன்று இரண்டு வாரங்களான நிலையில், நேற்று, மீண்டும் செய்தோம். இந்த முறை மிதக்கும் கிண்ணத்தைப் போட்டு, அதில் அதிக கனமில்லாத வெட்டின ஸ்ட்ரா போட்டுக் கொண்டே வந்தோம் எப்பொழுது மூழ்கும் என்பதை கவனிக்க. ஆனால் ஸ்ட்ராவால் மூழ்கவில்லையென்பதால், கண்ணாடி கற்களைப் போட்டு மூழ்கடித்தோம். தீஷு புரிந்துக் கொண்டாள் என்று நினைக்கிறேன்.
சிறிது நேரம், அவள் இஷ்டப்படி தண்ணீரில் விளையாட விட்டேன். ஸ்ட்ராவை தண்ணீரில் போட்டும், தண்ணீரை மாற்றி ஊற்றியும் விளையாண்டுக் கொண்டிருந்தாள். அப்பொழுது தான் ஸ்ட்ராவை, கண் கரண்டி (எண்ணெய் பட்சணம் எடுக்கப் பயன்படுத்தப்படும் கரண்டி) கொண்டு ஸ்ட்ராவை எடுக்கச்சொன்னேன். விரும்பமாக திரும்ப திரும்ப செய்துக் கொண்டிருந்தாள்.
ஓ! நமக்கு ஒரு குட்டி ஆராய்ச்சியாளர் கிடைச்சிடுச்சா
ReplyDeleteகுட்டி அம்மா உன்ன வச்சி காமடி கீமடி பண்ணலயே!!!!!
ReplyDeleteஎன்ன ரிதன்யா இப்படி கேட்டீங்க.. எனக்கும் கொஞ்சம் பொழுது போகனும்ல..
ReplyDelete