மாண்டிசோரியில் Pouring activities - ஒரு குடுவையிலிருந்து மற்றொரு குடுவைக்கு மாற்றுதல் Co-ordination + concentration மேம்படுத்த செய்யப்படுகிறது. அதில் இரண்டு வகை உள்ளது - Dry pouring (ஈரமில்லாத பொருட்களை ஊற்றுதல்), Wet pouring (ஈரமுள்ள பொருட்களை ஊற்றுதல்). முதல் படி - Dry pouring - அதற்கு அரிசி, பட்டாணி போன்றவற்றை உபயோகப்படுத்தலாம். ஊற்றும் பொழுது கொட்டமல் ஊற்ற வேண்டும். தீஷு ஒரளவுக்கு Dry pouring செய்யப் பழகி விட்டதால் நாங்கள் Wet pouring செய்தோம்.
ஒரு டம்ளரிலிருந்து மற்றொரு டம்ளருக்கு தண்ணீரை மாற்ற வேண்டும். இரண்டு மூன்று அளவுகளில் டம்ளர் கொடுத்தேன். ஒரு டம்ளர் நிறைந்து விட்டால் நிறுத்தப் பழகவும், வெவ்வேறு அளவு டம்ளர்கள் வெவ்வேறு அளவு தண்ணிர் கொள்ளும் போன்றவற்றை விளக்குவதற்காக. கீழே கொட்டும் தண்ணீரை துடைக்க வேண்டும் என சொன்னவுடன், ஒவ்வொரு சிறு சிந்தளுக்கும், துடைத்துக் கொண்டு இருந்தாள். மிகவும் ரசித்து தண்ணீர் தீரும் வரை செய்து கொண்டுயிருந்தாள்.
No comments:
Post a Comment