Thursday, October 2, 2008

Spooning ஐஸ்

முன்பே ஐஸ் வைத்து விளையாடி இருக்கிறோம். இப்பொழுது ஐஸை ஸ்பூன் மூலம் ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். ஐஸ் ட்ரையில் வைப்பதற்கு முன்னால், தீஷுவை விட்டு சிறிது Food colouring சேர்க்க வைத்தேன். முதலில் ஒரு பெரிய கரண்டியால் மாற்ற சொன்னேன். எளிதாக செய்து முடிக்கவே, ஸ்பூன் மூலம் மாற்ற செய்தேன். முதலில் கஷ்டப்பட்டாலும் பிறகு பழகி விட்டாள். தண்ணீர் ஊற்றி, மிதக்கும் ஐஸை மாற்றினோம். பிறகு கலர் மூலம் பிரித்தோம். Fun activity. இப்பொழுது எல்லாம், என்ன பண்ணலாம் என்றால், தண்ணி வச்சி விளையாடலாம் அம்மா என்று பதில் வருகிறது.

4 comments:

  1. உங்கள் பதிவுகள் எல்லாமே மிகவும் சுவாரசியம். மிகவும் இன்ஃபர்மேட்டிவ்.
    மாண்டிசோரி அணுகுமுறையை விரும்புபவள் நான். ஏதாவது, நல்ல மாண்டிசோரி புத்தகங்களை பரிந்துரைக்க முடியுமா? நன்றிகள் இன் அட்வான்ஸ்!!

    தீஷூ ரொம்ப க்யூட்!!

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி கார்த்திக்.

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி சந்தனமுல்லை. நான் வாசித்ததில் எனக்கு மிகவும் பிடித்தமானவை -

    1. Teaching Montessori in the home : the pre-school years by Elizabeth Hainstock.
    2. How to raise an amazing child the Montessori Way by Tim Seldin
    3. Teach me to do it myself: Montessori activities for you and your child by Maja Pitamic
    4. Montessori play and learn: a parent's guide to purposeful play from two to six by Lesley Britton
    5. Montessori today : a comprehensive approach to education from birth to adulthood by Paula Polk Lillard
    6. Montessori and your child : A primer for Parents by Terry Malloy

    நீங்களும் படித்துப் பார்த்து சொல்லுங்கள்.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost