காசுகளை சுத்தம் செய்தோம் (அரசாங்கத்திற்கு எங்களால் முடிந்த உதவி). மிதமான சூட்டிலான வெந்நீரீல் Baking soda கரைத்து, அதில் காசுகளை போட்டுக் கொண்டோம். காசுகளை பிரஷினால் தேய்த்து, இன்னொரு கிண்ணத்திலுள்ள சுத்தமான தண்ணீரில் போட வேண்டும். சுத்தமான தண்ணீரிலிருந்து எடுத்து ஒரு துணியில் போட்டு உலர்த்த வேண்டும். விருப்பமாக மூன்று நான்கு தடவைக்கு மேலாக செய்து கொண்டுயிருந்தாள்.
Sound sorting - மாண்டிசோரி முறையில் செய்யும் ஒரு விளையாட்டு. ஒரேவிதமான ஆறு டப்பாக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு இரண்டு டப்பாக்களில் ஒரே அளவு ஒரே பொருளைக் கொண்டு நிரப்ப வேண்டும். உதாரணத்திற்கு - பட்டன், பாசி, பருப்பு, அரிசி முதலியன. சத்தத்தைக் கொண்டு எந்த இரண்டு டப்பாக்களில் ஒரே பொருள் இருக்கின்றன என்று குழந்தைகள் கண்டுபிடிக்க வேண்டும். தீஷீவிற்கு பிரிக்கும் அளவிற்கு புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. அதனால் மூன்று டப்பாக்கள் எடுத்துக் கொண்டேன். ஒரு டப்பாவில் ஒன்றும் வைக்கவில்லை. ஒன்றில் ஒரே ஒரு பாசி. மற்றொன்றில் நிறைய பாசி. நான் கேட்கும் டப்பாவை(சத்தமில்லை, ஒரு பாசி, நிறைய பாசி) அவள் எடுத்து தர வேண்டும். நன்றாக செய்தாள்.
நல்ல விஷயங்களைக் கற்றுத் தருகிறீர்கள். மிக்க நன்றி! நான் உங்கள் பதிவு முழுவதையும் காப்பி செய்து வைத்து ஊருக்கு செல்லும் போது மனைவியிடன் கொடுக்க உள்ளேன். மிக்க நன்றி!
ReplyDelete(பரிந்துரை செய்தது கயல்விழி முத்துலட்சுமி அக்கா!)
முதல் வருகைக்கு நன்றி தமிழ் பிரியன். உங்கள் ஊக்குவிற்பிற்கும் நன்றி.
ReplyDelete