என் முதல் பதிவின் அனுபவம் பற்றி எழுதச் சொல்லி கிரேஸ் என்னைத் தொடர் பதிவில் இணைத்து இருக்கிறார்கள். எனக்கு முதல் பதிவு அனுபவம் இரண்டு பதிவுகளால் உண்டு.
2005 - யில் ப்லாகும், தமிழ்மணமும் எனக்கு என் கணவர் மூலம் அறிமுகமானது. ஆனால் தொடர்ந்து ப்லாக் படிக்கும் வழக்கம் எனக்கு அப்பொழுது இல்லை. என் கணவர் இணைத்தில் நேரம் செலவளிக்கிறார் என்று அவரை திட்டியதும் உண்டு.
2008 - டில் என் குழந்தையுடன் செலவிடும் நேரத்தையும், அவளுடன் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகளையும் பதிவு செய்ய வழிமுறையை யோசித்த பொழுது என் கணவர் கொடுத்த யோசனை தான் ப்லாக். மிகுந்த யோசனையுடனே ஆரம்பித்தேன். முதலில் ஆங்கிலத்தில் எழுதினேன். என் முதல் பதிவு எதற்கு இந்த ப்லாக் என்று ஒரு அறிமுகப் பதிவு. Little life என்ற பெயரில் எழுதினேன்.
"My Preschool daughter's journey" என்ற முதல் பதிவு இது தான்..
My 2 years old daugther Dheekshu is going to playschool for 3 half days a week. However I want to be a part of my daughter's learning activities as we both enjoy the same. So we try to spend most of the time together, when she is at house doing some activities. I want to record her activities, challenges, achievements in this blog.
இரண்டு மாதங்களுக்குப் பின்னால் தமிழில் எழுதி தமிழ்மணத்தில் இணைத்தேன். சிலர் படித்தை அறிந்து அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. முதல் பதிவு தமிழில் என்ற என் முதல் தமிழ் பதிவை இன்று வரை 28 பேர் பார்த்திருக்கிறார்கள் :)). ஆங்கிலம், தமிழ் என்று எனக்கு இரண்டு முதல் பதிவுகள் உள்ளன. முதல் பதிவு தமிழில் எழுதி இணைத்துவிட்டதும் ஏதோ பெரிதாக சாதித்த மகிழ்ச்சி.
இந்த ஐந்து வருட காலத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் சேர்த்து 392 பதிவுகள் எழுதியிருக்கிறேன். எழுத ஊக்கம் அளிக்கும் என் நண்பர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிவு எழுதுவதே ஒரு மகிழ்ச்சியான விஷயம். அதிலும் முதல் பதிவு என்பது விசேஷமானது. அதை மனதில் அசைப்போட வைத்த தோழி கிரேஸ் மற்றும் தொடர்பதிவு தொடங்கியவருக்கு என் நன்றிகள்.
யாராவது இதுவரை எழுதாமல் இருந்தால் தொடருங்களேன்.
vaazhththukkal :-)))
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மங்குனி அமைச்சர்!!!
Deleteதொடர வாழ்த்துகள்
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராஜி
DeleteVery very happiest moment to see the first blog-post which I have also enjoyed.
ReplyDeleteநன்றி Viya Pathy
Deleteதொடர வாழ்த்துகள்.....
ReplyDeleteநன்றி வெங்கட்
Deleteவெகு சீக்கிரம் 400 வது பதிவைத் தொடப்போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete