ரொம்ப நாளா நான் இந்த மாதிரி பதிவு எழுதனும் நினைச்சிட்டு இருந்தேன். ஏனோ எழுதல. தீஷீவின் வளர்ச்சி அவள் வார்த்தைகளிலும், குறும்புகளிலும் தெரிகிறது.
1. ரூமில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தாள். ஹாலிருந்து "தீஷீ வா" என்றேன். பதிலில்லை. மறுபடியும் கூப்பிட்டேன். பதிலில்லை. கூப்பிடுவதை நிறுத்திவிட்டேன். கோபமாக இருக்கேன் என்று நினைத்தாளோ என்னவோ, "அம்மா வா" என்றாள். நான் பதில் சொல்லவில்லை. "ஒரு தடவை சொன்னா கேட்கனும், இங்க வா" என்றாள்.
2. "நிவேதிதா(என் தம்பி மகள்) எங்கடா?".
"அவ அவ வீட்டில இருக்கா?" .
சில நொடிகளில், "அவ இந்தியாவில் இருக்கா". என்றாள்.
எனக்கு ஆச்சரியம். "நீ எங்க இருக்க?".
"நான் பார்சிப்பன்னில (எங்க ஊர்) இருக்கேன்".
"உனக்கு பார்சிப்பன்னி பிடிச்சிருக்கா?"
பிடிச்சிருக்கு என்பது போல தலையை ஆட்டினாள்.
"வேற என்ன பிடிக்கும்?"
"டாட்டா போக பிடிக்கும். லைப்ரேரி போக பிடிக்கும்"
என் பெண்ணுக்கு, அவள் விருப்பு வெறுப்பு செல்லத் தெரிகிறது. அவள் வளர்கிறாள்.
Games to play with 3 year old without anything
2 years ago
:))))))))
ReplyDelete. "ஒரு தடவை சொன்னா கேட்கனும், இங்க வா" என்றாள்.
சொன்னா கேளுங்க தீஷு அம்மா.