நேற்று 80F வெயில் அடித்தது. தண்ணீர் மற்றும் ஐஸ் வைத்து விளையாடுவது எப்பொழுதும் குழந்தைகளுக்குப் பிடித்தமான ஒன்று. இந்த வெயிலில் கேட்கவா வேண்டும். சம்முவிற்கு ஐஸ் கட்டிகள் கொடுத்து விளையாட வைத்தேன். ஐம்புலனங்களில் ஒன்றான "தொடுதல்" உணர்ச்சி மூலம் புலன் சார்ந்த கற்றலுக்கு ஐஸ் ஏற்றது.
எவர்சிலவர் பாத்திரம் எளிதில் குளிர்ந்து விடும் என்பதால் விளையாடுவதற்கு எவர்சிலவரைத் தேர்ந்தெடுத்தேன். தண்ணீரை வெறும் ஒரு மணி நேரம் மட்டும் ஃப்ரீசரில் வைத்தேன். அதனால் ஐஸ் எளிதில் உருகுவதற்கு ஏற்றதாக இருந்தது. முதலில் இரண்டு கட்டிகள் மட்டும் கொடுத்தேன். அவை கரைந்தவுடன் அவளாகவே ட்ரெயிலிருந்து மீதமிருந்த அனைத்தையும் எடுத்துக் கொண்டாள். இரண்டு பாத்திரங்கள் கொடுத்தவுடன் ட்ரான்ஸ்பரிங்(Transferring) செய்தாள். அரைமணி நேரம் விளையாட்டு நீண்டது.
|
எடுக்க நல்லாயிருக்கே |
|
"G"old.... |
|
இரண்டு கையிலும் எடுக்கலாம் |
|
ஈசியா மாற்றலாம் |
டிஸ்கி : நேற்று இரவு சற்று இருமினாள். ஐஸ் கொடுத்தனால் தான் என்று நான் பயந்ததை இங்கு சொல்லியே ஆக வேண்டும்.
செல்லத்திற்கு என் வாழ்த்துக்கள்....
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனபாலன்..
Delete///நேற்று இரவு சற்று இருமினாள். /// GOLD-யை கவனிக்கவும்...
ReplyDeleteநேற்று காய்ச்சலும் சேர்ந்து கொண்டது. கவனித்துக் கொண்டிருக்கிறோம்.நன்றி..
Deleteதண்ணீர் என்றால் எல்லா குழந்தைகளுக்கும் ரொம்பவும் பிடிக்கும். என் பிள்ளைக்கு காபி பில்டர், ஒரு டம்ப்ளர் தண்ணீர் கொடுத்துவிட்டால் மணிக்கணக்கில் விளையாடுவான். ஐஸ் கொடுத்ததில்லை.
ReplyDeleteகுழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள்.
நன்றி ரஞ்சனி அம்மா
Delete:-)) பார்க்க பார்க்க அழகா இருக்கு,தியானா!!
ReplyDeleteநன்றி முல்லை
Deleteஅழகு தியானா..ஐஸ் fishing எப்பொழுதும் அலுப்பதில்லை பிள்ளைகளுக்கு...நல்ல ஆராய்ச்சி செய்துவிட்டாள்..உடம்பு சரியாகி விடும் கவலைப்படாதே..பார்த்துக்கொள்.
ReplyDeleteநன்றி கிரேஸ்
Delete