நேற்று (08/05/2013) தீஷுவிற்கு பிறந்த நாள். இந்த முறை அவளுக்குத் தெரியாமல், அவள் தோழிகளை அழைத்து கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தோம்.
நண்பர்களின் பெற்றோர்களுக்கு ஒரு வாரம் முன்பு மின் அழைப்பிதழ் அனுப்பி, குழந்தைகளிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். இரண்டு குழந்தைகள் தவிர அனைவரும் தீஷுவின் பள்ளியில் தான் படிக்கின்றனர். பள்ளியிலிருந்து நாங்களே குழந்தைகளை அழைத்து வந்து விட்டோம். அனைவரும் வருகின்றனர் என்றவுடனே, தீஷுவிற்கு தெரிந்து விட்டது. வேறு யார் வருகிறார்கள், இப்பவே வீட்டிற்கு போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வந்தாள்.
அவள் பள்ளிக்குச் சென்றவுடன் வீட்டை அலங்கரித்து வைத்திருந்தோம். வந்தவளுக்கு ஆச்சரியம். You are the best Mom என்று கட்டிக் கொண்டாள். சாப்பிட்டு முடித்தவுடன் அனைவரும் சேர்ந்து ஓவியங்கள் செய்தோம். வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று பேப்பரில் செய்யாமல், கான்வாஸில் செய்தோம். ஐந்து முதல் ஒன்பது வயது வரை குழந்தைகள் இருந்ததால், அனைவரும் செய்ய எளிதான ஓவியமாக இருக்க வேண்டும் என்று யோசித்திருந்தேன்.
முன்பே நாங்கள் செய்திருந்த ஓவியம் தான்.
ஓவியம் செய்யும் முறை
தேவையானப் பொருட்கள்:
1. கனமானப் பேப்பர் அல்லது கான்வாஸ்
2. டேப் ஏதாவது ஒரு வகை
3. பெயிண்ட்
செய்முறை :
டேப்பை பேப்பரில் நமக்குப் பிடித்த முறையில் ஒட்டி டிஸைன்கள் உருவாக்க வேண்டும். பின் முழு பேப்பரில் பெயிண்ட் செய்ய வேண்டும். பெயிண்ட நன்றாக காய்ந்த பின் டேப்பை எடுத்து விட வேண்டும். பெயிண்ட் டேப்பினுள் செல்லாமல், நாம் ஒட்டின டிஸைன் மட்டும் பேப்பரின் ஒரிஜினல் கலரில் இருக்கும்.
குழந்தைகள் விரும்பி செய்தனர். கிட்டத்தட்ட அனைவரும் தன் பெயரின் முதல் எழுத்தை டிஸைனாக வரைந்தனர். ஒரு குழந்தை, தன் முதல் எழுத்தையும், தன் தம்பியின் முதல் எழுத்தையும் எழுதி நெகிழ வைத்தது. ஒரு குழந்தை, மதர்ஸ் டேக்கு, தன் தாய்க்கு ஓவியம் செய்தது. அனைவரும் சிரித்து, பேசி மகிழ்ந்து செய்தனர். தீஷுவிற்கு வீட்டில் குழுவில் செய்வது இது தான் முதல் முறை.
அனைவரும் தாங்கள் செய்த ஓவியத்தைச் செல்லும் பொழுது எடுத்துக் கொண்டனர். மேலும் பெயிண்ட், பிரஸ் மற்றும் பரிசளித்தோம்.
This is the best Birthday என்றாள் தீஷு அனைவரும் சென்றப்பின். பிறந்த நாள் வாழ்த்துகள் கண்ணம்மா!!!
நண்பர்களின் பெற்றோர்களுக்கு ஒரு வாரம் முன்பு மின் அழைப்பிதழ் அனுப்பி, குழந்தைகளிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். இரண்டு குழந்தைகள் தவிர அனைவரும் தீஷுவின் பள்ளியில் தான் படிக்கின்றனர். பள்ளியிலிருந்து நாங்களே குழந்தைகளை அழைத்து வந்து விட்டோம். அனைவரும் வருகின்றனர் என்றவுடனே, தீஷுவிற்கு தெரிந்து விட்டது. வேறு யார் வருகிறார்கள், இப்பவே வீட்டிற்கு போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வந்தாள்.
அவள் பள்ளிக்குச் சென்றவுடன் வீட்டை அலங்கரித்து வைத்திருந்தோம். வந்தவளுக்கு ஆச்சரியம். You are the best Mom என்று கட்டிக் கொண்டாள். சாப்பிட்டு முடித்தவுடன் அனைவரும் சேர்ந்து ஓவியங்கள் செய்தோம். வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று பேப்பரில் செய்யாமல், கான்வாஸில் செய்தோம். ஐந்து முதல் ஒன்பது வயது வரை குழந்தைகள் இருந்ததால், அனைவரும் செய்ய எளிதான ஓவியமாக இருக்க வேண்டும் என்று யோசித்திருந்தேன்.
முன்பே நாங்கள் செய்திருந்த ஓவியம் தான்.
ஓவியம் செய்யும் முறை
தேவையானப் பொருட்கள்:
1. கனமானப் பேப்பர் அல்லது கான்வாஸ்
2. டேப் ஏதாவது ஒரு வகை
3. பெயிண்ட்
செய்முறை :
டேப்பை பேப்பரில் நமக்குப் பிடித்த முறையில் ஒட்டி டிஸைன்கள் உருவாக்க வேண்டும். பின் முழு பேப்பரில் பெயிண்ட் செய்ய வேண்டும். பெயிண்ட நன்றாக காய்ந்த பின் டேப்பை எடுத்து விட வேண்டும். பெயிண்ட் டேப்பினுள் செல்லாமல், நாம் ஒட்டின டிஸைன் மட்டும் பேப்பரின் ஒரிஜினல் கலரில் இருக்கும்.
அனைவரும் தாங்கள் செய்த ஓவியத்தைச் செல்லும் பொழுது எடுத்துக் கொண்டனர். மேலும் பெயிண்ட், பிரஸ் மற்றும் பரிசளித்தோம்.
This is the best Birthday என்றாள் தீஷு அனைவரும் சென்றப்பின். பிறந்த நாள் வாழ்த்துகள் கண்ணம்மா!!!
தீஷுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன்..
Deleteதீஷூவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteகுழந்தைகளின் கைவண்ணம் அருமை.
/You are the best Mom / உண்மை. தங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்:)!
நன்றி மேடம்..
Deleteஅருமையான பிறந்தநாள் கொண்டாட்டம். உனக்கும் தீக்ஷுவிற்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி கிரேஸ்
Deleteபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தீஷு
ReplyDeleteநன்றி அகிலா
Deleteதீஷூவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteசிறப்பான பிறந்த நாள் கொண்டாட்டம்.....
ReplyDeleteஉங்கள் மகள் தீஷுவிற்கு மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
நன்றி வெங்கட்
Delete