Monday, May 6, 2013

புள்ளிக‌ள்

புள்ளிக‌ள் இணைத்து கோல‌மிடலாம். புள்ளிக‌ள் ம‌ட்டுமே வைத்து ஓவிய‌ம்? Pointillism என்கிற‌ ஓவிய‌ முறை புள்ளிக‌ள் ம‌ட்டுமே வைத்து ஓவிய‌ங்க‌ள் வ‌ரைவ‌தாகும். கூகிளில் தேடிப் பார்த்தால் சில‌ ஓவிய‌ங்க‌ள் பிர‌மிக்க‌ வைக்கின்ற‌ன‌.

முன்பு நாங்க‌ள் Ear buds(காதில் அழுக்கு எடுக்க‌ உத‌வுவ‌து) கொண்டு இந்த‌ முறையில் ஒரு ஓவிய‌ம் வ‌ரைந்திருக்கிறோம். அதைப் ப‌தியவில்லை என்று நினைக்கிறேன். இப்பொழுது நாங்க‌ள் க்ரையான் கொண்டு செய்தோம்.



தேவையான‌வை :

1. ப‌ழைய‌ க்ரையான் (மேலுள்ள‌ பேப்பரை எடுத்து விட‌ வேண்டும்)

 2. விள‌க்கு அல்ல‌து மெழுகுவ‌ர்த்தி

செய்முறை :

1. ஒரு பேப்ப‌ரில்  பென்சிலில் ஒரு ஓவிய‌த்தை வ‌ரைந்து கொண்டோம்.

2. க்ரையானை தீயில் (விள‌க்கு அல்ல‌து மெழுகுவ‌ர்த்தி) காட்டி உருக‌ச் செய்து, வ‌டியும் க்ரையானில் (புள்ளியில்) ஓவிய‌ம் செய்தோம்.

 3. மிக‌வும் எளிது. ஆனால் ச‌ரியான‌ நேர‌த்தில் க்ரையானைப்  பேப்ப‌ர் மேல் கொண்டு செல்ல‌ வேண்டும். அது ப‌ழ‌குவ‌த‌ற்கு சிறிது நேர‌ம் எடுத்த‌து.



தீ, பேப்பர் அருகில் இருப்ப‌தால், க‌வ‌ன‌ம் மிக‌வும் தேவை. நாம் குழ‌ந்தையின் அருகில் முழு நேர‌மும் இருக்க‌ வேண்டும். ந‌ல்ல‌தொரு அனுப‌வ‌ம்.

தீஷு ஸ்கேலினால் அள‌க்க‌ மிக‌வும் சிர‌மப்ப‌ட்டாள். அத‌னால் ஒரு இன்ச் ச‌துர‌ங்கள் உருவாக்க‌ச் செய்தேன். கோடுக‌ள் இணையும் இட‌ங்க‌ளில் ஸ்டிக்க‌ர் ஒட்ட‌ச் சொன்னேன். ஒன்று விட்டு ஒன்றில் ஒட்ட வேண்டும்.


ஸ்கேல் உப‌யோக‌ப் ப‌ழ‌க்கிய‌ மாதிரியும் ஆயிற்று, அவ‌ளுக்கு ஒரு ஆர்ட் ஒர்க் செய்த‌ திருப்தியும் உண்டாகிற்று.



6 comments:

  1. அழகு... ஆனால் நீங்கள் சொன்னது போல் கவனமும் தேவை... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ந‌ன்றி திண்டுக்க‌ல் த‌னபால‌ன்..

      Delete
  2. வெகு நேர்த்தியாக வந்துள்ளது. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ந‌ன்றி ராம‌லக்ஷ்மி மேட‌ம்...

      Delete
  3. அருமை தியானா! நாங்கள் மெழுகுவர்த்தி கொண்டு செய்தோம்..1,2 எண்ணிக்கொண்டு மெழுகுவர்த்தியில் காட்ட வேண்டும், இரண்டு புள்ளி படத்திற்கு இடவேண்டும்..இப்படியே செய்தோம். சிறியவனுக்கு மட்டும் சிறிது சிரமம், மெழுவர்த்தியை அணைத்துக்கொண்டே இருந்தான். படங்களை அனுப்புகிறேன்.
    //ஸ்கேல் உப‌யோக‌ப் ப‌ழ‌க்கிய‌ மாதிரியும் ஆயிற்று, அவ‌ளுக்கு ஒரு ஆர்ட் ஒர்க் செய்த‌ திருப்தியும் //-நல்ல சிந்தனை, அருமை!

    ReplyDelete
    Replies
    1. ந‌ன்றி கிரேஸ்..ந‌ல்ல‌ உத்தி.உன் ப‌டங்க‌ளையும் ப‌கிரு..

      Delete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost