Tuesday, May 7, 2013

நாய் ப‌டும் பாடு

தீஷுவிற்கு வ‌ரும் வெள்ளி அன்று த‌மிழ்ப் ப‌ள்ளியில் தேர்வு. ஆண்டு முழுவ‌தும் ப‌டித்த‌துக் கேட்க‌ப்ப‌டும் என்ற‌ன‌ர். மாட‌ல் கேள்வித் தாள் இருந்த‌து. இதிலிருந்து Dictation வார்த்தைக‌ள் கொடுக்க‌ ஆர‌ம்பித்தேன். இந்த‌ வ‌ருட‌த்தில் ஏற்கென‌வேப் ப‌டித்திருந்த‌ வார்த்தைக‌ள் தான் என்ப‌தால், அவ‌ளைப் ப‌டிக்காம‌ல் எழுதச் சொன்னேன்.


முத‌ல் வார்த்தை "ஏன்". ர‌ன் என்று எழுதினாள். இறுதியில் திருத்திக் கொள்ள‌லாம் என்று அடுத்த‌ வார்த்தை "ஓட‌ம்" என்று எழுத‌ச் சொன்னேன்."ஓ" எப்ப‌டி எழுத‌ வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தாள். உயிர் எழுத்துக்க‌ளை ஒரு முறை எழுதினால் நினைவிற்கு வ‌ரும் என்றேன். அவ‌ளும் எழுத‌த் தொட‌ங்கினாள்.

"ஊ" க்குப் பிற‌கு எழுத‌த் தெரிய‌வில்லை. நான் ஒரு முறை எழுதிக் காட்டினேன். "ஒ" எப்ப‌டி எழுத‌ வேண்டும் என்று சுத்த‌மாக‌ ம‌ற‌ந்திருந்தாள். கையைப் பிடித்துப் ப‌ழ‌க்கும் நிலையில் இருந்தாள்.

 இது போன்ற‌ ச‌ம‌ய‌த்தில் என் கூட‌ப் பிற‌ந்த கோப‌ம் வ‌ரும். ஆனால் தீஷுவிற்கு அது குடுக்க‌ப் போகும் நீண்ட‌ கால‌ ப‌திப்பு தெரியும் என்ப‌தால்,முத‌லில் அட‌க்க‌ப் பார்ப்பேன், இறுதியில் அந்த‌ இட‌த்தை விட்டு ந‌க‌ர்ந்து விடுவேன். 10 நிமிட‌ங்க‌ள் க‌ழித்து நான் திரும்ப‌வும் வ‌ந்த‌வுட‌ன், மீண்டும் ஆர‌ம்பிப்போம். அப்பொழுது நான் கோப‌த்தை அட‌க்கும் நிலையில் இருந்தேன். ஒரு வ‌ழியாக‌ தீஷு உயிர் எழுத்துக்க‌ளை எழுதி முடித்தாள்.

பார்க்காம‌ல் மீண்டும் ஒரு முறை எழுத‌ச் சொன்னேன். அ என்று எழுதி மேலே கோடு போட்டாள் ‍ ஹிந்தி எழுதுவ‌து போல். அப்பொழுது தான் புரிந்த‌து. அவ‌ளைத் த‌மிழும் ஹிந்தியும் க‌லந்து க‌ட்டி அடித்துக் கொண்டிருப்ப‌து. "ஏன்" என்ப‌த‌ற்கு ஏன் ர‌ன் என்று எழுதினாள் என்றும் புரிந்த‌து. திருத்தினேன். தீஷுவின் முக‌த்தில் லேசான டென்ஷ‌ன். வ‌ருத்த‌மாக இருந்த‌து.

பார்க்காம‌ல் எழுதி முடித்த‌வுட‌ன், மீண்டும் Dictation ஆர‌ம்பித்தோம். இந்த‌ முறை "அந்த‌" வார்த்தை வ‌ந்த‌து - நாய். தீஷுவும் எழுதினாள். ந‌lய் என்று. த‌மிழ் ந‌டுவில் ஹிந்தி துணைக்கால். பார்த்த‌வுட‌ன் என‌க்குக் கோப‌ம் ம‌றைந்து, சிரிப்பு வ‌ந்த‌து. சிரித்த‌வுட‌ன் தீஷுவிற்கு, அழுகை வ‌ந்து விட்ட‌து. அப்புற‌ம் அவ‌ளை ச‌மாதானப்ப‌டுத்தி, கொஞ்சி மீண்டும் எழுத‌த் தொட‌ங்கினோம். ஒரு சிறு சிரிப்பு எங்க‌ள் இறுக்க‌த்தை அக‌ற்றிவிட்ட‌து.

உண்மையாக‌வே அந்த‌ "நlய்" அங்கிருந்த‌ இறுக்க‌த்தை த‌ளர்த்திய‌து. ந‌ன்றிக‌ள்..

10 comments:

  1. நல்ல நுணுக்கமான ரசனை உங்களுக்கு...!

    ReplyDelete
  2. இது போன்ற‌ ச‌ம‌ய‌த்தில் என் கூட‌ப் பிற‌ந்த கோப‌ம் வ‌ரும். ///பவம் அந்த குழந்தை தமிழும் ஹிந்தியும் ஒரே நேரத்தில் திணித்தால் எப்படி?

    ReplyDelete
    Replies
    1. உண்மை க‌வியாழி க‌ண்ண‌தாச‌ன்.. ஆனால் எங்க‌ளுக்கு வேறு வ‌ழியில்லை. த‌மிழ் வ‌குப்புக்கு வார‌ம் ஒரு முறை அரை ம‌ணி நேர‌ம் தான் போகிறாள். வீட்டில் தின‌மும் ப‌டிக்கும் அவ‌சியம் இல்லை. ஹிந்தி வீட்டில் சொல்லிக் கொடுப்ப‌து தான். த‌மிழ் தேர்வுக்குப் ப‌டிக்கும் பொழுது இர‌ண்டும் குழ‌ப்புகிற‌து. த‌மிழ் தாய் மொழி அறிந்து கொள்ளச் சொல்லித் தர‌ வேண்டியுள்ள‌து. ஹிந்து பெங்க‌ளூர் வ‌ரும் தேவைப்ப‌டும் என்ப‌தால்..பாவ‌ம் குழ‌ந்தை..அறிந்தே இவ்வாறு செய்கிறோம்..

      Delete
  3. ஒரே சமயத்தில் இரண்டு மொழிகள்.... குழந்தைக்குக் கஷ்டம் தான்....

    ந|ய் - நானும் ரசித்தேன்.... எனது நண்பரின் மகளொருத்தி சிவ சிவ என கோவிலில் எழுதியிருந்ததை கஷ்டப்பட்டு ஹிந்தி போல படித்தாள்.... Chiv Chiv என....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வெங்க‌ட்.. சிர‌ம‌மாக‌த் தான் இருக்கிற‌து. ந‌ன்றி உங்க‌ள் வ‌ர‌வுக்கு!!!!

      Delete
  4. கோபம் கூட - தவறு செய்கிறோம் என்று அவர்களுக்கு தெரிந்துள்ளது... அதை விட சிரிப்பு - கிண்டல் என்று புரிந்து கொண்டுள்ளார்கள்...

    ReplyDelete
    Replies
    1. உண்மை த‌னபால‌ன்!!குழ‌ந்தைக‌ளுக்கு எல்லாம் தெரியும். ந‌ன்றி உங்க‌ள் வ‌ர‌வுக்கு..

      Delete
  5. தலைப்பும் பகிர்வும் அருமை:). இரசித்தேன். ஆனால் பாவம் குழந்தைகள். ஒரே நேரத்தில் இரண்டு மொழி கற்கும் போது வருகிற குழப்பம். கர்நாடகத்தில் 3வது மொழி நான்காம் வகுப்பிலிருந்தே ஆரம்பம். இன்னொரு பக்கம் சிறிய வயதிலிருந்து ஆரம்பிப்பதே நல்லதென்றும் சொல்கிறார்கள். எது சரி தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ராம‌ல‌க்ஷ்மி மேட‌ம்.. பெங்க‌ளூர் வ‌ருவ‌த‌ற்கு முன் ஹிந்தி ஓர‌ள‌வு தெரிந்தால் தான் அவ‌ளால் இன்னொரு மொழி ஐந்தாம் வ‌குப்பிலிருந்து க‌ற்க‌ முடியும். எங்க‌ள் வச‌திக்கு குழ‌ந்தையை அல‌க்க‌ழிக்கிறோம்!!

      Delete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost