மணல் மிருதுவாக இல்லாமல் சற்று சொரச்சொரப்பாக இருக்கும். தொடுதல் உணர்ச்சிக்கு ஏற்றது. அது ஒரு sensorial ஆப்ஜெக்ட்.
தீஷு எழுத ஆரம்பித்த பொழுது, அவளுக்கு ரவை மூலம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அப்பொழுது மணலும் கிடைக்கவில்லை. மேலும் சிந்தும் மணலை எடுத்துப் போடுவது அங்கு கஷ்டம். இப்பொழுது அந்த இரு பிரச்சினைகளும் இல்லாததால் மணல் தட்டு செய்யலாம் என்று நினைத்தேன்.
நானும் தீஷுவும் எங்கள் அப்பார்ட்மெண்ட் பார்க்க்குச் சென்று மணல் எடுத்து வந்தோம். அந்த மணலை சல்லடைக் கொண்டு சலித்தோம். தீஷுவிற்கு தான் செய்ய வேண்டும் என்று ஆசை. ஆனால் முதல் நாள் மழை பெய்திருந்ததால் மணலின் ஈரம் கனத்தைக்கூட்டி விட்டது. அவளால் செய்ய முடியவில்லை. பின்பு சிந்திய மணலை சுத்தம் செய்து (எத்தனை மாண்டிசோரி பயிற்சிமுறைகள்), மீதி மணலை மீண்டும் பார்க்கில் போட்டு, சல்லடையைச்சுத்தம் செய்தோம். அரை வாலி தண்ணீரையும் சல்லடையையும் கொடுத்து விட்டேன். தீஷுவிற்கு அரைமணி நேரம் பொழுது போனது. அவளுக்குச் சளித் தொந்தரவு அதிகம் என்பதால், அப்பா சுத்தம் செய்தது போதும் என்று வாங்கி வைத்து விட்டார். இல்லையென்றால் இன்னும் சில மணி நேரங்கள் விளையாண்டு இருப்பாள்.
அந்த மணல் தட்டில் எழுதிப் பழகினோம். தீஷுவின் ஸிலபஸ் படி அவளுக்கு cursive writting ஆரம்பித்துவிட்டனர். a, c, t முதலியன எழுதுகிறாள். மீண்டும் மீண்டும் எழுதுவதற்கு மணல் உபயோகமாக இருக்கிறது. எழுத்துகள், வார்த்தைகள், படங்கள் என்று அழித்து அழித்து எழுதுவதற்கு மணல் தட்டு வசதியாக இருக்கிறது.
ஒரு பக்கம் எழுதிய தாள்கள் தான் இதுப் போன்றவைகளுக்கு நாங்கள் உபயோகப்படுத்தினாலும் எழுதப்பழகும் பொழுது நிறைய தாள்கள் வீணடிப்போம். இந்த முறையில் வீணடித்தல் தடுக்கப்படுகிறது. மணல் தட்டு இல்லையென்றாலும் சிலேட்டிலாவது இனிமேல் எழுத வைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஏதோ பூமித்தாய்க்கு நம்மால் முடிந்த உதவி.
ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க.
ReplyDeleteஎன் பையனுக்கும் இது போல சொல்லிக் கொடுக்க முயற்சிக்கிறேன்.