நம் உடம்பைப் பற்றி திஷுவிற்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பித்து இருக்கிறேன். இது கை ரேகைப் பற்றி படித்த பொழுது செய்தது. கைரேகைப்பற்றி முன்பே தீஷுவிற்கு சொல்லியிருக்கிறேன். ஆனால் அப்பொழுது பெயிண்ட் கொண்டு செய்திருந்ததால், நன்றாகத் தெரியவில்லை. தீஷுவின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்டாப் ஸெட்(Stamp set) பரிசாக அவளுக்குக் கொடுத்தோம். அதிலுள்ள இங்க் பாட் கொண்டு கை ரேகை எடுக்கலாம் என்று முன்பு போல் தீஷுவின் கைகளை வரைந்து கொண்டோம். ஒவ்வொரு விரலையும் இங்க்கில் தொட்டு, வரைந்த விரலில் வைத்தோம். இந்த முறை பரவாயில்லாமல் தெரிந்தது.
வேறு ஒரு முறையில் முயற்சித்தோம். இது சிறு வயதில் எங்கள் பள்ளியில் செய்தது.
1. பென்சிலால் சற்று அடர்த்தியாக வரைந்து கொள்ள வேண்டும்
2. அதை நம் விரலால் அழுத்தித் தொட வேண்டும்
3. அந்த விரலை செல்லோ டேப்பின் (cellotape) பிசுப்பிசுப்பு பக்கத்தில் வைக்க வேண்டும்.
4. ஒரு வெள்ளைத்தாளில் அந்த செல்லோ டேப்பை ஒட்டினால் அதில் ரைகை நன்றாக தெரியும்.
இப்பொழுது தீஷுவிற்கு கை ரைகைப்பற்றி ஓரளவு புரிந்திருக்கிறது.

இந்த பென்சில்-செல் டேப் கம்-டெக்னிக் - நல்ல க்ரியேட்டிவிட்டி..எப்படி கண்டுபிடிச்சீங்க?
ReplyDeleteநாங்களும் டிரை பண்றோம்...
இங்க்பேட் கைநாட்டு - நல்ல டைம்பாஸ்...:)))