வாசிக்கப்பழகுவதற்கும், வார்த்தை உருவாக்கப்பழகுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. வார்த்தை உருவாக்கப் பழக்குவதற்கு மாண்டிசோரியில் உபயோகப்படுத்தப்படும் முக்கிய கருவி - moveable alphabets. எழுதத் தெரியாத குழந்தை முதலில் வார்த்தை உருவாக்கப்பழகினால் இது மிகவும் உபயோகமாக இருக்கும். அனைத்து எழுத்துக்களும் தனித்தனி பிரிவுகளில் அடுக்கப்பட்டு இது போல் இருக்கும்.
தீஷுவிற்கு வார்த்தை உருவாக்கப் பழக்கிக்கொண்டு இருக்கிறேன். வார்த்தைகள் உருவாக்கும் பொழுது எழுதவும் சொன்னால் இரு செயல்களில் கவனம் இருப்பதால் கடினமானதாக இருக்கும் என்று எண்ணி மாக்னெட்டிக் எழுத்துக்கள் உபயோகப்படுத்திக் கொண்டு இருந்தோம். ஆனால் moveable alphabets செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். எதில் எழுத்துக்களை சேமிப்பது என்று தெரியவில்ல. Ferrero Rocher காலி டப்பாவைப் பார்த்தவுடன், எழுத்துக்களை வைப்பதற்கு நல்ல இடம் கிடைத்து விட்டது என்று தோன்றியது.
வலையிலிருந்து பிரிண்ட்-அவுட் எடுத்து, எழுத்துக்களை கத்தரித்து வைத்து விட்டேன். ஆனால் இதில் எழுத்துக்களை தேடுவது தீஷுவிற்கு கடினமானதாக இருக்கிறது. புதிதாக இருந்த அன்று 3 - 4 வார்த்தைகள் உருவாக்கினாள். அதன் பின் உபயோகப்படுத்தவில்லை. தொடர்ந்து உபயோகப்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
Games to play with 3 year old without anything
2 years ago
No comments:
Post a Comment