நான் : "சாப்பாட வேஸ்ட் பண்ணக்கூடாது, நிறைய பேரு சாப்பாடு கிடைக்காம இருக்காங்க"
தீஷு : "அவுங்க எல்லாம் டேய்லி ஹோட்டலில் போய் சாப்பிடுவாங்களா"
நான் : "ஹோட்டல்ல சாப்பிட மாட்டாங்க.. அவுங்க கிட்ட பணம் இல்லை.. பசியோடையே இருப்பாங்க"
தீஷு: "ஏன் பணம் இல்லை.. அவுங்க பாண்ட் (Pant) போடலையா? (அப்பா பர்ஸை பாண்ட் பாக்கெட்டில் வைத்திருப்பார்)
நான் : "இல்லை..அவுங்க கிட்ட கொடுக்க பணம் இல்லை"
தீஷு : "ஏன் அவுங்க பாங்க்கிலிருந்து எடுத்துக்கொள்ளலாமே?"
தீஷுவிற்கு உணவு வீணாக்கக்கூடாது என்று புரியவைக்க ஆரம்பித்த உரையாடல் இவ்வாறு நீண்டு கொண்டே போனது.
அப்பாவிற்கு தீஷுவிற்கு பாங்க் பற்றியும், பணத்தின் அருமையையும், நமக்கு பணம் கிடைக்கும் வழியையும் ஒரு விளையாட்டு மூலம் சொல்லிக் கொடுக்கலாம் என்று தோன்றியது.
ஒரு காலெண்டர், கண்ணாடி கற்கள் போன்றவை எடுத்துக் கொண்டனர். ஒரு மாதம்
வேலை செய்தால் தீஷுவிற்கு ஐந்து கற்கள் சம்பளம். அதைப் பாங்க்கில் போட்டு வைத்திருந்தாள். அரிசி, உடை போன்ற செலவிற்கு அதிலிருந்து எடுத்துச் செலவழித்தாள். மீண்டும் ஒரு மாதம் ஆனவுடனே அடுத்த சம்பளம் வரும், இதுவரை இருக்கும் பணத்தை வைத்தே செலவு செய்ய வேண்டும் என்று புரிந்தது.
"அப்பா, சட்டை மூணு ரூபா.. ஆனா என்கிட்ட அவ்வளவு பணம் இல்லையே" என்று வருத்தம் வேறு. வரவு, செலவோடு கணிதத்தையும் சேர்த்துக் கற்றாள்.
அன்று இரவு, பீட்ஸா வேண்டும் என்றாள். அப்பா, இது ரொம்ப காஸ்ட்லி, அவ்வளவு பணம் உன்கிட்ட இருக்கா என்றவுடன், "இல்ல, அப்புறம் வாங்கிக்கிடலாம்" என்று சொல்லி விட்டாள்.. ஆகா!!! இது கூட நல்லாயிருக்கே...
Games to play with 3 year old without anything
2 years ago
அருமைதான்ப்பா.. இதுக்குத்தான் பெரிய குட்டீஸுக்கு நெட்ல இதுபோல பணம் வச்சி விளையாடற பலகேம்ஸ் வச்சிருக்காங்க
ReplyDeleteinteresting Dhyana! வரவு செலவு பத்தி சொல்லிக்கொடுக்கறதுக்கு இது நல்ல ஐடியா!
ReplyDeleteநாங்க உண்டியல்லே சேமிக்கறது மட்டும் கொஞ்ச நாள் டிரை பண்ணோம்.. உண்டியலை உடைக்காம கவிழ்த்து எப்படி எடுக்கறதுன்னு தெரிஞ்சுக்கிட்டதுதான் மிச்சம்! :-)
தீஷுவிற்கு விருப்பமிருப்பதில்லை என்பதால் நெட் கேம்ஸ் இன்னும் எங்க வீட்டில் பிரபலம் இல்லை முத்துலெட்சுமி.. வரவுக்கு நன்றி
ReplyDelete:-)).. நன்றி முல்லை
Dhyana! Earlier I used to read Mullai's blogs. I was regular reader. But hasnot posted any comments yet. From that I got your blog's link. I am very much attracted towards the activities you and Dheekshu do.
ReplyDeleteI am an young mother of 8months old daughter. Feeling happy to join this club. Hope I get inspired in raising child from you and Mullai.
Mullai! A hi to you as well.
regs
super!!!!!
ReplyDeleteமிகவும் நல்ல மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பாடம்... நான் உங்கள் blog-ஐ தொடர்ந்து வாசிக்கிறேன். நீங்கள் சொல்லி தரும் முறைகள் மிகவும் அருமையாக உள்ளன.
ReplyDelete