கலரைத் தொட்டு அந்த கலர் என்ன என்று கண்டுபிடிக்க முடியும் என்று தீஷு உறுதியாக இருந்தாள். சென்னையில் மின்சார இரயில் டிக்கெட் ஆறில் மூன்று ஒரு நிறமாகவும், மூன்று சற்று வித்தியாசமாகவும் இருந்தன. கண்ணை மூடிக்கொண்டு கலர் அடிப்படையில் பிரி என்றவுடன் பிரித்தும் விட்டாள். அவள் பார்த்த மாதிரி தெரியவில்லை. டிக்கெட் தொடுவதற்கும் சற்று வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும். அப்பொழுது பை அடுக்கிக் கொண்டு இருந்தேன். ஊருக்குக் கிளம்பும் அவசரம் வேறு. புரிய வைக்க முடிய நேரமில்லை.
பெங்களூர் வந்தவுடன் அவள் ஸ்ஷேப் ஸாட்டர்ஸ் எடுத்துக் கொண்டேன். அதில் நான்கு வண்ணத்தில் நான்கு வடிவங்கள் ஒரு பையில் வைத்து விட்டேன். அதே நான்கு வடிவங்கள் அவள் அருகில் வைத்து விட்டு, ட்ரையாங்கிள் என்றவுடன் முக்கோணம் எடுத்துக் கொடுத்தாள். அவள் அருகில் இருந்த முக்கோணத்திற்கு அருகில் வைக்கச்சொன்னேன். செய்தாள். இவ்வாறு நான்கு வடிவங்களும் முடித்தவுடன், அவள் அருகிலிருந்த எட்டையும் பையில் போட்டேன். இப்பொழுது ஊதா சதுரம் என்றவுடன், ஒரு சதுரத்தை எடுத்தாள். பச்சை சதுரம் (நல்ல வேளை.. ஊதா வரவில்லை..) மீண்டும் கையை பையில் விட்டு ஊதா எடுக்க முயன்றாள். கலரைத் தொட்டுப்பார்த்து எடுக்க முடியாது என்றேன். லேசாக தலையை அசைத்தாள்.
மீண்டும் பில்டிங் செட் வைத்து விளையாடும் பொழுதும் இதேப் பேச்சு. உணர்தலில் கலர் கண்டுபிடிக்க முடியும் என்றாள். இந்த முறை நான் கண்டுபிடிக்கும் வேலையை எடுத்துக் கொண்டேன். என்னால் அதன் அளவு கண்டுபிடிக்க முடியும் ஆனால் கலர் முடியாது என்றேன். அவள் கலர் சொல்லி அந்த கலர் தான், சொல் என்றாள். எனக்குப் புரிய வைக்க முடியவில்லை.அவளால் சிலவற்றை நம்மால் செய்ய முடியாது என்பதை ஒத்துக் கொள்ள முடியவில்லை.
அப்பொழுது தான் அப்பா உதவிக்கு வந்தார். நீ எப்படி மாடிக்கு போவ என்றவுடன் படி ஏறி என்றாள். புறா எப்படி போகும் என்றவுடன் யோசித்து விட்டு, படி ஏறித் தான் என்றாள். மேலும் சில நிமிடங்கள் பேசியப்பின் புறா பறக்கும் ஆனா என்னால பறக்க முடியாது என்றாள்.
எனக்கு என்னமோ இந்தப்பேச்சு முடிந்த மாதிரி தெரியவில்லை. முயல்வது நன்று. ஆனால் முடியவே முடியாத விஷயத்தை என்னால் முடியாது என்பதை ஒத்துக்கொள்ளாமல் இருப்பது என்னைப் பொறுத்த வரை தவறு. வேறு வகையில் தீஷுவிற்கு புரியவைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
Games to play with 3 year old without anything
2 years ago
So sweet!
ReplyDeleteஎனக்கு தீஷூவின் தன்னம்பிக்கை (அசாத்திய) பிடித்திருக்கிறது. போகப்போக சரியாகிவிடுமென்று தோன்றுகிறது! :-( அல்லது :-)?!