1. தீஷுவிற்கு ஜலதோஷம் பிடித்திருந்தது. இரவு நேரத்தில் தண்ணீரில் விளையாட வேண்டும் என்றாள். என் அம்மா,
"தண்ணீல விளையாண்டா நாளைக்கு கோல்ஃட் வந்திடும்.."
"இப்பவே இருக்கு.. அப்புறம் எப்படி திரும்ப வரும்?"
2. தூங்காமல் மீண்டும் மீண்டும் வேறு கதை வேண்டும் என்று படுத்துக்கொண்டு நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தாள். அரை மணி நேரம் சொல்லியாகிவிட்டது. எனக்கோ தூக்கம். அவளை தூங்கவைப்பதற்காக நான்,
"சீக்கிரம் தூங்குடா, யார் முதல்ல தூங்குறாங்கனு பார்ப்போம்"
"தூங்கினத்துக்கு அப்புறம் யார் முதல்ல தூங்குனாங்கனு எப்படி தெரியும்?"
3. தீஷுவும் அவள் ப்ரெண்டும் பொம்மைகள் வைத்து விளையாண்டு கொண்டிருந்தனர்.
தீஷு தன் பொம்மையிடம்,
தீஷு :"அழாதடா... அம்மா வர்றேன்.."
ப்ரெண்டு : "அது அழவே இல்லை"
தீஷு : "அழலைனாலும் சும்மா அதுக்கிட்ட பேசிக்கிட்டே இருக்கனும்.. அப்பத்தான் அது பெரிசானாவுடன் நல்லா பேசும்"
யார்கிட்ட இருந்து இதெல்லாம் கற்றுக் கொள்கிறாள்.
4. தீஷுவிற்கு வீட்டுப்பாடம் கொடுத்து இருந்தனர். ஒரு கலரிங், இரண்டு பக்கம் எழுத வேண்டும். கலரிங்கும், ஒரு பக்கமும் முடித்து விட்டாள். நானே போதும், இன்னொரு பக்கத்தை நாளைக்கு எழுதிக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டேன். மறுநாள் ஆன்ட்டி இன்னொரு புக் எங்கே என்று கேட்டியிருக்கிறார்கள். நீ என்ன சொன்ன என்றதற்கு "I will do one by one only" என்றாலாம்
ஆன்ட்டி பக்கத்தில் இருந்தவரிடம் சொல்லிச் சிரித்தார்களாம். என் டீச்சரிடம் நான் இப்படி பதில் சொல்லியிருந்தால்?
Games to play with 3 year old without anything
2 years ago
/*தூங்கினத்துக்கு அப்புறம் யார் முதல்ல தூங்குனாங்கனு எப்படி தெரியும்?"*/
ReplyDeleteஎன்ன ஒரு நியாயமான கேள்வி. இரசித்தேன் தீஷுவின் குறும்த்தன(ருண)ங்களை...
வலைச்சர அறிமுகத்தால் உங்கள் தளத்திற்குள் நுழைந்தால் ஆஹா என்ன சுகம் ஒரு தந்தையின் பார்வையை கண்டதில். என் பெண் குழந்தைகளுடன் நான் 19 வருடங்களாக இப்படி ஸ்நேகமாக இருந்து வருகிறேன். அதன் சுகமே அலாதி - சம்பத்-
ReplyDelete