இன்று காலையில் ஆபிஸ் சென்று கொண்டிருந்த பொழுது கண்ட காட்சி. டிராபிக்கில் பஸ் நின்று கொண்டிருந்தது. ரோட்டில் ஏதோ வேலை நடந்து கொண்டிருந்தது. பிளாட்பாரம் சரி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஒரு பத்து வயது பையன் மண்ணை மண் வெட்டியால் எடுத்து தட்டில் போட்டுக் கொண்டிருந்தான். அருகில் ஒரு பெண் குழந்தை, தீஷு வயது இருக்கும். வேறு யாரும் அங்கு இல்லை.
அந்த நான்கு வயது குழந்தை, ஒரு பெஸ்ஸி பாட்டிலில் மண்ணை நிரப்பிக் கொண்டிருந்தது. நான் பார்க்க ஆரம்பித்த பொழுது கால் பாட்டி நிரப்பியிருந்தது. பின் கைகளால் அள்ளிப்போட்டே முழு பாட்டிலையும் நிரப்பி விட்டது. டிராபிக் ஜாம், வெயில் என சுற்றி நடந்த ஒன்றும் அதன் கவனத்தைத் திசைத் திருப்ப முடியவில்லை. அதன் கவனம் முழுவதும் பாட்டிலும், மண்ணிலும். எத்தனை விசயத்தை அக்குழந்தைக் கற்று இருக்கும். காலி பாட்டில், நிறைந்த பாட்டில், நிறைந்த பாட்டிலில் மண் போட முடியவில்லை, கை கண் ஒருங்கிணைப்பு போன்றவை..
சில நாட்களுக்கு முன் புத்தகத்தில் படித்தது. குழந்தைகளுக்கு பிறக்கும் பொழுதுதே கவனச்சிதறல் அதிகம் இருப்பதில்லை. கற்க வேண்டும் என்ற ஆவலும் அதிகம். கவன சிதறலை நாம் அதிகப்படுத்துகிறோம். குழந்தை ஆழ்ந்து ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, நாம் கிளம்ப வேண்டும் என்றால், நம் அவசரத்தை அக்குழந்தையிடம் காண்பித்து அதன் கவனத்தைச் சிதறடிப்போம். குழந்தை தனக்குப்பிடித்த ஆனால் முடிக்க முடியாத வேலையை பாதியிலேயே விட்டு விடும். எடுத்த வேலையை முடிக்க வேண்டியதில்லை என்றும் பழகுகிறது. அதனாலேயே மாண்டிசோரி பள்ளிகளில் குழந்தையை வற்புறுத்துவதில்லை. ஒரு வேலையை ஒரு குழந்தை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம். இதன் மூலம் அதன் மனதிற்கு பிடித்ததைச் செய்த திருப்தி கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சி குழந்தையின் மன வளர்ச்சிக்கு ஏற்றது.
நாம் கவனச்சிதறல் அதிகப்படுத்திவிட்டு பின்னாளில் அவர்களிடம் குறைப்பட்டு என்ன லாபம்?
Games to play with 3 year old without anything
2 years ago
It seems I shall be sharing (in Google reader) every post from Deeshu :))
ReplyDeleteJust Loved This One Too.. as always.
The best of you, Deeshu! Keep rocking.
அருமை
ReplyDeleteநன்றி விதூஷ்
ReplyDeleteநன்றி புதுகைத்தென்றல்
ippadi oru kavanamana, karisanamana, aarvamanaa, always Montessoriya relate seyyakoodiyavanga, engal natpulagathukku kedaipaangalannu enguraen...! hats off.
ReplyDelete